Home Diabetes சர்க்கரை நோய் பகுதி – 66

சர்க்கரை நோய் பகுதி – 66

423
0
SHARE

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மன இறுக்கம்

வளர்ந்து வரும் நாகரிக வளர்ச்சி, மாறி வரும் சமுதாயச் சூழல், வேலையில்லாத் திண்டாட்டம் முதல் முக்கிய நிகழ்ச்சிகளான திருமணம், விவாகரத்து, ஓய்வு, குடும்பத்தில் மரணம், குழந்தைப் பிறப்பு, வேலையிழப்பு, முக்கியப் பிரமுகருக்காகக் காத்திருத்தல், போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தல், எதையாவது மறந்துவிட்டு தேடுதல் அல்லது தொலைத்துவிடுதல், விவாதங்கள் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனிதனின் உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கின்றன.

மனிதனின் ஸ்திரத்தன்மை, புதிய சூழல்கள், எதிர்ப்புகள் என்று எதிர்மறையான ஒன்றை எதிர்கொள்ள நேரிடும்போது, பதற்றத்தால் சீர்கொலைந்து, மன இறுக்கம் உண்டாகிறது.

மன இறுக்கம் நமது அன்றாடச் செயல்பாடுகளை முடக்கி விடுகிறது. உடல் மற்றும் உள்ளத்தின் நலன்களையும் வெகுவாகப் பாதிக்கிறது.  மன இறுக்கம் ஏற்படும்போது, எதிலும் மனம் ஒன்றாத நிலை உண்டாகும்.  இதனால், கடுமையான தலைவலி, வயிற்று வலி, விரக்தியான மனநிலை, கோபம், ஒவ்வாமை போன்ற தொல்லைகள் உண்டாகும்.

மன இறுக்கத்தால் இதயம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்று கேட்கலாம். நேரடியான பாதிப்பைவிட மறைமுகப் பாதிப்புகள் அதிகம்.

இப்படி, ஒவ்வொரு செயலுக்கும் மன இறுக்கத்துக்கும் ஒரு நெருக்கம் இருப்பதைப் பார்க்கலாம்.  ஆக, மன இறுக்கத்தால் உணர்ச்சிகளுக்கும், பழக்கங்களுக்கும் ஆளாகும்போது, ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன.  சர்க்கரை நோயின்போது இந்தப் பாதிப்பின் அளவு அதிகமாகிறது.

புகைப் பிடிக்கும்போது, இதயத்துக்கு ஆக்சிஜனைவிட கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகமாகக் கிடைக்கிறது.  இதனால், ஆக்சிஜனுக்காக ஏங்கும் இதயத்தில் குத்தல் வலி எடுக்கும், இந்தக் குத்தல் வலிக்கு ஆஞ்சைனா என்று பெயர்.

இதை, புகைப்பழக்கம் அதிகமாகத் தூண்டுகிறது.  இதைப் ஒன்றாக ஒட்டிக்கொள்ளும். ஏற்கெனவே கொழுப்பு போன்ற பிரச்சனைகளால் பாதி அடைபட்டிருக்கும் ரத்த நாளத்துக்குள் செல் தட்டுகளும் ஒட்டிக்கொண்டுவிட்டால் என்ன ஆகும்? ரத்த நாள அடைப்பு உண்டாகி மாரடைப்பு ஏற்படும்.

மன இறுக்கம் உண்டாகும்போது ரத்த அழுத்தம் உயரும். இதனால், ஏற்கெனவே பாதிக்கப்பட்ட ரத்த நாளங்கள் சிதைந்துபோகும்.  இதயம் சீர்கெட ஏதுவாகும்.  மன இறுக்கத்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது, நரம்பு சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் வரும்.  மன இறுக்கம் இருந்தால், பசி எடுப்பதில்லை.  இதனால், சர்க்கரைக் குறைபாடு ஏற்பட்டு பிரச்சனைகள் அதிகரிக்கும்.

ஆராய்ந்து பார்த்தால், இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் மன இறுக்கம் காரணமாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மன இறுக்கம் ஏற்படும்போது, முகத்தில் தசை இருக்கமாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். தசை இறுக்கம், மன இறுக்கத்தின் எச்சரிக்கை அறிகுறி.

இளம் வயதிலேயே சர்க்கரை நோய்  வந்துவிடும்போது, காலம் முழுவதும் இந்த நோயோடு வாழவேண்டுமோ என்ற அச்சம் மன இறுக்கத்தை உண்டாக்கி, சுயநம்பிக்கை எண்ணத்தைத் தகர்த்துவிடுகிறது.  இது ஒரு நோய்  அல்ல, குறைபாடுதான் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டால், அந்த நோயுடனேயே சாதிக்கலாம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், குழந்தைப் பருவத்தில் வரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்.  ஆனால், பிற்காலத்தில் அவர் உலகமே வியக்கும் வகையில் கிரிக்கெட்டில் சாதித்து, வரலாற்றில் இடம் பெற்றிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here