Home Common Health Problems குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகள் கவனிக்க வேண்டிய  9 விஷயங்கள்

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகள் கவனிக்க வேண்டிய  9 விஷயங்கள்

356
0
SHARE

‘எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுசெய்ய வேண்டும் என்கிறோம். அப்படி இருக்கையில், நம் சந்ததியை உருவாக்கும்  குழந்தைப்பேறு விசயத்தில் திட்டமிடுவது மிக அவசியம் அல்லவா?

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகள் கவனிக்க வேண்டிய 9 விஷயங்களை இங்கே தருகிறோம்.

#  கருத்தரித்தல் என்பது சாதாரணமான நிகழ்வல்ல. நல்ல சந்ததியை சமூகத்துக்கு அளிக்கும் பொறுப்பு அது. அதை நிறைவுடன் செய்ய, தம்பதி இருவரும் தேவையான உடல், மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

# . ”பெண்ணின் உடல் எடையைக் கொண்டு பி.எம்.ஐ எனப்படும் பாடி மாஸ் இண்டக்ஸை கணக்கிடுங்கள். அது 30-க்கு மேல் இருந்தால் ஒபிஸிட்டி; 25ஐ தொட்டாலே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட முயற்சிகளால் சரியான எடைக்குத் திரும்பிய பின், கருவுருதல் நிகழ்ந்தால் நல்லது.

#  பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருந்தால் மாதவிலக்கு சுழற்சியும் முறையற்றுப் போகலாம். மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாதவர்கள் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று சுழற்சியை சீராக்கிய பின் கருத்தரிக்கலாம்.

#  தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் கருச்சிதைவு ஏற்படலாம் அல்லது குழந்தை பிறந்த பின் அறிவுத்திறன் பாதிக்கப்படலாம். கருத்தரிப்பதற்கு முன் தைராய்டு பிரச்சனை இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, அதைக் கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

#  சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தாய்க்கு ஏற்படும் விட்டமின் குறைபாடு குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, விட்டமின் குறைபாட்டில் இருந்து வெளிவர வேண்டும்.

#  மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தரிப்பதற்கு முன்னர் ருபெல்லா மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் போட வேண்டும்.

#  ஆண், பெண் இருவரும் ‘உடலளவிலும், மனதளவிலும் நாம் ஃபிட்டாக இருக்கிறோமோ’ என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு கருத்தரிக்க வேண்டும். மனரீதியாக, உடல்ரீதியாக குழந்தையை  சுமப்பதற்கான திறனை பெண் பெற்றிருப்பது அவசியம்.

#  உடலளவில் கணவன், மனைவி இருவருக்கும் தொற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு இருப்பின் அது குழந்தையை பாதிக்குமா, எந்த வகையில் பாதிக்கும் என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.

#  வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் விடுமுறை எத்தனை நாட்கள் கிடைக்கும், எவ்வளவு வாரங்கள், மாதங்கள் குழந்தையுடன் இருக்க முடியும், ஒருவேளை பணிக்குச் செல்ல நேர்ந்தால் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கான மாற்று ஏற்பாடு என்ன, அது குழந்தைக்குப் பாதுகாப்பானதா என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள்.

  • மஞ்சுளா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here