Home Common Health Problems பாலியல் கல்வி

பாலியல் கல்வி

355
1
SHARE

பாலியல் கல்வியை கற்பதற்கான சரியான வயது எது?

உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் பாலியல் கல்வி கற்பதற்கு சரியான வயது எது என்று குறிப்பிட முடியாது. குழந்தை பிறந்ததிலிருந்தே பெற்றோர்களும், முதியவர்களும் குழந்தைகளுக்கு இயல்பான பாலியல் விவரங்களைச் சொல்லித் தருகின்றனர். குழந்தைப் பருவத்திலிருந்து கொஞ்சம் பெரிதாக வளரும் போது அந்தக் குழந்தை தன்னுடைய பால்த் தன்மைக்கு ஏற்ப உடை அணியவும், அதற்கேற்பச் செயல் பாடுகளைச் செய்யவும் கற்றுக்கொள்கிறது. பிறகு அந்தக் குழந்தை தன்னுடைய பால் இயல்புகளுக்குத் தகுந்தவாறு அப்பாவையோ, அம்மாவையோ பின் பற்ற ஆரம்பிக்கும். இந்த வயதில் சுத்தம் சுகாதாரம் பற்றியும் சொல்லித் தருகின்றனர். ஆனால் ஒருவரின் பிறப்பு உறுப்புகளைத் தொடுவதும், கையாள்வதும் குற்றமானது என்றுக் கருத்தும் உருவாக்கி விடப்படுகிறது. அதனால் வயது வந்த பிறகும் பாலுறவு அல்லது உடலுறவு விசயத்தில் ஒரு கூச்சம் இருந்து கொண்டேயிருக்கிறது.

பாலியல் கல்வியை விடலைப் பருவம் ஆரம்பிக்கும் போதே ஆரம்பிப்பது சரியாக இருக்கும். பெரும்பாலும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் நான் எங்கிருந்து வந்தேன்? என்ற கேள்வியைக் கேட்கும். பெற்றோர்கள் இந்த கேள்விக்கு கூடுமான வரையில் நேரடியான பதிலைச் சொல்லித் தர வேண்டும். இந்தக் கேள்விக்கு பெற்றோர்கள் சரியானப் பதிலைச் சொல்லித் தரவில்லை என்றால் அந்தக் குழந்தையை அறியாமையில் வைத்திருப்பதுடன் அது தீமையாகவும் வளரும். இதை விட, அந்தக் குழந்தை இதற்கான பதிலை எங்காவது தேட முயற்சிக்கும் போது தவறான முறையில் செல்வதற்கான வாய்ப்புண்டு.

பாலியல் வன்கொடுமை சம்பந்தமான கேள்விகளை நியாயமான, நேர்மையான முறையில் கையாள வேண்டும். வன்கொடுமைக்கு ஆளானவர் பற்றியோ அல்லது வன்கொடுமை செய்தவர் பற்றியோ பயமில்லாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இப்படிச் செய்வது பாலியல் குற்றங்களை குறைக்க உதவும். ஊடகங்கள் இது விசயத்தில் பெரிதும் உதவி செய்ய வேண்டும்.
வயது வந்தவர்கள் இம்மாதிரி விசயங்களில் உதவி மற்றும் ஆலோசனை தேவைப் பட்டால் தகுந்த பாலியல் ஆலோசனை மையங்களை அணுகவும் தயங்கக் கூடாது.

– ஆசிரியர் சி.ராமலிங்கம்

1 COMMENT

  1. Good article . Actually I have aldredy benefited from your previous discussions and the health e-magazine..looking forward to read your next informative work . Thank you

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here