Home Common Health Problems மதுவுக்கான மருத்துவம் – மின்னசோட்டாமாதிரி

மதுவுக்கான மருத்துவம் – மின்னசோட்டாமாதிரி

659
1
SHARE

மெரிக்காவிலுள்ள பல உறைவிட மருத்துவத் திட்டங்கள் ‘மின்னசோட்டா மாதிரி’ அடிப்படையில் இயங்குகின்றன.  மதுக்கட்டுப்பாடு, தனி நபர் அல்லது குழு மருத்துவம், குடிப்போர் மறுவாழ்வுக் கூட்டத்தில் பங்கு கொள்ளுதல், கல்விசார் விரிவுரைகள், குடும்பத்தில் ஈடுபாடு, ஆலோசகர் உதவி (இவர்களில் பலர் மதுப்பழக்கத்திலிருந்து மீண்டவர்கள்) மற்றும் பல்திறன் படைத்த மருத்துவர் முதலிய அம்சங்கள் அடங்கும்.

உள்நோயாளி  மருத்துவ முறையில் பல அணுகுமுறைகளான அக்குபஞ்சர், ஊக்க மருத்துவம், குறிக்கோள் எய்தும் பயிற்சி, அனுபவப் பாடம் போன்றவை உள்ளடங்கி உள்ளன.  ஒவ்வாமை (அலர்ஜி) மருத்துவத்தில் மதுவுடன் குமட்டல், வாந்தி முதலியவை உண்டுபண்ணும் மருந்துகள் சேர்த்துத் தரப்படுகின்றன.  இந்த முறையை மீண்டும் மீண்டும் மேற்கொள்வதால் மது மட்டும் ஒவ்வாமைக்கான காரணியாகிவிடும்.  இதனால் மதுவின் மேல் ஆர்வம் குறையத் தொடங்கும்.  இந்த ஒவ்வாமை மருத்துவம் திறம்படச் செயல்படுவதாக இருந்தாலும், பலருக்கு இது விரும்பத்தக்கதாக அமையவில்லை.

மின்னசோட்டா மாதிரி

மின்னசோட்டா மாதிரியின் அடிப்படையில் அமைந்த வீட்டில் இருந்தபடியே செய்யப்படும் மருத்துவ முறை பற்றி நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

நச்சுநீக்கமும் விடுபடுதலும்

இம்மருத்துவமுறை நச்சு நீக்குதல் முறையிலிருந்து தொடங்குகிறது.  இது சுமார் நான்கிலிருந்து ஏழு நாட்கள் எடுத்துக்கொள்ளும். உடல் நடுக்கம், பிரமை(டெலிரியம் ட்ரெமென்ஸ்) போன்றவற்றைத் தடுக்கவும். மதுவிலிருந்து விடுபடும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கான மருத்துவமும் தேவைப்படலாம்.  மருத்துவ மதிப்பீடும் மருத்துவ முறையும்

மது அடிமை தொடர்பான பொதுவான மருத்துவப் பிரச்சனைகள்: இரத்த மிகை அழுத்தம், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கூடுதல், கல்லீரல், இதயம் தொடர்பான நோய்கள்

உளவியல் ஆதரவும் மனநல மருத்துவமும்

மது அடிமை தொடர்பான உளவியல் பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்குத் துணைபுரியும் உளவியல் மருத்துவங்கள்,  ஆலோசனைகள் உள்ளடங்கியது.

நலமடைவுத் திட்டங்கள்

நச்சுநீக்கமும் மருத்துவர் சிகிச்சை முறையும் உறைவிட மருத்துவத் திட்டங்களின் கீழ் உள்ள பல மனிதர்களுக்கு முதல் படிகளாகவே உள்ளன.

ஏற்புடைமை மற்றும் மனக்கட்டுப்பாடு

நீங்கள் மது அடிமைக்கு உட்பட்டவர் என்பதையும் குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர் என்பதையும் ஒத்துக்கொண்டால் மட்டுமே மருத்துவம் பலன் தரும்.

மருந்துகள்

டைசல்ஃபிரம் எனப்படும் மது எதிர்ப்பு மருந்து மிகவும் பயனளிக்கும். இம்மருந்து எடுத்துக்கொள்ளும்போது நீங்கள் மதுவைக் குடிக்க நேர்ந்தால் உடலில் பக்கவிளைவுகளை உருவாக்கும்.  குறிப்பாக முகம் சிவத்தல், குமட்டல், வாந்தி, தலைவலி போன்றவை ஏற்படுத்தும்.  டைசல்ஃபிரம் மருந்து மது அடிமையைக்  குணப்படுத்தாது. மாறாக, குடிக்க வேண்டுமென்கிற பிடிவாதப் போக்கை நீக்கிவிடும்.  இருப்பினும் இதைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை.  இம்மருந்து வலிமையான எதிர்விளைவுகளை ஏறுபடுத்துவதுண்டு.  நால்டிரக்ஸோன் எனும் இன்னொரு மருந்து தற்போது குடிக்கும் ஆர்வத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் டைசல்ஃபிரம்  போலன்றி நால்டிரக்ஸோன் சில நிமிடங்களில் எதிர்வினை புரிவதில்லை. மேலும் இம்மருந்தில் பக்கவிளைவுகள் உண்டு.  குறிப்பாகக் கல்லீரலைப் பாதிக்கும்.

தொடரும் உதவிகள்

சிகிச்சைக்குக் பின்னால் மேற்கொள்கின்ற அக்கறை மற்றும் மது விழிப்புணர்வுத் திட்டங்கள் குடிகாரர்களை மதுப் பழக்கத்தில் இருந்து விட்டொழிக்கச் செய்வதோடு மீண்டும் பழைய நிலைக்கு வர உதவுகிறது.  வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்ய உதவுகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here