Home Common Health Problems பெண்கள் தன் கணவனை கவர எப்படி தயாராவது?

    பெண்கள் தன் கணவனை கவர எப்படி தயாராவது?

    1553
    0
    SHARE

    டுக்கைறைக்குச் செல்லும் மனைவி, தன்னை அலங்கரித்து, வாசனை திரவியங்களைப் பூசிக்கொண்டு புத்தம் புதுமலர்போல இருக்கவேண்டும். காதலிக்கும் பொது ஒரு பெண் தன் காதலனுக்காக எத்தகைய அலங்காரங்களைச் செய்து கொண்டு அவனது கவனத்தையெல்லாம் தன பக்கம் ஈர்த்து வைத்துக்கொண்டிருப்பாளோ அத்தைகைய ஈர்ப்பை அவள் இப்போதும் தொடரவேண்டும்.

    அவ்வாறு இல்லாமல்,அன்றைய தினத்தின் வேலைகளை செய்து களைத்துப்போய் ஈர உடையுடனும், வியர்வை நாற்றம் வீசும் உடலுடனும், அழுக்கேறிய கூந்தலுடனும் படுக்கைக்குப் போகும் போது கணவனின் கவனம் பெரும்பாலும் சிதைந்து போய்விடும். உங்கள் மீதுள்ள ஆர்வம் குறையைத் தொடங்கும்.

    திருமணமான பல பெண்களின் தாம்பத்திய வாழ்க்கையில் இன்பப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், பெண் தன்னை முழுமையாக அலங்கரித்துக் கொள்வதில் கவனம் செலுத்தாமல் போவதுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    கணவனுக்குப் பிடித்தமான உடைகள், நைட்டி, காதணி, அவன் விரும்பும் ஜெட்டியைக்கூட அணிந்து கொண்டு படுக்கைக்குச் செல்லுங்கள்.  ஆண்கள் தோற்றத்தில் மாறலாம்.  ஆனால் ஆசையில் அவர்கள் எப்போதுமே பதினாறு வயதினர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்ற பெண்களோடு தொடர்பு வைத்துக்கொண்டிருக்க முக்கியக் காரணம், படுக்கையறையில் தனது மனைவி முழுமையான ஒத்துழைப்பு கொடுக்காதது தான்.

    ‘நான் என்ன புதுப் பெண்ணா?’ என்று சலித்துக் கொள்வதும், கணவனோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய படுக்கையை குழந்தைகளோடும், வீட்டிற்கு வரும் உறவுப் பெண்களோடும் பகிர்ந்து கொண்டு கணவனைப் பட்டினி போடும் போதும், அவனுக்குள் உங்கள் மீது வெறுப்பு ஏற்படத் துவங்கும்.

    உங்களைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு தான் மற்ற பெண்களை நாடுவான்.  அது அவனது வாழ்க்கையை மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையும் சீரழித்து விடும் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.  ஆகவே, எப்போதும் கணவனின் கண்களுக்கு அழகு தேவதைகளாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

    Dr Jeyarani
    – ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here