Home pregnancy குழந்தைப்பேறு

குழந்தைப்பேறு

281
0
SHARE
சிகிச்சைக்குத் திட்டமிடுதல்- விருப்பத்தை நிறைவேற்றும் வழிகளை அறிதல்
கர்ப்பத்துக்கு என்ன விலை?
பலர், சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று டாக்டரைக் கேட்டு நச்சரிப்பார்கள். இதை முதலிலேயே தீர்மானிக்க முடியாது. பிரச்னையின் தன்மை, அளவு, அதற்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றைப் பொறுத்துதான் கட்டணம் அமையும். பல நாட்கள்வரை சிகிச்சைக்கு வரவேண்டி இருப்பதால் பணி இழப்பும், வருமான இழப்பும் கூட ஏற்படலாம்.
முட்டை வெளியானதை அறிந்து உடலுறவு கொண்டிருந்தால் மறுநாள் காலையே மருத்துவரை வந்து பார்க்க வேண்டும்.
ஊசி போடவேண்டி இருந்தால், மருத்துவமனைக்கு வர வேண்டும். அறுவைச் சிகிச்சை இருந்தால் அலுவலகத்துக்கு லீவு போட வேண்டும். இதனால், பண இழப்பு சற்று கூடுதலாக இருக்கும்.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்குப் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். லீவு போடுவதால் சம்பளப் பிடித்தம், பதவி உயர்வு கிடைக்காமை, பணி இழப்பு போன்றவைகூட நேரிடலாம்.இதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், இந்தப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்த இயலும்.

ஒவ்வொரு பரிசோதனைக்கும் எவ்வளவு செலவாகும்? எது அத்தியாவசியம் என்பதையெல்லாம் முன்னதாகவே மருத்துவரிடம் கேட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.திட்டமிடாமல் ஆர்வத்தில் சிகிச்சைக்கு வந்துவிட்டு பாதியில் போய்விடுவதால் பணம் மற்றும் நேர இழப்புதான் மிஞ்சும். இதைத் தவிர்க்க முன்னதாகவே திட்டமிட வேண்டும்.

 
சிகிச்சைக்கு வரும் முன்னதாகவே எப்படி சிகிச்சைத் திட்டத்தை, சம்பிரதாயங்களுக்கு ஏற்ப மேற்கொள்வது என்று தீர்மானித்துக்கொள்ளவும்.
 ‘விந்துப் பரிசோதனை செய்ய வேண்டும். சுய இன்பத்தின் மூலம் விந்தை சேகரித்துக் கொடுங்கள்’ என்று டாக்டர் சொன்னால், ‘கடவுளுக்கு விரோதமான செயல். அவ்வாறு நான் செய்யமாட்டேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்க கூடாது. மாற்று வழி என்ன என்பதை முன்னதாகவே யோசிக்க வேண்டும்.
இன்றைக்கு பிரதோஷம், அமாவாசை, ஏகாதசி என்றெல்லாம் காரணம் காட்டுவதை விட்டுவிட்டு, அப்படி ஒரு கட்டத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here