Home Diabetes சர்க்கரை நோய் பகுதி – 28

சர்க்கரை நோய் பகுதி – 28

358
0
SHARE

இன்சுலின் சார்ந்த நிலை (டைப் – 1)

சிறுவர்கள் மற்றும் டீன் ஏஜ் வயதினருக்கு வரும் சர்க்கரை நோயே டைப்-1 வகை
இந்த நோய்க்கான அறிகுறிகள் திடீரென்று தோன்றும். பரிசோதனைகள் மேற்கொண்டு, இந்தப் பிரச்சனை இருப்பதைத் தெரிவித்தால் நோயாளியும், அவருடைய பெற்றோரும் அதிர்ச்சிக்குள்ளாகிவிடுவார்கள்.
பெரியவர்களுக்கு வரும் சர்க்கரை நோய்க்கும் (டைப்-2), சிறுவர்களுக்கு வரும் சர்க்கரை நோய்க்கும் வித்தியாசம் உண்டு.
கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பாகங்கள், ஏதோ ஒரு காரணத்தால் அழிக்கப்படுவதால், உடலுக்குத் தேவையான இன்சுலினை உடலால் உற்பத்தி செய்துகொள்ள முடியாத நிலை உருவாகி இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இதை ஆட்டோ இம்யூன் டிசீஸ் என்றும் சொல்கிறார்கள்.
நம் உடலில் நோய்க் கிருமிகளை அழிப்பதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது. சுற்றுசூழல் காரணிகள், பரம்பரை போன்றவற்றின் எதிர்மாறான தாக்கத்தால், நமது உடலுக்குள் இருக்கும் கணையச் சுரப்பியில் உள்ள பீட்டா செல்களைப் பாதுகாப்பு அணுக்கள் எதிரியாக நினைத்து, சில பல காரணங்களால் அழித்துவிடுவதால், உடலில் இன்சுலின் சத்து இல்லாமல் போய்விடுகிறது.
அதேபோல், பல காரணங்களால், கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களில் கோளாறு ஏற்படுதல் அல்லது கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பாகங்கள் அழிந்து விடுவதால் இது தோன்றுகிறது. இதை டைப்-1 வகை சர்க்கரை நோய் என்று சொல்வார்கள். சர்க்கரை நோயாளிகளில் சுமார் 5 சதவீதத்தினர் மட்டுமே இந்த வகையால் பாதிக்கப்படுகிறார்கள்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு, இன்சுலின் சத்து குறைந்த அளவிலாவது இருக்க வேண்டும். ஆனால், இள வயது சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் சுரப்பு முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு, உடலால் சர்க்கரையை உருவாக்க இயலாத நிலை உண்டாகிவிடுவதால், இன்சுலின் மருந்தை ஊசியாகப் போட்டுகொண்டால் மட்டுமே அன்றாட வாழ்க்கை நகர முடியும் என்ற அவலநிலை உண்டாகிவிடும்.
டைப்-1 வகை சர்க்கரை நோய்க்குக் காரணமான பல்வேறு ஜீன்கள் மற்றும் எண்ணற்ற வைரஸ்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். ஆனால், சர்க்கரை நோயை எந்தப் பொருள் குறிப்பாக உருவாக்குகிறது என்ற விஷயம் மட்டும் என்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கிறது.
நோயாளிகளுக்கு இன்சுலினை கொடுத்தாலன்றி ரத்தச் சர்க்கரை அளவு குறையாது. அதைச் சார்ந்தே அவர்கள் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. இவர்களுக்கே சர்க்கரை நோய் சார்ந்த பெரும் பாதிப்புகள் நிகழ்கின்றன.

ஆனால், பெரியவர்களுக்கு வரும் சர்க்கரை நோய் அப்படியில்லை. இன்சுலின் சுரக்கும். ஆனால், அது போதுமானதாக இருக்காது அல்லது சரியாகச் செயல்படாது. இதனால் ஏற்படுவதுதான் சர்க்கரை நோய். இவர்கள் குறையை நிறைவு செய்ய ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். இளம் வயது சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசியைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும். மாத்திரைகள் பலன் தராது. அதுபோன்ற நிலை இவர்களுக்குக் கிடையாது. மாத்திரைகளே போதுமானது.
உங்கள் குழந்தையின் உடல் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தால், முதலில் சர்க்கரைப் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு வரும் சர்க்கரை நோயை, இன்சுலின் சார்ந்தது அல்லது இன்சுலின் டிபெண்டன்ட் (டைப்-1) என்று சொல்லலாம்.
இதைத் தவிர, சர்க்கரை நோயில் மேலும் மூன்று வகைகள் இருக்கின்றன. அவை,

1. இன்சுலின் சாரா நிலை(நான் இன்சுலின் டிபெண்டன்ட்)
2. குறைபட்ட சர்க்கரை ஏற்பு நிலை (இம்பெய்ர்ட் குளுக்கோஸ் டாலரன்ஸ்)
3. கணைய நோய் (பான்கிரியாடிக் டயாபடிஸ்)
இந்த மூன்று வகைகளைப் பற்றி ஒவ்வொன்றாக நாளை பார்க்கலாம்.

 


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here