Home Common Health Problems கருவாக்க சிகிச்சைக்கு வருபவர்கள்

கருவாக்க சிகிச்சைக்கு வருபவர்கள்

242
0
SHARE

கருவாக்கம்

ருவாக்க சிகிச்சைக்கு வருபவர்கள், சிகிச்சைக்கு வரும் பிற நோயாளிகளிடம்கூட சேராமல் தனித்திருப்பார்கள். எதையோ பறிகொடுத்துவிட்டு வந்ததைப்போன்ற சோகம் அவர்கள் முகத்தில் இழையோடும்.

இதையெல்லாம் கவனிக்கும்போது, அவர்களுக்காக நாம் மனதளவில் துன்பப்படவேண்டி இருக்கும். நமது ஆதங்கத்தை அவர்களுக்குப் புரிய வைக்கவும் முடியாது. புரிய வைப்பதற்கான புத்தகங்களும், வழிகாட்டி நூல்களும் கிடையாது. அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் அவற்றை வாங்கிப் படிப்பவர்களும் குறைவு.

குழந்தை இல்லாத பிரச்னையை விபத்துபோல் தீவிரமாக கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களும், தீர்க்க முடியாத நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் தங்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைத்து அதன் மூலம் நிவாரணம் வேண்டும் என எதிர்பார்ப்பவர்களைப் போலவும் இரண்டு விதமாக நடந்துகொள்கிறார்கள்.

முப்பது வயதில் இருக்கும் ஒரு தம்பதியினர், குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுவதற்காக பத்தாண்டுகளாகக் கருத்தடைச் சாதனங்கள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி வந்ததாகவும், இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிற நேரத்தில் அதற்கான வாய்ப்பு குறைந்திருப்பதைப் பார்த்து தங்கள் மீதே ஆத்திரப்பட்டுக்கொள்வதாகவும் சொன்னார்கள்.

பத்தாண்டு காலத்தை வீணாக்கிவிட்டோமே, கருவாக்க சிகிச்சை மேற்கொள்வதற்கான ஆண்டுகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துவிட்டதே என்ற புலம்பலில், எப்டியாவது சீக்கிரம் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள உதவ வேண்டும் என்று என்னை அவசரப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

ஏதோ ஒரு கொடிய சோகம் அவர்கள் முகங்களில் எப்போதும் நிழலாடுவதை பார்க்க முடிந்தது. அவர்களிடம் டெம்ப்ரேச்சர் சார்ட், விந்து பரிசோதனை விவரம், சராசரியாக எத்தனை முறை உடலுறவு கொண்டார்கள் என்ற விவரம் ஆகியவற்றைக் கேட்டபோது அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

இருவரும் சிகிச்சைக்கு வந்த காலத்தில் இருந்தே ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதில்லையாம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்வதே இதற்குக் காரணம்.

இப்படி இருந்தால் எப்படி கருவாக்கம் சாத்தியமாகும்?

முதலில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து இரண்டு பேரும் சேர்ந்து தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தினேன்.

‘கருவாக்கம் செய்துகொள்ள வரும்போது இரண்டு பேருக்கும் நல்ல மனநிலை இருக்க வேண்டும். இரண்டு மனமும் ஒன்றையொன்று நம்புவதாக- ஒன்றுக்கொன்று ஆறுதலாக இருக்க வேண்டும். மனநலம் நன்றாக இருந்தால்தான் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் நலன் இடம் கொடுத்தால்தான் குழந்தைப் பேருக்கான வாய்ப்பு அதிகரிக்கும். மன இறுக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் என்ன சிகிச்சை செய்தாலும் குழந்தைப் பேரு வாய்ப்பு அரிதான ஓன்று என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்ற கவுன்சலிங்கை அன்பான ஆலோசனையாகச் சொன்னேன். அதற்குப் பிறகு சிகிச்சையில் நல்ல முன்னேற்றமும், அதற்கான சிறந்த பலனும் விரைந்தே கிடைத்தன.

இந்த அணுகுமுறை, மருத்துவருக்காக மட்டும் என நினைத்து விடாதீர்கள். கருவாக்கம் செய்துகொள்ள விரும்பும் கணவன்- மனைவி இருவருக்கும்கூடத்தான்.

ஒரு கருவாக்கம் வெற்றிகரமாக நடைபெற வேண்டுமானால் அதற்கான ஒரு திட்டம் இருக்க வேண்டும். அதை நான் வகுத்துள்ளேன். அந்தத் திட்டப்படி நடந்துகொண்டால் குழந்தைப்பேறு எளிது மட்டுமல்ல, நிச்சயமானதும்கூட.

அந்த சிகிச்சைத் திட்டம் என்பது, ஒரு ஐந்து அம்சத் திட்டமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here