Home Common Health Problems குழந்தையின்மை தம்பதிகளுக்கான – ஒரு தொடர்

குழந்தையின்மை தம்பதிகளுக்கான – ஒரு தொடர்

773
1
SHARE

ரு தம்பதியர் கருவுறாமல் இருக்கும்போது , எங்களுக்கு என்ன பிரச்சனை, எவ்வளவு நாளில் சரியாகும் , எவ்வாறு சரியாகும், என்ற  மூன்று கேள்விகளைத்தான் அவர்கள் கேட்க விரும்புவார்கள் .

 

ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஒரு தீர்வு தான் என்று  இல்லை. பல   தீர்வுகள் உள்ளன. சில, குறைந்த நாள்களில் சரியாகும் , சில  நீண்ட நாள்கள் ஆகும். சிலவற்றுக்கு குறைந்த செலவாகும். சிலவற்றுக்கு அதிக  செலவாகும்.

இந்த பிரச்சனையால் என்ன பாதிப்பு எனக் கேட்கும் அனைவருக்கும்,  அவர்கள் கேட்கும் எல்லாவற்றுக்குமே சரியான தகவல்களைச் சொல்ல விரும்புகிறோம், சொல்லி வருகிறோம். என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், அவர்கள் சிகிச்சைக்கு வரும் போதும், செலவு செய்யும் போதும் ஒரு தடுமாற்றம் இருக்கும்.

 

அவர்களுக்கு தகவல்கள் தெரிந்தால்/தெரிந்திருந்தால்,முடிவெடுப்பது எளிதாகும். அதனால் எல்லாத்தகவல்களையும் சொல்ல  விரும்பினாலும், இவ்வளவு நேரம் செலவு செய்வது என்பது சாத்தியம் இல்லாதது. காரணம், ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்லி கொண்டிருந்தால், வெளியே காத்திருக்கும் நபர் மிக அவதிக்குள்ளாகிவிடுவார். அவரும், உள்ளே வந்தால், இதைத்தான் கேட்பார். மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்க வேண்டும்.

 

ஒவ்வொருவருக்கும், அவர்களுக்கு புரியும் வகையில் சொன்னால்தான் விளங்கிக்கொள்ள வசதியாக இருக்கும். இவற்றை யெல்லாம் யோசித்ததன் முடிவுதான் இந்த தொடர். நோயாளிகள் கேட்க மறந்த, கேட்கவே தோன்றாத,என்னவென்றே தெரிந்திராதே பல நுணுக்கமான விஷயங்களைக்கூட இந்த தொடரில் மிகத் தெளிவாகவும், விரிவாகவும் கொடுத்திருக்கிறோம்.

நல்ல மருத்துவரைத் தேர்வு செய்வது எப்படி?

செலவுகளைக் குறைத்துக் கொள்வது எப்படி?

என்னென்ன பிரச்சனைகள் உங்களைப் பாதிக்கும். அதே பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?

பிரச்சனை வந்த பிறகு  அதை எவ்வாறு எதிர் கொள்வது ?

எப்படி, நவீன சிகிச்சைகள் உங்களுக்கு உதவுகின்றன என்பதைப் பற்றி எல்லாம் உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் ஒன்றடக்கி, குழந்தையின்மைப் பிரச்சனையை  ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளும், நவீன சிகிச்சை முறைகளும் கொண்டதாக ஒரு முழுமையான கையேடாக இந்தப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here