Home Common Health Problems கல்யாணமாகியும் கன்னிப்பெண்கள்

கல்யாணமாகியும் கன்னிப்பெண்கள்

1210
2
SHARE

வெளிச்சத்துக்கு வரும் நிஜங்கள்

Woman
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் விவாகரத்து கேட்டு நீதி மன்றங்களை நாடும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு காரணமாக பெரும் பகுதி பெண்கள், ‘கணவருக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருப்பதாக’ சொல்கிறார்கள். ஒரு பகுதி ஆண்கள் ‘மனைவிக்கு இன்னொரு ஆணோடு தொடர்பு இருப்பதாக’ கூறி, விவாகரத்துக்கு மனு செய்கிறார்கள். எளிதாக விவாகரத்து பெற ‘இன்னொரு தொடர்பு’ என்ற குறுக்குவழியை பலர் கையாளுகிறார்கள் என்று பொதுவாக பேசப்பட்டாலும், இது பற்றிய ஆய்வுகள் பல்வேறு உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றன.
“20 முதல் 30 சதவீத தம்பதிகள் நிஜமாகவே செக்ஸ் ரீதியான பிரச்சினைகளால்தான் விவாகரத்து பெறுகிறார்கள்”-என்கிறது சமீபத்திய சர்வேக்கள்.

“பாரம்பரியம், கலாசாரம் போன்றவைகளை இருபாலினரும் மீறுவது அதிகரித்து வருகிறது. 9 சதவீத ஆண்கள் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு தொடர்பு வைத்திருப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள். அதுபோல் 4 சதவீத பெண்களும் இன்னொரு உறவில் சிக்கி இருப்பதாக” ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது கசப்பான உண்மையாகும்.

பிரபலமான சினிமா பிரமுகர் ஒருவர், தனது அழகான நடிகையான மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்தார். அந்த செய்தியை கேள்விப்பட்ட பலர், “லட்சக்கணக்கான இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டிருக்கும் அந்த நடிகை எவ்வளவு பேரழகியாக இருக்கிறார். அவரைப்போய் வேண்டாம் என்று எந்த ஆணாவது ஒதுக்குவாரா?” என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க, சிலர்தான் ‘கணவன்-மனைவி வாழ்க்கையில் அழகையும்தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அழகு மட்டுமே தாம்பத்ய வாழ்க்கையின் வெற்றிக்கு போதுமானதல்ல’ என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

“இப்போது கணவனும்-மனைவியும் ஒரு விஷயத்தில் மிக தெளிவாக இருப்பதாக” கூறும் ஆய்வறிக்கைகள், அந்த ஒரு விஷயம் என்ன என்பதையும் விளக்குகிறது.

“பிடிக்காத துணையோடு மல்லுகட்டிக்கொண்டு போராடக் கூடாது என்ற முடிவில் இன்றைய தம்பதிகள் தெளிவாக இருக்கிறார்கள். மனதையும், உடலையும் இன்னொருவருக்கு கொடுத்துவிட்டு பெயரளவுக்கு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க பலரும் தயாரில்லை. அதனால்தான் வெகுகாலம் காத்திருக்காமல் விரைவாகவே விவாகரத்து நோக்கிச் செல்கிறார்கள்” என்று கூறும் ஆய்வறிக்கைகள், “இந்த விஷயத்தில் சாதாரண மக்களும் விரைவாக முடிவெடுக்க பிரபலங்கள் ஒரு காரணமாக இருக்கிறார்கள். பிரபலங்களின் விவாகரத்துக்கள் பெரிய அளவில் செய்திகளாகி, சாதாரண மக்களிடமும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்றும் குறிப்பிடுகிறது.

இன்று நிறைய குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் சிக்குவதற்கு செல்போன்கள்தான் காரணமாக இருக்கின்றன. அதில் இடம்பெறும் படம், பேச்சு, காட்சி போன்றவை அசைக்க முடியாத ஆதாரங்களாகத் திகழ்கின்றன. அதே செல்போன் காட்சிகளும், படங்களும், பேச்சுப் பதிவுகளும் இன்று விவாகரத்துக்களுக்கும் ஆதாரமாகிக்கொண்டிருக்கின்றன. விலைமதிப்புள்ள செல்போனை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதில் வரும் பிரச்சினைக்கூ¤ய படங்களையோ, தகவல்களையோ அழிக்கத் தெரியவதில்லை. அதை தொடர்ந்து பார்க்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்று அழிக்கவும் பலர் விரும்புவதில்லை. அதுவே பின்பு விவாகரத்துக்கு ஒரு ஆதாரமாகிவிடுகிறது.

“திருமணத்திற்கு முன்பே இன்னொருவரிடம் ரகசிய தொடர்பு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது” என்று கவலைப்படவைக்கும் ஆய்வறிக்கைகள், “இதில் ஆண், பெண் என்ற பேதமில்லை. இருதரப்பிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. சிலர் அதை திருமணத்திற்கு பிறகும் தொடர்கிறார்கள். அதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் தொடங்குகிறது. அது விவாகரத்து என்ற பெயரில் குடும்ப நல நீதிமன்றங்களில் போய் முடிவடைகிறது” என்று விளக்குகிறார்கள்.
‘பசி, ருசி அறியாது’ என்பார்கள். ஆனால் பலவிதமான பதார்த்தங்களை ரசித்து சாப்பிட விரும்புகிறவர்கள் அதிக ருசியையும் எதிர்பார்க்கிறார்கள். படுக்கை அறை தாம்பத்யத்திலும் அத்தகைய ருசி தேடப்படுகிறது. வெளியே இருந்து வித்தியாசமானவைகளை தேடும்போது அது பலரது வாழ்க்கையை விபரீதமாக்கிவிடுகிறது.

விவாகரத்து இன்னொரு பக்கம் பணம் சார்ந்த வியாபாரம் போலவும் ஆகிவிட்டது. வசதிபடைத்த பெண்களில் சிலர் விவாகரத்தை வியாபாரமாகப் பார்க்கிறார்கள். பெருந்தொகையை ஜீவனாம்சமாக வாங்கிக்கொண்டு பழைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விடைபெறவிரும்புகிறார்கள். பழைய கணவரிடமிருந்து கிடைக்கும் பணத்தில் புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் துணிச்சல் அடைகிறார்கள்.

அதே நேரத்தில், “தென்னிந்தியாவில் திருமணமாகி பல மாதங்கள் ஆகியும் கன்னிப்பெண்களாக இருப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது” என்று அதிர்ச்சி அடைய வைக்கிறது, இன்னொரு சர்வே! இதையும் சமூகம் ஜீரணித்துதான் ஆக வேண்டும். இதற்கு காரணம், ‘சைபர்செக்ஸ்’. திருமணமான சில ஆண்கள் இணையத்தின் மூலம் செக்ஸ் திருப்தி அடைந்துவிட்டு மனைவியுடன் உறவு கொள்ளாமலே இருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் கன்னிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதோடு சேர்ந்து இன்னொரு கசப்பான விஷயமும் இருக்கிறது. “என் கணவரின் செக்ஸ் அணுகுமுறையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தினமும் பல தடவை அவருக்கு நான் தேவைப்படுகிறேன். சுந்தோஷமாக குறிப்பிடப்படும் உடலுறவு எனக்கு தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொடுமையில் இருந்து மீள எனக்கு விவாகரத்து தாருங்கள்” என்று நீதிமன்ற கதவுகளைத் தட்டும் பெண்களும் இருக்கிறார்கள்.

சரி! இந்த குழப்பம் எதுவும் இல்லாமல் மணவாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள என்ன வழி?
“பிரச்சினைகள் எதுவும் இன்றி சந்தோஷமாக மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள், திருமணத்திற்கு முன்பே ‘ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்’ எனப்படும் ‘திருமணத்திற்கு முந்தைய வாழ்வியல் ஆலோசனைகளை’ பெற வேண்டும். அதன் மூலம், பழைய தொடர்புகளில் இருந்து விடுபட்டு அவர்கள் புதிய வாழ்க்கைக்கு உடல் ரீதியாகவும்-மனோரீதியாகவும் தயாராகிவிடலாம். செக்ஸாலஜிஸ்ட் சொல்லும் அதற்கான ஆலோசனைகளை பின்பற்றி வாழ்ந்தால், மகிழ்ச்சியாக மண வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். பழைய தொடர்புகளை கைவிடவும், புதிய தொடர்புகளில் சிக்காமல் இருக்கவும் இப்போது தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்குகிறோம்” என்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட் டி.காமராஜ்!
ஆமாம்.. இந்த ஆலோசனை இன்றைய சமூகத்தில் இருபாலருக்கும் மிக அவசியம்தான்!

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here