Home Common Health Problems டீன் ஏஜ் வயதினருக்கு தேவையான தகவல் -2

    டீன் ஏஜ் வயதினருக்கு தேவையான தகவல் -2

    702
    0
    SHARE

    டீன் ஏஜ் பருவத்தினருக்கு வித்தியாசம் மட்டுமின்றி, கூடவே குழப்பங்களும் தோன்றுகின்றன. இது ஏன்? இது சரியா, தவறா? நமக்கு மட்டுமே இப்படிப்பட்ட மாற்றங்கள் தோன்றுகின்றனவா? மற்றவர்களுக்கும்  இத்தகைய மாற்றங்கள் நேருமா? இப்படிப்பட்ட கேள்விகள் எழும்போது குழப்பம் வரத்தானே செய்யும்.

    குழந்தைப் பருவம், சிறுவர் பருவம் என்பதெல்லாம் மனித வாழ்வின்  துவக்கக்  கட்டங்கள். இந்தக் கட்டத்தில் உள்ள எல்லோருக்குமே, தன்னைப் பற்றியோ, தனது உடலைப் பற்றியோ தெரிந்திருக்காது.

    ஆண் என்றால் தனது அப்பாவைப் போல  இருப்பது, மாமாவைப் போல இருப்பது அல்லது அப்பாவைப் போல இருக்கும் மற்றவர்களைப் போல இருப்பது என சிறுவனும், பெண் என்றால் அம்மாவைப் போல, அத்தையைப் போல, பாட்டியைப் போல இருப்பது என சிறுமியும் நினைத்து கொள்வது இயல்பு.

    அவர்கள் தங்களைப் பார்த்து, தங்கள் உறுப்புகளைப் பார்த்து தாம் அப்பாவைப் போலிருக்கிறோம், அதனால் நான் பையன் என்றும், அம்மாவைப்  போலிருப்பதால் நாம் பெண் என்றும் தெரிந்துகொள்கிறார்கள். மற்றபடி, அப்பாவைப்போல வளர்ந்தவராகும்போது தங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், அம்மாவைப் போல மாறுவதற்கு என்னென்ன மாற்றங்களை சந்திக்க வேண்டும் என்கின்ற விவரங்கள் எல்லாம் தெரிந்திருப்பதில்லை.

    இவை எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிற ஒரு நிலை உருவாக ஆரம்பிக்கும்.

    எப்போது?

    தங்கள் உடலில் மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும் போது! இந்த மாற்றத்தை முதலில் உணர்கிற சிறுவர்கள் நாம் பெரியவர்களாகிக் கொண்டிருக்கிறோம் என நினைப்பது கிடையாது; தனக்கு என்னவோ ஆகிவிட்டது என்றுதான் குழப்பப்படுவார்கள். அப்போதுதான் அவர்களுக்குப் பயம் வரும், விளக்கமாக எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முயற்சிகள் செய்வார்கள்.

    அப்பா அம்மா என்றால் யார்? அவர்கள் நம்மைப் பெற்றெடுத்தவர்கள்!

    மாமா- மாமி, மாமா- அத்தை என்பதிற்கிடையே என்ன வித்தியாசம்? மாமா என்பவர் அம்மாவுடன் பிறந்தவர், அப்பாவுடன் பிறந்தவர் அத்தை! அத்தையின் கணவர் மாமா. இந்த ‘மாமா’ அம்மாவுக்கு அண்ணண் அல்லது தம்பி முறையாவார்கள்.

    பாட்டனார் என்பவர் அம்மாவுக்கு அப்பா. பாட்டி என்பது அம்மாவின் அம்மா! தாத்தா என்பவர் தந்தையாரின்  அப்பா, ஆயா என்பவர் தந்தையின் தாய். அண்ணன்- அக்காள் என்பவர்கள் நமக்கு முன் பிறந்தவர்கள், தங்கை தம்பி என்பவர்கள் நமக்கு பிறகு பிறந்தவர்கள் … இப்படி உறவு முறை பற்றியும், அயலார்கள், நண்பர்கள் பற்றியும் ஓரளவு விஷயங்கள் உங்களுக்குத்  தெரிந்திருக்கும்.

    ஆனால் உங்கள் உடலை பற்றி எவ்வளவு தூரம் தெரிந்திருக்கும்?

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here