Home Women Part பெண் – 2

பெண் – 2

774
2
SHARE

பாகம் – 2

Dr Kamaraj

பெண்கள் வெளி உலகத்தைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்ட பின்னர், உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும், அடுப்பூதிக் கொண்டு உள்ளறைக்குள் முடங்கிகிடைப்பதையும் அவர்கள் எதிர்த்து வெளியே வந்துவிட்டார்கள். ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கவும், விஷய ஞானங்களை அடையவும் ஆரம்பித்த பிறகு, வர்க்க பேதங்கள் குறைந்து- இரு சாரருமே வெளியிலும், அந்தரங்கத்திலும் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த முன்னேற்றத்தின் காரணமாக திருமணம் என்பது மனம் ஒத்த இரு பாலருக்கு இடையே நடக்கிற ஒப்பந்தமாக ஆகிவிட்டது. பாலின்பம் என்பது ஆணுக்கு மட்டுமே உரியதாக இல்லாமல், அது பெண்ணுக்கும் உரியது என்ற உரிமை போராட்டம் வெடிக்க ஆரம்பித்துவிட்டதால், விரைத்து கொண்டு நின்ற ஆண்கள், இப்பொது பெண்களை விரக்தியோடு வெறித்துப் பார்க்கும் நிலைக்கு வந்து நிற்கிறார்கள்.

ஆணுக்கு ஒரே ஒரு உந்துணர்வின்பமும், பெண்ணுக்கு பலமுறை உந்துணர்வினபமும்(உச்சக்கட்டம்) இருப்பது எல்லாம் அறிவியல் நிரூபித்த பிறகு, ஆண்கள் அச்ச உணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.

மனைவியை திருப்திபடுத்துவது எப்படி என்பதை அறிந்துகொள்வதை அவர்கள் அதிகமாக ஆராய ஆரம்பித்து பாலியல் சார்ந்த சாத்தியமில்லாத விஷயங்களைக் கேள்விப் பட்டு, அவ்வாறு இல்லையே, இதனால் தான் சரியான ஆண் மகன் இல்லை என்ற எண்ணத்திற்கு வந்து விடுகிறார்கள்.

மனைவியைத் திருப்திப்படுத்தும் மருந்துகள், வழிகள் போன்ற விளம்பரங்களால் உந்தப்பட்டு அவற்றைப் பயன்படுத்திப் பார்க்க அலையாய் அலைவதை கண்கூடாகக் காணலாம். இதனாலெல்லாம் பெண்களை திருப்திப்படுத்த இயலாது என்ற நிதர்சனம் தெரியும்போது சோர்ந்து போகிறார்கள்.

பெண்களும்கூட, இந்த சாத்தியமில்லாத விஷயங்களை நம்ப, இல்லாத ஒன்றை நாடிச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள். இதனால்தான், தனக்கு உரியவனாக சேர்த்துக் கொண்ட இணையை எளிதாக உதறி விட்டு அவர்கள் இன்பத்தை நாடி வேறு ஒருவரை நாடும் நிலைக்குச் சென்று விடுகிறார்கள். இது போன்ற செயல்களால் ஆண்களும் பெண்களும் இன்பத்திற்காக உருவாக்கப்பட்ட காதலின்பத்தை எவ்வாறு இன்பமாகச் கொண்டு செல்வது என்பதைத் தெரிந்து கொள்ளாமல், அவசரத்திலும், அனுபவம் இன்மையிலும் சிக்கி துன்பமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Dr Jeyarani

– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here