Home Common Health Problems குடிப்பழக்கம் மற்றும் மருத்துவம்

குடிப்பழக்கம் மற்றும் மருத்துவம்

307
1
SHARE

குடிப்பவர்கள் பொதுவாக விருப்பமின்றியே மருத்துவம் மேற்கொள்கிறார்கள்.  காரணம் தமக்குப் பிரச்னை இருப்பதாக அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை . இதனால் மருத்துவம் செய்து கொள்ள அவர்களை வற்புறுத்த வேண்டியிருக்கிறது.

ஒரு வேளை உடல்நலக் கேடும் சட்டச்சிக்கலும்  அவர்களை மருத்துவம் மேற்கொள்ள வைக்கலாம்.மருத்துவத் தேவையை அவர்கள் ஏற்றுக்கொள்ள மற்றவர்களின் தலையீடு தேவையாகிறது .  உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் மீது நீங்கள் அக்கறை கொண்டவராக இருந்தால் மருத்துவருக்கும் அந்த நபருக்கும் இடையே இணைந்து நீங்கள் செயல்படலாம்.

தனிநபருக்கான மருத்துவம்

மதுப் பிரச்னை உடையவர்களுக்கு உதவும் வகையில் பலவித மருத்துவ முறைகள் உள்ளன.   இவை ஒவ்வொரு தனி நபருக்கும் பொருந்தும்படி அமைதல் அவசியம். இவற்றில் நோயின் தன்மையை மதிப்பிடுதல், இடைத்தொடர்பு, வெளி நோயாளி முகாம், ஆலோசனை, உள்நோயாளி மருத்துவம் ஆகியவை அடங்கும்.  சிகிச்சையின் போது முதலில் நீங்கள் மதுவைச் சார்த்திருப்பவரா (டிப்பெண்டன்ட்) என்பதைத் தீர்மானிப்பது முக்கியம்.

ஒரு வேளை நீங்கள் மது அருந்தும்போது கட்டுப்பாட்டை இழப்பீர்கள் என்றால் உங்கள் குடிப்பழக்கத்தைக் குறைக்கும் வண்ணம் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

மிதமாக மது அருந்தும் பழக்கம் கொண்டவராக இருந்தால் உங்கள் பழக்கத்தைத் திருத்த வேண்டியிருக்கும்.

அவையின்றி நீங்கள் மது அடிமையாக இருந்தால் அப்பழக்கத்தைக் குறைத்து, பழைய நிலைக்குக் கொண்டு வருவதென்பது அவ்வளவு எளிதல்ல.  குடிப்பதிலிருந்து சற்று விலகியிருப்பது சிகிச்சையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

முற்றிலும் மதுவைச் சார்ந்திராத, ஆனால் மதுவின் விளைவுகளைக் கொண்டவராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மது தொடர்பான பிரச்சனைகளைக் குறைப்பதே சிகிச்சையின் நோக்கம்.  இதில் ஆலோசனை மற்றும் சுருக்கமான குறுக்கீட்டு மருத்துவமும் இடம்பெறும்.

இளம் பருவத்தில் ஏற்படும் குடிப்பழக்கம்

மதுவுக்கு அடிமையாகப் பெரியவர்களுக்கு  சில ஆண்டுகள் ஆகலாம்.  ஆனால் இளம் பருவத்தினர் சில மாதங்களிலேயே மதுவுக்கு அடிமைகளாகி விடுகின்றனர். வயது ஆக ஆக இவர்களிடம் மதுப்பழக்கம்  வலுப்பெறுகின்றது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 முதல் 20 வயதுக்குள் இறப்பவர்களில் 2000 பேர் மது போதையால் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் மரணமடைகின்றனர்.  நீரில் மூழ்குதல், தற்கொலை, தீ விபத்து போன்றவற்றில் பல இளைனர்கள் உயிர் இழப்பதற்கும் மதுப் பழக்கமே காரணம் என்று அறியப்படுகிறது.

இளைஞர்களைப் பொறுத்த அளவில் மது ஆர்வத்துக்கு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் வெளியாட்களின் தாக்கம் காரணமாகிறது.  அவர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட நபர்களும் ஒரு காரணம். இத்துடன் விளம்பரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.  குடும்பத்தில் மதுப்பழக்கம் இருப்பதும் அவர்களை இதில் தள்ளி விடுவதுண்டு.

இளைஞர்களிடம் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கின்றனவா எனக் கண்காணிக்க வேண்டும்:

  • வேலைகளிலும் பொழுதுபோக்கிலும் ஆர்வமின்மை
  • எப்போதும் பதற்றம், சிடுசிடுப்புடன் காணப்படுதல் நட்புறவுகளில் மாற்றம், பழைய நண்பர்கள் மாறிப் புதிய நண்பர்கள் வருதல்
  • கல்வியில் தரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்குதல்

 

இளைஞர்களிடம் மதுப் பழக்கத்தைத் தடுக்க சில வழிமுறைகள்

  • மதுவின் பாதிப்பை உணர்த்த நீங்களே நல்ல உதாரணமாகத் திகழுங்கள்
  • உங்கள் குழந்தைகளுடன் நெருக்கமாகவே இருங்கள்
  • மதுப்பழக்கம் குறித்த சட்ட ரீதியான, மருத்துவ ரீதியான விளைவுகளைப் பற்றி எடுத்துரையுங்கள்.

மேலும் சுவாரசியமான தகவல்களை நாளை பார்க்கலாம்

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here