Home question and answer என் கேள்விக்கு என்ன பதில்

என் கேள்விக்கு என்ன பதில்

249
0
SHARE

கேள்வி ?

உண்மையில் பெண் என்னதான் விரும்புகிறாள் ?

பதில் :

தன் கணவர் தன்னை முழுமையாக உணர்ந்து தன் உணர்வுகளை மதித்து ஆழ்ந்த அன்பு செலுத்த வேண்டுமென எதிர் பார்க்கிறாள் . மேலும் நெருக்கம் , அன்பு தோழமை , தன்னுடைய சுக துக்கங்களில் முழுமையாக பங்கெடுத்தல் ஆகியவற்றை கணவனிடம் இருந்து விரும்பி எதிர்பார்க்கின்றாள் .

பெண் , தன்னை பற்றிய கணவனுடைய நல்ல எண்ணத்தை அவ்வப்போது வெளிக்காட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறாள் . தன அறிவு , ஆற்றலை பாராட்டிக்கொண்டே இருக்க வேண்டுமென நினைக்கிறாள் . மேலும், கணவன் தன்னுடன் காதலுணர்ச்சி (ரொமாண்டிக் )
மிக்கவனாக இருக்க வேண்டுமென விரும்புகிறாள் . பாலுறவு கொள்ளும் போது அன்புடன் , மன
நெருக்கத்துடன் , ஆளுமையுடன் , தன்னுடைய உணர்வுகளை மதித்து நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறாள் .

இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறாமல் பல பெண்கள் விரக்தியே அடைகின்றனர் . ஏனெனில் , தாங்கள் விரும்பும் மெல்லுணர்வுகள் கணவனிடம் இல்லாததையும், தங்களை அவன்
அவ்வப்போது குறை கூறுவதையும் அவர்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை . எனவே மனைவிக்கு தனது கணவர் செக்ஸ் வைத்து கொள்ள விரும்புவது தெரிந்தாலும் அந்த ஒருவகையில் மட்டுமே தனது கணவர் தன் மீது ஈடுபாடு காட்டுகிறார் என்பதால் மனைவி வெறுப்புடன் இருக்கிறாள் .

காதலுணர்ச்சி உள்ளவனாக இருப்பது எப்படி என்பதில் இருக்கும் குழப்பமும் , அதை வெளிப்படுத்துவதில் உள்ள சங்கடமும் , தங்களுக்குள் இருக்கும் சிக்கல்கள் புரியாததாலும் ,
அதை எப்படி தீர்ப்பது என்பதை அறியாததாலும் , பெண்களை ஆண்கள் புதிராக நினைக்கின்றனர்

மனைவியோடு மனம் விட்டுப்பேசி அவளுடைய எதிர்பார்ப்புகளை முழுமையாக புரிந்து கொண்டு நடந்தாலே பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . ஆனால் , ஆண்கள் அதற்கு தயாராக இல்லை என்பதுதான் அனைத்து பிரச்சனைகளுக்கான ஆணிவேர் . திருமணத்துக்கு பின்பும் காதலித்து பாருங்கள் , தாம்பத்யம் கசக்கவே கசக்காது.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here