Home Love Part காதல் – 2

காதல் – 2

569
1
SHARE

பாகம் – 2
Dr Kamaraj

காதல் என்பது என்ன அப்படியொரு கெட்டவார்த்தையா? படுபாதக செயலா? ஏற்க தகுதி இல்லாத விஷயமா?
எது காதல்?
உண்மையானது அல்லது பொய்யானது என்று காதலில் பல வகைகள் உள்ளனவா? இவை பற்றி எல்லாம் இனி வரும் பக்கங்களில் விரிவாகப்ப பார்க்கப் போகிறோம்.

பூமியில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.ஆனால் வாழ்க்கையை ரசித்து வாழ்வது மனிதன் மட்டுமே. அதற்குக்காரணம், வாழ்வின் மீது அவனுக்கு இருக்கும் காதல். ஆண் மீது பெண்ணும் , பெண் மீது ஆணும் கொண்டுள்ள காதல்.

காதல் என்பது என்ன?

அகராதியில் காதல் என்பதற்கு கொடுக்கப்படும் அர்த்தம். ‘இன்னொரு நபர் மீது உண்டாகும் அழுத்தமான பிரியம்’ என்பது தான்.
அறிவியல் ரீதியாக பார்த்தால் , ‘காதல் என்பது பசி, தாகம் போன்ற ஓர் இயல்பான உணர்வு.’
உடலியல் ரீதியாக காதல் என்பது சுரப்பிகள் செய்யும் விளையாட்டு. ஆண்ட்ரொஜென், ஈஸ்ட்ரோஜென், அட்ரீனலின் சுரப்பிகளின் மாற்றங்கள்தான்.
உளவியல் அறிஞகர்களில் ஒருதரப்பினர், ‘காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு’ என்கிறார்கள்.
கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிளில், காதல் பல்வேறு இடங்களில் பேசப்பட்டு இருக்கிறது. ‘காதல் என்பது பொறுமை. காதல் என்பது அன்பு. காதல் என்பது பொறாமை இல்லாமை. காதல் என்பது வன்முறை இல்லாதது. அனைத்தையும் தாங்கக்கூடியது. காதல் முழு நம்பிக்கை வைப்பது.’
இந்துக்களின் நம்பிக்கையின்படி, காதல் என்பது ‘மன்மதக் கடவுள் , மனிதர்கள் மீது செய்யும் லீலைகள். கடவுளையும் காதல் மூலம் அடைய முடியும்!’ என்பதாகும்.
‘பூலோகத்தின் அனைவர் மீதும் காதலுடன் இருந்தால், அல்லாவின் அன்பைப் பெற முடியும்!’ என்கிறது இஸ்லாம்.
காதலைப் பற்றி எத்தனையோ அறிஞர்கள், ஞானிகள் மிகச் சிறப்பாகவே சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் காலம் காலமாக மனிதனுக்கு காதல் என்றல் குழப்பமாகவேதான் இருக்கிறது.
காதல் பற்றி இப்படி பல்வேறு அபிப்ராயங்கள் உள்ளன.

Dr Kamaraj

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here