Home pregnancy குழந்தைப்பேறு

குழந்தைப்பேறு

183
0
SHARE

சிகிச்சைக்குத் திட்டமிடுதல் – விருப்பத்தை நிறைவேற்றும் வழிகளை அறிதல்

சிகிச்சையை எப்போது நிறுத்தலாம்?

வெற்றிகரமாக கருவாக்கம் ஆகும்வரை சிகிச்சையைத் தொடருவதுதான் நல்லது. சிலர், ‘மூன்று முறை முயற்சிக்கிறேன் அல்லது ஆறு முறை முயற்சிக்கிறேன். அதில் முடியாவிட்டால் நிறுத்திக்கொள்கிறேன்….’ என்று முன்னதாகவே சொல்லிவிடுவார்கள்.

சிலர், சிகிச்சை நடக்கும்போதே, ‘இனிமேல் என்னால் தொடர முடியாது, நிறுத்திக் கொள்கிறேன்’ என்று சொல்வதும் உண்டு. பாதியில் சிகிச்சையை நிறுத்திவிட்டுப் போவதைவிட, திட்டமிட்டுக்கொண்டு வருவதுதான் நல்லது.

பிரச்னையின் தன்மையைத் தெரிந்துகொண்டு, அதைத் தீர்க்கும் வழிகளையும் தெரிந்துகொண்டு, இயற்கையாக அல்லது சுலபமாகக் கருத்தரிக்கும் வாய்ப்பையும் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இதிலெல்லாம் முடியாது என்பது தெரிந்தால் சோதனைக்குழாய் குழந்தை சிகிச்சைக்குத் திட்டமிட வேண்டும். முதலிலேயே என்பது  இலக்கை விரைந்து அடைவதற்கு எளிதாக இருக்கும்.

திட்டமிட்டுச் செயல்பட்டால் மகிழ்ச்சியின் எல்லையை விரைவாகவும் எளிதிலும் தொட்டுவிடலாம். குழந்தைப்பேறு சீக்கிரம் வாய்க்கும். இல்லாவிட்டால், இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கவேண்டி இருக்கும்.

 

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here