Home pregnancy குழந்தைப்பேறு 

குழந்தைப்பேறு 

32
0
SHARE
குழந்தையின்மை சிகிச்சையில் சரியான மருத்துவரை கண்டுபிடித்தல்
மருத்துவரிடம் கேட்க வேண்டியவை
பார்த்துப் பேசியதுமே ஒரு மருத்துவரின் அனுபவம், திறமை ஆகியவற்றை எப்படியும் தெரிந்துகொள்வீர்கள் என்றாலும், முதல்முறை மருத்துவரிடம் போகும்போது என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்று ஒரு பட்டியலைத் தயாரித்துக்கொள்ளுங்கள்.
கேட்கத் தகுந்த கேள்விகள்
மருத்துவரைப் பற்றி…
* இந்தத் துறையில் எத்தனை ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்?
* இந்தப் பிரச்னையை நீங்களே தீர்த்துவிடுவீர்களா? வேறு துறை மருத்துவர்களையும் உடன்
  சேர்த்துக்கொள்வீர்களா?
* கருத்தரித்தால் பிரசவம் வரை நீங்களே பார்ப்பீர்களா? வேறு பெண் நோயியல் மருத்துவரிடம் அனுப்பி
  வைப்பீர்களா?
* ஆய்வக வசதிகள் இங்கே இருக்கின்றனவா? அல்லது பரிசோதனைகளுக்கு வெளியில் செல்ல வேண்டுமா?
* சிகிச்சை எனக்கு மட்டுமா? எனது துணைக்குமா?
* எனது பிரச்னைகளைப் பற்றி நீங்கள் செய்யும் பரிசோதனை மற்றும் மெடிக்கல் ரிப்போட்டுகளை எனக்குத்
  தருவீர்களா?
* குறைபாடு இல்லாத குழந்தை பிறப்பதற்கான நவீன சிகிச்சைகள் உள்ளனவா?
* கருப்பைக்கு வெளியே நடக்கும் கருவாக்கம் இந்த மருத்துவமனைக்குள் நடக்குமா? அல்லது வேறு
  மருத்துவமனையில் கருவாக்கம் செய்து அதைக் கொண்டுவந்து பொறுத்துவீர்களா?
* உங்கள் மருத்துவமனையில் இந்தப் பிரச்னைக்காக எத்தனை பேர் வெற்றிகரமாகச் சிகிச்சை பெற்றார்கள்?
* நீங்கள் தகுதியான மருத்துவரா? என்லிஸ்டட்டாக்டரா?
பரிசோதனைபற்றி
* இது என்னவிதமான பரிசோதனை முறை?
* இதன் மூலம் நீங்கள் எதைத் தெரிந்துகொள்வீர்கள்?
* என்ன ரிசல்ட் எதிர்பார்க்கிறீர்கள்?
* எவ்வளவு டைம் பிடிக்கும்?
* செலவு என்ன?
* இது உடலுக்கு தீங்கு, காயம் ஏதேனும் விளைவிக்குமா?
* பரிசோதனைக்கு பின் ஏதேனும் அறிகுறிகள் தோன்றுமா?
* இதை உங்கள் மருத்துவமனையிலேயே செய்வீர்களா? அல்லது வேறு மருத்துவமனைக்குப்
  போகவேண்டுமா?
* எனது இணையும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமா?
* பரிசோதனைக்குப் பிறகு வீடு அல்லது அலுவலகத்துக்கு நான் போகலாமா?
* எத்தனை முறை இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டி இருக்கும்?
* இதனால் எங்கள் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமா?
மருந்து, மாத்திரை பற்றி
* என்ன ரிசல்ட் எதிர்பார்க்கிறீர்கள்?
* எதுவரைக்கும் இதை சாப்பிட வேண்டும்?
* இதன் விலை என்ன?
* இதை வெளியே போகும்போது எடுத்துச் செல்லலாமா? எத்தனை வேளை சாப்பிட வேண்டும்?
* விட்டுவிட்டு சாப்பிட்டாலோ தாமதமாக சாப்பிட்டாலோ என்ன ஆகும்?
இப்படிப் பல விஷயங்களை, மறக்காமல் நீங்கள் கண்டிப்பாக அவரிடம் கேட்க வேண்டும்.
மருத்துவத் திட்டம் பற்றி பேச வேண்டும்
முதல் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்ற நான்கைந்து வாரங்களிலேயே உங்களுக்குத் தேவையான சிகிச்சை பற்றிய ஒரு வரையறை வந்துவிடும். அதற்கேற்ப மருத்துவரிடம் ஒத்துழைத்து சிகிச்சையை வெற்றிகரமாக்கப் பாடுபட வேண்டும்.
சிகிச்சைத் திட்டத்தை மருத்துவர் மாற்றுகிறார் என்றால், அதற்கான காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றினால், தயங்காமல் உடனேயே கேட்டுவிடுங்கள். அதுதான் நல்லது.
 
ஒரு போன் பேசினால்கூட, எவ்வளவு ஆனது என்பதை பார்க்கிறீர்கள்? கரண்ட் பில் எவ்வளவு ஆகியிருக்கிறது? ஆட்டோ மீட்டர் எவ்வளவு காட்டுகிறது என்று எப்படி பொறுப்பாகப் பார்க்கிறீர்கள். அப்படித்தான் சிகிச்சை மற்றும் மருத்துவரின் அணுகுமுறையைப் பார்த்து, கேட்க வேண்டிய விஷயங்களை கேட்டு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சிகிச்சை தொடர்பான விஷயங்களை டாக்டரிடம் தாராளமாகப் பேசலாம். பேசாத, பொறுமையின்றி எரிச்சல் அடைகிற மருத்துவரிடம் அதைப்பற்றி விளக்கம் கேளுங்கள். வெளியில் படித்த, கேட்ட தகவல்களை வைத்துக்கொண்டு, எல்லாம் தெரிந்ததைப்போல் கேட்பது சரியான முறையல்ல.
கருவாக்கம் பற்றி நீங்கள் அறிய விரும்பும் தகவலை முன்னதாக மருத்துவர் கொடுத்துவிட்டால், உங்களுக்குக் குழந்தைப்பேறு வாய்க்கும் வழியை நீங்கள் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here