Home Common Health Problems கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சியும் கருத்தரிப்பதும்

கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சியும் கருத்தரிப்பதும்

3408
0
SHARE

ரு பெண் கருத்தரிப்பதற்கு கருமுட்டை வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும்.  கர்ப்பப்பை கருக்குழாய், கர்ப்பவாய் சீராக இருக்க வேண்டும்.  அடுத்து முக்கியமானவை கருமுட்டைகள் வளர்வது, அதன் தன்மை இவை அனைத்தும் சீரான முறையில் இருந்தால் தான் ஒரு பெண்ணால் தாயாக முடியும்.

சில பெண்களுக்கு மாதவிலக்கு மாதாமாதம் சீராக வரும் ஆனால் மாதவிடாய் ஒருநாள் மட்டும் தான்  இருக்கும், சில பெண்களுக்கு திருமணமாகி கணவரின் விந்தணுக்கள் சரியாக இருக்கும்.  கருமுட்டை வளர்ச்சியும் சரியாக இருக்கும், கருக்குழாய்களும் அடைப்பு இல்லாமல் இருக்கும். இருந்தும் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் இருக்கும்.   இவ்வாறு இருக்கும் பெண்களின் கருமுட்டை வளர்ச்சியை கவனிக்கும்போதே கர்ப்பப்பையின் உள்சுவர் வளர்ச்சியையும் (Endometrium) கவனிக்க வேண்டும்.  அது சரிவர வளராமல் இருக்கும்.

சாதரணமாக ஒரு கரு கர்ப்பப்பையில் ஒட்டி வளர்வதற்கு (Implanation) கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சி போதுமான அளவு அதாவது 7 cm க்கு மேலாக இருக்கும் போது தான் கரு ஒட்டி வளர்வதற்கான சாத்தியமாகும்.  உலகளவில் இதைபற்றி பல ஆய்வுகள் நடக்கின்றன. ஒரு நல்ல கரு ஒட்டி வளர்வதற்கு கர்ப்பப்பையின் உள்சுவர் வளர்ச்சி போதுமானதாக இருந்தால் தான் ஒட்டி வளரும்.  பல பெண்களுக்கு இந்த உள்சுவர் வளர்ச்சி சீரான அளவில் வராததனால் கரு ஒட்டி வளராத நிலையில் கருத்தரிப்பு ஏற்படாது.

“Endometrial  Thickening Less than 7cm  இருந்தால் இதனால் குழந்தையின்மை உண்டாகும். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் 1-3% ஆவர்”

 

இந்த கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சி எவ்வாறு வருகிறது?

கருமுட்டைகள் வளரும் போது, அந்த கருமுட்டையில் இருந்து வெளியாகும் ஹார்மோன் ஈஸ்ட்ரோடியோல் (Estrodiol) என்னும் ஹார்மோன்  இந்த  ஈஸ்ட்ரோடியோல் (Estrodiol) ஹார்மோன் தூண்டுதலில் தான் இந்த கருமுட்டை வளர வளர கர்ப்பப்பையின் உள்சுவர்களில் உள்ள செல்கள் பெருகி, வளர்ச்சியாகி கர்ப்பப்பையில் உள்சுவர் தடிமனாகிறது.

கருப்பை உள்சுவர் நன்றாக வளர்வதற்கு என்ன தேவை?

கர்ப்பப்பை உள்சுவர் நன்றாக வளர்வதற்கு

  1. Estrodiol (ஈஸ்ட்ரோடியோல்) ஹார்மோன் சரிவர சுரத்தல் வேண்டும் மற்றும்
  2. கர்ப்பப்பையில் உள்சுவரின் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்
  3. கர்ப்பப்பைக்குள் கட்டியோ (Fibroid) அல்லது Synechiae (சைனிக்கே). ஒட்டியிருப்பது போன்றவை இல்லாமல் இருத்தல் வேண்டும்.  கட்டிகள்(Fibroid), Synechiae (சைனிக்கே) போன்று இருந்தால் இதனால் கருத்தரிப்பு கருமுட்டை வளரும் தன்மை பாதிக்கப்படுகிறது.

 

உள்சுவர் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளுவதற்கான காரணம் என்ன?

  • கர்ப்பப்பை தொற்றுக்கள் ( Endometriosis), குறிப்பாக டிபி (TB) அது பாதிக்கும் போது கர்ப்பப்பை உள்சுவர் இரண்டும் தொற்று ஆகி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்கிறது.
  • கர்ப்பத்தை கருக்கலைப்பு (Abortions)செய்வது, மற்றும் கர்ப்பப்பை சுத்தம் செய்வதில் தவறான முறையில் செய்வது, டி அன் சி (D & C) செய்யும்போது கர்ப்பப்பையில் உள்சுவரின் உள் அடுக்கு (Innermost Layer) அது அழிந்துவிடுவதினாலே, கருஒட்டி வளரும் தன்மை குறைந்து விடுகிறது (Innermost Layer) அழிந்துவிடுவதினால் ஸ்கேர் டிஸு (Scar Tissue) ஆகி சைனிக்கே போன்று உருவாகி ஒட்டிக்கொள்கிறது.
  • சில பெண்களுக்கு பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி குறைபாடு இருக்கும். குறிப்பாக சப்செப்டேட் யூட்ரஸ் (Subseptate Uterus), இரட்டை கர்ப்பப்பை (Bircornuate Uterus), (Unicornuate Uterus)  ஒரு பகுதி மட்டும் வளர்ந்து மற்றொரு பகுதி வளர்ச்சி அடையாமல் இருப்பது இப்படிப்பட்ட பெண்களுக்கும் கர்ப்பப்பை உள்சுவர் சரிவர வளராது.

 

 

கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சி அடையாத பெண்களுக்கு என்ன பிரச்சனைகள் எல்லாம் இருக்கும்?

  • மாதவிலக்கு மாதாமாதம் வருவது குறைவாக இருக்கும் அதுவும் மாதவிடாய் ஒரு நாள் மட்டுமே இருக்கும்.
  • வெள்ளைப்படுதல் இருக்கலாம்
  • வயிற்றுவலி அதிகமாக இருக்கலாம்
  • சரியான மாதவிலக்கு வராமல் இருக்கலாம்

இதை கண்டுபிடிப்பதற்கு அடிப்படை வழிமுறை என்ன?

  • உள்சுவர் வளர்ச்சியை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan) மூலமாக கண்டறியலாம். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan)  பார்க்கும் போது கருமுட்டை வளர்ச்சி பார்க்க முடியும், கருமுட்டை வளரும்போது, கருமுட்டை வளர்ச்சியின் அளவுக்கு இந்த கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சி போதுமான அளவு வளராமல் இருக்கலாம்.
  • எம்.ஆர்.ஐ பெல்விஸ் (MRI Pelvis) என்னும் ஸ்கேன் மூலமாக கண்டறியலாம்.
  • ஹைஸ்ட்ரோஸ்கோப்பி(Hysteroscopy) மூலமாக கண்டறியலாம். ஏன் கர்ப்பப்பை உள்சுவர் மெலிதாக இருக்கின்றது என்ற காரணத்தை கண்டறிய உதவும்.  அதற்கு காரணமானது

Synechiae (சைனிக்கே)

Scarring of Tissue(கர்ப்பப்பை உள்சுவர் ஒட்டி இருப்பது)

  • இதனோடு சேர்த்து Operative Hysteroscopy எனும் அறுவை சிகிச்சை மூலமாக இந்த உள்சுவர் ஒட்டிக்கொண்டிருப்பதை சீர் செய்யமுடியும்.

இந்த உள்சுவர் வளர்ச்சியால் வரும் பிரச்சனைகள் என்ன?

இந்த உள்சுவர் வளர்ச்சியின்மையால் ஏற்படும் பின்விளைவுகள் முக்கியமானது  குழந்தையின்மை.  இத்தகைய பெண்களுக்கு        IVF / ICSI   முறை படி செய்யும் போது கூட கர்ப்பப்பை உள் வளர்ச்சி மெலிதாக இருந்தால் கரு ஒட்டி வளரும் தன்மை குறைவாகவே இருக்கும்.

இதை சரிசெய்வது எப்படி?

  • சரியான கிருமி தொற்றுகளை கண்டுபிடித்து அதற்குரிய மருந்து மாத்திரைகளை கொடுப்பது
  • Hysteroscopy முறை அறுவைசிகிச்சை மூலமாக சரிசெய்தல்
  • மருந்துகள் முறைகளில் சரிசெய்தல் – இது வளர்ச்சி அடைவதற்கு பல மாத்திரை மருந்துகள் இருக்கின்றன. அவற்றையோ முறையாக கொடுப்பதன் மூலம் சரிசெய்யலாம்.  குறிப்பாக Viagara  மற்றும் உள்சுவர் இரத்த ஓட்டம் அதிகமாக்கும்  சில நல்ல மருந்துகள், செல் வளர்ச்சியை தூண்டுவதற்கான GSF என்ற நவீன மருத்துவம் மூலமாவும் உள்சுவர் வளர்ச்சியை தூண்டமுடியும்.

தின் எண்டோமெட்ரியோஸிஸ்(Thin Endometriosis):

Thin Endometriosis (தின் எண்டோமெட்ரியோஸிஸ்) என்றால் எண்டோமெட்ரியம்( Endometrium) மெலிதாக இருப்பது 7cm க்கும் கீலே இருப்பது.

 

உள்சுவர் வளர்ச்சியே அடையாத பெண்கள் (Thin  Endometrisos) குழந்தை பெறுவது எப்படி?

  • PRP Therapy (பி.ஆர்.பி தெரப்பி)
  • Stem Cell Therapy (ஸ்டெம் செல் தெரப்பி)
  • GSF infection Therapy (ஜி.எஸ்.எப் தொற்றுகள் முறை தெரப்பி)

இவை  மூன்றும் நவீன முறை சிகிச்சைகள் .  இவைகளை செய்வதன்மூலம் கர்ப்பப்பையில் உள்வளர்ச்சி வாய்ப்புகள் ஏற்படும், நல்ல முறையில் செய்ய முடியும்.

இந்த கர்ப்பப்பை உள்வளர்ச்சி சீராக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • அடிக்கடி கர்ப்பப்பை கருக்கலைப்பு மற்றும் கர்ப்பப்பை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்
  • கர்ப்பப்பை தொற்றுக்கள் வராமல் தடுக்க வேண்டும்
  • கர்ப்பப்பை தொற்றுக்கள் வந்தால் ஆரம்ப நிலையிலேயே மருந்து மாத்திரைகள் மூலமாக அதை நல்ல முறையில் சரி செய்ய வேண்டும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here