மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் மூன்றையும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. பேரிச்சை, கிஸ்மிஸ் (உலர்ந்த திராட்சை), சப்போட்டா, பப்பாளி போன்றவற்றையும் சாப்பிட வேண்டாம்.
திராட்சை, அன்னாச்சி, கிர்ணிப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, கமலா போன்றவற்றை எப்போதாவது ஒன்றிரண்டு சாப்பிடலாம். நிறைய சாப்பிடக்கூடாது. கரும்புச் சாறு குடிக்காதீர்கள்.
பனக்கற்கண்டு, தேன், மலை வாழை, இனிப்பான லேகியங்கள், தேனில் ஊறவைத்த நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் பிற பொருள்கள், குலோப் ஜாமுன், இனிப்புப் பண்டங்கள், பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை.
முள்ளங்கி, நூக்கல் போன்றவை தவிர, பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகளை அதிகமாகப் சாப்பிடாதீர்கள். இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட் எளிதில் ஜீரணமாகி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கிவிடும். தவிர, கார்போஹைட்ரேட் சத்து அதிகம் சேர்வதால் உடலும் பருத்துவிடும். ஆகவே, பூமிக்கு மேல் விளையும் காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளுங்கள். இவை சர்க்கரையை அதிகப்படுத்தாது.
பப்பாளிக்காய், தக்காளி, பரங்கிக்காய் ஆகியவற்றைச் சாப்பிடலாம். ஆனால், இவற்றின் பழங்களை அதிகமாகச் சாப்பிடக்கூடாது.
சாப்பிடக்கூடியவை
சர்க்கரை நோயாளிகள் பாகற்காயை அதிகமாகப் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இனிப்புக்கு எதிரி கசப்பு, அதனால், இது சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்கிறார்கள். இதற்கு, ஆதாரப்பூர்வமாக உண்மைகள் எதுவும் கிடையாது.
கத்தரிக்காய், அவரை, அவரைப்பிஞ்சு, வாழைத்தண்டு, காராமணி, வெண்டைக்காய், முருங்கைக்காய், தக்காளிக்காய், வாழைப்பூ, முட்டைகோஸ், முள்ளங்கி, புடலை, நூக்கல், கீரை வகைகள், பச்சைப் பட்டாணி, பாகற்காய், முளை கட்டிய தானியங்கள், கொண்டைக்கடலை, பீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கறிவேப்பிலை, நாவல் பழம் போன்றவற்றை நிறைய சாப்பிடலாம். குறிப்பாக, நார்ச்சத்து அதிகம் உள்ள பொருள்களைச் சாப்பிடுவது நல்லது
பகலில், எல்லா காய்கறிகளையும் கலந்து அவியலாக்கிச் சாப்பிடலாம். இரவில், பச்சைக் காய்கறி சலாடும், மாலையில் காய்கறி சூப்பும் சாப்பிடலாம்.
உணவுமுறையில் அரிசி, மைதாவை விட கேழ்வரகு பயன்படுத்தலாம். கோதுமைச் சப்பாத்தி சாப்பிடலாம். பால், தயிர், மோர், மீன், கோழி இறைச்சி (மார்பகப் பகுதி) ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிட விரும்புவோர், அதிக சர்க்கரைச் சத்து இல்லாத பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
அன்னாச்சி, வெள்ளரி, கிர்னி போன்ற பழங்களைக் கொஞ்சம் போல் சாப்பிடலாம். சாத்துக்குடி, கமலா போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களை சிறிதளவு சாப்பிடலாம். அளவோடு உண்பது நலம்..
Refreshing fruity news..but restricted fruits..for Diabetes .
important ONE