Home pregnancy குழந்தைப்பேறு

குழந்தைப்பேறு

972
0
SHARE

ஆண்கள் கருவாக்கப் பிரச்னைகள், தீர்வுகள்
ஆண்கள் – குழந்தைப் பேறின்மை
ங்களிடம் சிகிச்சை பெரும் ஓட்டப்பந்தய வீராங்கனை ஒருவர் தன் கணவருடைய பரிசோதனை ரிசல்டை வாங்கிச்செல்ல வந்திருந்தார்.

அவருக்கு உயிரணுக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, விந்தில் உயிரணுக்கள் இல்லை. இந்தத் தகவலைச் சொன்னதும், அவர் விருட்டென எழுந்து கொண்டார். ‘ஒண்ணுமே இல்லையா? அதுக்காக இத்தனைப் பிராயசித்தம்? இத்தனை பரிசோதனைகள். இனி எப்படி குழந்தை பெற்றுக்கொள்வேன்? என்று விரக்தியோடு பேசினார் அந்தப் பெண்.

‘இதுவரை செய்த பரிசோதனை முடிவில், உங்களுக்குக் கருப்பை உள்வரிச் சவ்வில் பிரச்னை இருந்ததால், குழந்தைப்பேறு வாய்க்கவில்லை என்பது தெரிந்தது.

இப்போதுதானே உங்கள் கணவர் முதன்முறையாகப் பரிசோதனைக்கு வந்திருக்கிறார். அவருக்கும் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது. ஒரேயடியாக சேர்ந்து அலுத்துக்கொண்டால் எப்படி? நீங்கள் இருவருமே சேர்ந்து சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளலாம்’ என்றேன். பாதகமாக ஒரு ரிசல்ட் வந்தாலே, சிகிச்சை பெறுபவர்கள் உடனே டென்ஷனாகி கோபத்தில் எதையாவது சொல்வார்கள்.

ஒரு டெஸ்டில் ரிசல்ட் நெகடிவ்வாக வந்திருக்கிறது என்றால், உடனே அதை வைத்துக்கொண்டு சிகிச்சையை மருத்துவர்கள் ஆரம்பித்துவிடக் கூடாது. ஆரம்பிக்கவும் மாட்டார்கள். ஏனெனில், அந்தப் பரிசோதனையில் விந்து சேகரிப்பில் ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். விந்து மாதிரியைக் கையாளுவதில் கோளாறு இருந்திருக்கலாம். ஆய்வகத்தில் பரிசோதனை முடிவுகள் தவறுதலாக அறிவிக்கப்பட்டு இருக்கலாம். இப்படி நிறைய விஷயங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

எல்லோருக்கும் இப்படித்தான் ஆகுமா என்றால், கண்டிப்பாக ஆகாது. பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, இன்னொரு பரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை. இதற்கான கட்டணமும் அதிகம் கிடையாது.

இதை விளக்கிக் கூறிவிட்டு, ‘இன்னொரு முறை இதே பரிசோதனை செய்வோம். என்ன மாதிரியான பிரச்னை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கான சிகிச்சையை ஆரம்பிக்கலாம். இதற்காக, கோபித்துக்கொண்டு வெளியேறுவது, அலுத்துக்கொள்வது என்று இருந்தால் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது?

பிரச்னை இருக்கும் என எதிர்பார்த்துதானே சிகிச்சைக்கு வருகிறீர்கள். பிரச்னை இருப்பது உறுதியானால் அதற்காகக் கோபித்துக்கொள்கிறீர்களே இது நியாயமா?’ என்று சொன்னதும், ‘சரி டாக்டர், இப்படியாகிவிட்டதே என்ற பதற்றத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்’ என்றார் அந்தப் பெண்.

அவரது கணவர் சுலபத்தில் சமாதானமாகவில்லை என்பதும், அவர் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறார் என்பதையும், அவரது குனிந்த தலை உணர்த்தியது.

‘மிஸ்டர், விந்துப் பரிசோதனை என்பது, தற்போது உள்ள விந்தின் தன்மை, விந்தணுக்களின் நிலை, அவற்றின் ஊர்ந்து செல்லும் திறன், விந்து திரவத்தின் அடர்த்தி போன்றவை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கானது தான்.

நீங்கள் வெளிப்படுத்தும் விந்துத் திரவத்தில் போதுமான அளவு உயிரணுக்கள் இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்தப் பரிசோதனை, இந்தப் பரிசோதனையில் என்ன தெரிகிறது?

மிகக் குறைந்த விந்துத் திரவத்தை வெளியேற்றினீர்களா? மேலும், இதில் உயிரணுக்களே இல்லை, நீங்கள் போதுமான விந்து கொடுக்கத் தவறி இருப்பீர்கள் அல்லது விந்து கொடுத்து நேரமாகி இருக்கலாம். ஆகவே, சோர்ந்து போகக்கூடாது.

விந்து நாளத்தில் அடைப்பு இருந்தால் உயிரணுக்கள் வெளியேறாது. திரவம் மட்டும்தான் வெளியேறும். உற்பத்தியாகும். அணுக்கள் உள்ளேயே அடைபட்டுக் கிடைக்கலாம் அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம். இதை இன்னொரு டெஸ்ட் அல்லது கூடுதலாக மறு டெஸ்ட் எடுத்து பார்க்கலாம்.

முதல் டெஸ்ட்டிலேயே சோர்ந்துவிடக் கூடாது. ரிலாக்ஸ். அடுத்து பார்க்கலாம். பரிசோதனை தவறாக இருந்தால் சரி செய்துகொள்ளலாம்’ என்று எடுத்துச் சொன்னபோது, திருப்தி அடைந்தவராக சரியெனத் தலையாட்டினார்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here