Home Common Health Problems மதுவைப் பற்றிய மர்மத் தகவல்கள்

மதுவைப் பற்றிய மர்மத் தகவல்கள்

1005
1
SHARE

மது.. ம(ா)து.. ம(ன)து..
Alcohol
மது அருந்துகிறவர்கள் பலரும் அந்த குற்றஉணர்வில் இருந்து விடுபட்டுக்கொள்வதற்காக, மது அருந்துவதை நியாயப்படுத்த முயற்சிப்பார்கள். அதனால் ‘உடலுக்கு கெடுதல் செய்யும் மதுவை தான் அருந்துவதில்லை என்றும், உடலுக்கு நல்லது செய்யும் மதுவை மட்டும் தான் அருந்துவதாகவும்’ சொல்வார்கள். மதுவில் நல்லது, கெட்டது என்று இருவகை இல்லை, எல்லாம் மதுதான்.
மது முதலில் இரைப்பையை அடையும். அதில் 20 சதவீதம் ரத்தத்தில் கலந்திடும் நிலையில், மீதி 80 சதவீதமும் சிறுகுடலில் போய் சேரும். சிறு குடலுக்கு ரத்தம் ஈரல் வழியாகச் செல்லும். உடலுக்கு தேவையில்லாததை வெளியேற்றுவது ஈரலின் வேலை. ஈரலுக்கு வரும் மதுவின் அளவு மிக அதிகமாகும்போது, ஈரலால் தன் பணியை செய்ய முடியாது. தடுமாறும். அப்போது அதன் செயல்பாடு சீரில்லாமல் போகும். காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

விலையை வைத்தும் ‘பிராண்’டை வைத்தும் மதுவின் தரத்தை நிர்ணயிக்க முடியாது. அந்த மதுவில் ஆல்கஹால் எந்த அளவு இருக்கிறது என்பதை கருத்தில்கொண்டே அதன் தரத்தை நிர்ணயிக்க முடியும். எவ்வளவு விலை உயர்ந்த மதுவை குடித்தாலும் அது உடலுக்கு கெடுதியைத்தான் உருவாக்கும்.
மது சில நேரங்களில் மருந்தாக பயன்படுவதாக சிலர் கூறுவது தவறான கருத்து. சில சூழ்நிலைகளில் சிலருக்கு மதுவுடன் எதையாவது கலந்து கொடுத்துவிட்டு, அதன் மூலம் உடல் வலுவடையும் என்று சிலர் நம்புவது ஆதாரமற்றது. மதுவை அப்படியே குடித்தாலும், எதனுடனாவது கலந்து குடித்தாலும், எத்தனை வயதில் குடித்தாலும், யார் குடித்தாலும் ஒட்டுமொத்தமாக அது உடலைக் கெடுக்கத்தான் செய்யும்.

மது ரத்தத்தில் கலக்கும்போது முதலில் உணர்வு நரம்புகளைத்தான் பாதிக்கும். அதனால் காலப்போக்கில் போதையை உணர முடியாத அளவுக்கு நரம்புகள் மரத்துப்போகும். அதனால்தான் பலரும் போதையின் தன்மை தெரியாமல் தடுமாறி, உளறிக்கொட்டுகிறார்கள்.
Alcohol
உடலின் உள்ளே செல்லும் மது, உடலில் பெரும்பகுதிகளை பாதிக்கும். மது அருந்துபவர்கள் அதிக அளவில் ஏப்பம் விடுவார்கள். குறட்டையால் பாதிக்கப்படுவார்கள். சுவாசத்தடை நோய்களும் அவர்களை தாக்கும். ஆல்கஹால் மூளையையும் பாதிப்பதால், காலப்போக்கில் அவர்களுக்கு நினைவாற்றலும் குறைந்து கொண்டேபோகும்.

மது செக்ஸ் மீதான வேகத்தை கட்டுப்படுத்திவிடும். முதலில் ரத்த ஓட்டம் அதிகரித்து உறுப்பு அதிக எழுச்சியடைவதுபோல் தோன்றினாலும், பின்பு ரத்த ஓட்டம் குறைந்து உறுப்பு எழுச்சி மட்டுப்படுத்தப்பட்டுவிடும். நரம்பு கட்டமைப்பையும் பாதிப்பதால், செக்ஸ் வேகம் வெகுவாக குறையும். இன்பத்தை உணரும் தன்மையும் குறைந்துபோகும்.

எல்லா மனிதர்களுக்குள்ளும் ஆண் ஹார்மோனும் உண்டு. பெண் ஹார்மோனும் உண்டு. ஆண்களிடம், பெண் ஹார்மோனை கட்டுப்படுத்துவது ஈரலின் வேலை. அடிக்கடி மது அருந்துகிறவர்களுக்கு ஈரல் பாதிக்கப்படுவதால், அவர்கள் உடலில் ஹார்மோனில் சமச்சீரில்லாத தன்மை தோன்றும். அப்போது ஆண் உடலுக்குள், பெண் ஹார்மோன் அதிகமாகி, ஆணின் செக்ஸ் உறுப்புகளை பாதித்து, செக்ஸ் வேட்கையை குறைத்துவிடும். மது அருந்துபவர்களிடம் செக்ஸ் பற்றிய தவறான கண்டோட்டம் இருந்துகொண்டிருக்கிறது. உண்மை என்னவென்றால் அவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் அதிகமிருக்கும். ஆனால் செக்சில் செயல்பட முடியாத நிலையை அடைந்துவிடுவார்கள். இது செக்ஸ் பலகீனமாகும்.

மது அருந்தும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நரம்பு மண்டல கட்டமைப்புகளும் சீர்குலையும். அப்போது இதயத்துடிப்பு அதிகமாகி, ரத்த அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே போகும். சூ¢க்கரை நோய் இருந்தால் அதுவும் கூடிவிடும்.
உடலில் சர்க்கரையை பான்கிரியாஸ் சுரப்பில் உள்ள பீட்டா செல்கள்தான் கட்டுப்படுத்துகின்றன. மது அருந்துவதால் பான்கிரியாஸ் சுரப்பியின் இயல்பான செயல்பாடு குறைந்து, பீட்டா செல்களின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுவிடும். இது இன்சுலின் உற்பத்தியை தடுப்பதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
Alcohol
மது அருந்துகிறவர்கள் விரைவாக மன அழுத்தத்திற்கும் உள்ளாகுவார்கள். காலப்போக்கில் மதுப்பழக்கம் அவர்களை மனநலக்கோளாறு கொண்டவர்களாகவும் ஆக்கிவிடும். ஏன்என்றால், மதுவின் போதையில் அவர்கள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாதவர்களாகிவிடுகிறார்கள். ஆல்கஹாலுக்கு பொதுவாகவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சக்தியிருப்பதால் தொடர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தால் மனநலத்தை சீர்குலைத்துவிடும். அது தற்கொலை உணர்வையும் தூண்டக்கூடும்.

மனஅழுத்தம் கொண்டவர்கள் எளிதாக மதுவுக்கு அடிமையாகிவிடுவார்கள். மது அருந்தும்போது அவர்களது மூளையின் செயல்திறன் குறைந்து, இயல்பாக சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிடுவார்கள். அதன் மூலம் மன அழுத்தம் குறைந்தது போன்ற நிலையை அடைவார்கள். அதனால் தொடர்ந்து மது அருந்தி மனநலம் மற்றும் உடல் நலனை கெடுத்துக்கொள்வார்கள்.

மது அருந்துபவர்கள் தூக்கமின்மையாலும் அவதிப்படுவார்கள். வேலையிலும் அவர்களால் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாது.
மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு ‘சர்வே’க்கள் தெரிவிக்கின்றன. இது, குழந்தையின்மை சிக்கல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருந்துகொண்டிருக்கிறது. மது அருந்தும் ஆண்களின் ஈரல் பாதிக்கப்படுவதுபோன்று, மது அருந்தும் பெண்களின் ஈரலும் பாதிக்கப்படும். அதனால் ஏற்படும் ஹார்மோன் சமச்சீரின்மையால் பெண்களிடம், ஆண் ஹார்மோன் அதிகம் சுரந்து, பெண் தன்மை குறையும். பெண்களின் உடலில் ஆண்தன்மை அதிகரிப்பது அவர்களது இனப்பெருக்கத்திறனை குறைத்துவிடும்.

கர்ப்பகாலத்தில் பெண்கள் மது அருந்துவதை முழுமையாக புறக்கணித்துவிட வேண்டும். ஏன்என்றால் தாய் அருந்தும் மதுவின் தாக்கம் குழந்தையின் இயல்பிலும், தோற்றத்திலும், செயல்பாட்டிலும், ஆரோக்கியத்திலும் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கர்ப்பமாக இருக்கும் பெண் மது அருந்துவது, அவளது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகமாகிவிடும். மது அருந்துவதோடு, புகைப்பிடிக்கும் பழக்கமும் தாய்க்கு இருந்தால் கர்ப்பக் குழந்தை வெகுவாக பாதிக்கப்படும்.

மது அனைவருக்கும் ஆபத்தானது. மது அருந்துவதால் செக்ஸ் பலகீனம் கொண்டவர்களுக்கு சரியான சிகிச்சை இருக்கிறது. அவர்களால் மீண்டும் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அவர்கள் செக்ஸாலஜிஸ்டிடம் ஆலோசனை பெறவேண்டும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here