Home Infertility குழந்தையின்மைகான காரணங்கள் (Unexplained Infertility)

குழந்தையின்மைகான காரணங்கள் (Unexplained Infertility)

472
1
SHARE

குழந்தையின்மை பாதிப்பு உள்ளவர்கள் 100 சதவீதத்தில் 35-40 சதவீதம் ஆண்களால் பாதிக்கப்படுகின்றன, 40-45 சதவீதம் பெண்களால் பாதிக்கப்படுகின்றன.  எந்த குறைபாடும் இல்லாமல் இருந்தும் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியர்களை Unexplained Infertility or Idiopathic Infertility (சொல்லப்படாத கருவுருவாமை).

சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் முற்காலத்தில் 6-15 சதவீதம் தம்பதியர்கள் குழந்தையின்மையால் பாதிக்கபடுக்கின்றன என்றும், தற்காலத்தில் 25 சதவீதம் எந்த குறைபாடும் இல்லாமல் இருந்தும் குழந்தையின்மையால் பாதிக்கபடுக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின்மையால் பாதிப்பட்ட பெண்களுக்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள்:

  • குழந்தையின்மையால் பாதிப்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பையில் எதாவது குறைகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்
  • கருக்குழாய் அடைப்பு மற்றும் ஒரே சீராக இருக்க வேண்டும்
  • கருமுட்டை வளர்ச்சி மாதம் மாதம் சீராக இருக்க வேண்டும்
  • கருமுட்டைக்கான வளர்ச்சி ஹார்மோன்கள் சீராக இருக்க வேண்டும்

இது எல்லாவற்றையும் சில சிகிச்சைகள் அடிப்படையில் சரி செய்யலாம்:

  1. USG (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்)

கர்ப்பப்பை பற்றிய அளவு, வளர்ச்சி, கட்டிகள் ஏதேனும் உள்ளதா என்பதை அறியலாம்.

கருமுட்டை வளர்ச்சியை (Follicle Study) பரிசோதிக்கலாம்

  1. HSG (கருக்குழாய் அடைப்பை பரிசோதிக்க எக்ஸ்-ரே மூலம் செய்யும் முறை)
  2. இரத்த ஹார்மோன் பரிசோதனை
  3. லாப்ரோஸ்கோப்பி(Laparoscopy)

ஆண்களுக்கான பரிசோதனை

  • முறையான விந்தணு சோதனை

இந்த மேற்குறிய அனைத்தும், இது தவிர தாம்பத்திய உறவு எந்த வித தடையும், பிரிவும் இல்லாமல் இருந்தால் குழந்தைப்பேறு பெறாதவர்களை (Infertility) குணப்படுத்தமுடியும்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன?

இதற்கு முக்கியமான ஆய்வுகள் சொல்லும் தீர்வு

  • வாழ்க்கை முறைகள் மாற்றம்
  1. பெண்களுக்கு உடல் எடை சீராக்கம் (Ideal BMI – 25-27 )
  2. உடல் பருமன் அதிகம் உள்ள பெண்களுக்கு
    • உடற்பயிற்சி
    • உணவு கட்டுப்பாடு
    • வாழ்க்கை முறைகள் மாற்றம்

(இரவு நேர  வேலை, மனஅழுத்தம், சத்து குறைகள்) இவற்றை சீர்படுத்த வேண்டும்

  1. புகைப்பழக்கம்(தற்கால பெண்களுக்கு புகைப்பழக்கம் அதிகரித்து வருவதால் குழந்தையின்மையால் பாதிப்பு அடைகின்றன).
  2. அதிகமாக காபி, டீ அருந்துவதால் (இரண்டு கப் காபி குடிக்கலாம், அதற்கு அதிகமாக குடிப்பது பிரச்சனைகளை உண்டாக்கும்).
  • ஆல்கஹால்

ஆல்கஹால் அருந்துவதால் ஆண் மற்றும் பெண் இருவரும் குழந்தையின்மையால் பாதிக்க படுகின்றன

இத்தகைய தம்பதிகள் என்ன சிகிச்சை முறை மூலமாக குழந்தைப்பேறு பெற வைப்பது?

  1. இதில் ஒரு ஆச்சரியமான விஷயம், பல ஆராய்ச்சிகள் மூலமாக சிகிச்சை எடுக்கும் போது சிலர் இயற்கையாகவே 1 வருட காலத்திற்குள்  குழந்தைப்பேறு  பெற்று விடுகின்றனர்.
  2. IUI (Intrauterine insemination) சினை முட்டைகள் வெளியேறுவதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து கணவனுடைய விந்தணுக்களில் நல்ல உயிரணுக்களை பிரித்தெடுத்து ஊசி (Catheter) மூலம் செலுத்தும் முறை. இந்த முறையில் பல ஆய்வுகள் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் இந்த வகை குழந்தையின்மை   பாதிக்கப்பட்ட தம்பதிக்கு 3-5 சதவீதம் முதல் முயற்சியிலே குழந்தைப்பேறு பெற்று விடுகின்றன.  ஒரு மாதத்தில் தொடர்ந்து 3-4 முறை செய்வதால் 20-24 சதவீதம் குழந்தைப்பேறு பெற்று விடுகின்றன. இந்த முறையில்,  சீரியம் முறையில் ஊசிகள் செலுத்துவதில் முட்டைகளின் வளர்ச்சி மற்றும் கர்ப்பப்பை உள்வளர்ச்சி சீரமைக்கப்படுகிறது.  இந்த சீரான முறையில் விந்தணுக்களை பிரித்து முறைப்படி கர்ப்பப்பையில் செலுத்தும் போது கருத்தரிப்பிற்கு வாய்ப்பு அதிகம்.  இந்த முறையில் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு அடுத்த முறை பரிந்துரைசெய்யப்படுகிறது.
  3. IVF & ICSI (சோதனைக்குழாய் குழந்தை) முறையில் கருத்தரிக்க இயலும். தொடர்ச்சியாக நவீன முறையில் சிகிச்சை அளிக்கும் போது குழந்தைப்பேறு பெறுகின்றன.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

1 COMMENT

  1. sir my friend 4year ago no baby 1lak billing in hospital every week 1000 rule injunction sir ion 2 time what are problem sir

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here