Home Women Part பெண் – பாகம் – 25

பெண் – பாகம் – 25

259
0
SHARE

ஸ்கேபிஸ் :

ஸ்கேபிஸ் என்ற ஒட்டுண்ணியால் வர கூடிய  பால்வினை  நோய்  இது . இந்த  கிருமியை  மைக்ராஸ் கோப்பின் கீழ் பார்த்தால் ஆமை  போன்ற  தோற்றத்தில்  இருக்கும்.

ஆண்  பூச்சியைவிட  பெண்  பூச்சி பெரிதாக இருக்கும். ஒரே சமயத்தில்  ஐம்பது முட்டைகள் வரை  இட்டு  பொறிக்கும் தன்மையுள்ள  இந்த  கிருமியின்  வசிப்பிடம்  தோலின் நடு அடுக்கு
பகுதியாகும்.

ஆண்களின்  பூப்பு  பகுதிகள் , வயிறு , புட்டத்தின்  அடிபகுதியில் வாழும்  இப்பூச்சிகள்  பெண்ணின்  பூப்பு பகுதியில் வாழாது.  பிறப்புறுப்பு , அவற்றின்  மடிப்பு  தசைகள் , மார்பகங்கள் , காம்புகள் , வயிறு  மற்றும்  புட்டத்தின்  கீழ்  பக்கம் , கை,
கால் விரல்களின்  இடையேயுள்ள தோல், மணிக்கட்டுகள் , அக்குள் , இடுப்பு, தவிர  அரிதாக  உள்ளங்கை, உள்ளங்கால் ஆகிய  இடங்களில் வாழும் . பெண்  பூச்சியை விட  ஆண்  பூச்சி  மிகவும்  பாவமானது .  பெண்  பூச்சியுடன் பாலுறவு கொண்டு  அதை  கர்ப்பமாக்கிய  உடனேயே  இறந்து  போகும்.

கர்ப்பமான  சில  மணி  நேரத்திலேயே  பூச்சிகள்  முட்டையிட தொடங்கும. முட்டைகள்  பொரித்து பத்து  நாட்களுக்குள்  முதிர்ந்த  ஒட்டுண்ணியாக  மாறிவிடும் . ஒவ்வொரு  பூச்சியும்  சுமார்  ஆறு முதல்  எட்டு  வாரங்கள்  வரை  முட்டையிடும் . மூன்று  மாதத்தில்  ஒட்டுண்ணிகளின்  எண்ணிக்கை  ஒன்னரை  கோடியாகும் .

பாலுறவினால் மட்டுமின்றி, அவருடன்  ஏற்படுத்தி கொள்ளும்  பிறவகை  தொடர்பினாலும்  இந்த நோய்த்தாக்கம்  ஏற்படுகிறது . நோய்  தொற்றுஉள்ளவரோடு படுத்து கொள்ளுதல் , அவர்களது உடைகளை  மாற்றி  உடுத்துதல்,
அவருடன்  கை  குலுக்குதல் , அவர்  பயன்படுத்தும்  கழிப்பறைகளை  பயன்படுத்துதல் ,  கூட்ட  நெரிசலுள்ள  பகுதிகளில்  நோய்  தொற்றுஉள்ளவரிடம் ஏதேனும் உடல்  தொடர்பு , தம்பதியா  இரவு  முழுவதும்  ஒன்றாக  படுத்திருத்தல்  போன்றவற்றால்
கிருமிகள்  தோற்றுகின்றன.

அறிகுறிகள் :

சொறிப்பூச்சிகள்  தோற்றிய  சுமார்  ஒரு  வாரத்தில் நோய்  தொற்றுக்கான  அறிகுறிகள்  தோன்றும்.இரவிலும்  மாலை  நேரத்திலும்  தீவிரமான  அரிப்பு  இருக்கும். இதனால் தான்  சிலர்  பொது  இடங்களில்கூட  தொடை  இடுக்கில்  சொரிந்து  கொள்வார்கள். சிலரது  கைகள்  எப்போதும்  பேண்டு பாக்கெட்டுக்குள்ளயே  இருக்கும்.
நமைக்கின்ற  இடத்தை  பார்த்தால்  சிவப்பு  மற்றும்  பழுப்பு  நிற கொப்புளங்கள் , சீழுடனோ, சீழ் இல்லாமலோ  இருக்கும் .நோயாளி  சொரிந்து  கொள்வதால்  அந்த இடத்தில  புண் வரும் .

சிகிச்சைகள் :

எப்போதும்  துணிகளை  உலர்  சலவை  செய்ய வேண்டும். துணிகளை துவைத்த  பிறகு  நன்றாக  கொதி  நீரில்  அலச  வேண்டும்.நோய்  தொற்றை  உண்டாகும். காரணிகளுடனான  தொடர்பை  தவிர்த்து விட  வேண்டும் . சிகிச்சை  முடியும்வரை  நெருக்கமான  உடல்  தொடர்புகளை  தவிர்த்து விட  வேண்டும் . குடும்பத்தார்  அனைவரும்  மருத்துவ  சிகிச்சை  பெற வேண்டும் . குடும்பத்தார்அனைவரும்  மருத்துவ  சிகிச்சை  பெற வெண்டும் . சிகிச்சைக்கு  பிறகும்  ஓராண்டு  வரை  அறிகுறிகள்  நீங்காமல்  இருந்தால்  பரிசோதனைகளும், மேல்  சிகிச்சையும்  அவசியம் , அப்போதுதான்  இந்த  நோய்  தொற்றை  முற்றிலுமாக  களைய  இயலும் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here