Home Common Health Problems வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக சக்திக் குறைவும், அதற்கான சிகிச்சை முறையும்

வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக சக்திக் குறைவும், அதற்கான சிகிச்சை முறையும்

623
0
SHARE

வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக சக்திக் குறைவும், அதற்கான சிகிச்சை முறையும்

வயதானவர்களில் சிலருக்கு ஞாபக சக்திக் குறைவும், தெளிவாகச் சிந்திக்க முடியாத தன்மையும் ஏற்படக் கூடும்.  இது தீவிரமாகும் போது மனக்குழப்பம் ஏற்படுகிறது.
அறிகுறிகள்

மனத்தை ஒருமுகப்படுத்த முடியாமை, பேசிக் கொண்டிருக்கும் போதே மறதி ஏற்படுவது

ஒன்றையே திரும்பத் திரும்ப கூறுதல், காரணம் இதனை முன்னரே சொல்லி விட்டதை மறந்து விடுகின்றனர்

அன்றாட வேலைகள் செய்வதிலும் சிரமம் ஏற்படுதல், எப்படி உடை அணிவது அல்லது எப்படி சமைப்பது போன்றவையே தெரியாத உணர்வு ஏற்படும்.

நடத்தையில் மாற்றம் எரிச்சலும் கோபமும் ஏற்படுதல், திடீரென எதிர்பாரதச் செயல்களைச் செய்தல்

இந்த அறிகுறிகள், (நெடு நாட்களாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ) மூளையில்  ஏற்படும்மாற்றங்கள் காரணமாகத் தோன்றுகின்றன.  இந்த அறிகுறிகள் திடீரென ஏற்பட்டால்அதற்குக் காரணம், உடலில் அதிகமாக மருந்து செல்லுதல், அபாயகரமானநோய்ப்படுதல், உடலில் ஊட்டசத்துக்கள் குறைதல் அல்லது தீவிர மனச் சோர்வுபோன்றவையாக இருக்கலாம்.  இப்பிரச்னைகளைத் தீர்ந்துவிட்டால் ஞாபக சக்திகுறைவு பெரும்பாலும் நீங்கிவிடும்.

 

சிகிச்சை முறை 

ஞாபக சக்திக் குறைவுக்கு என்று தனியான சிகிச்சை முறை கிடையாது. ஞாபக சக்திக்குறைவு அடைந்துள்ள பெண்மணியை கவனிப்பது குடும்பத்தாருக்கு மிகுந்தகஷ்டமாகத்தான் இருக்கும்.  கவனிப்பையும் ஆதரவையும் குடும்பத்தார் அல்லாதவெளியாரிடமிருந்து பெற முடிந்தால் மிகவும் நல்லது.

ஞாபக சக்திக் குறைவு உடையவர்களுக்கு உதவி புரிய பின்வரும் முயற்சிகளைமேற்கொள்ளலாம்

அவரது வசிப்பிடச் சூழல்களை முடிந்தவரை பாதுகாப்பானதாக்கலாம்.

தினசரி வழக்கங்களை முறையாக மேற்கொண்டால், அடுத்து எதை எதிர்பார்க்கமுடியும் என்பது வயதான பெண்மணிக்கு தெரியும்.

வீட்டில் அவருக்குப் பரிசியமானவற்றை அதனதன் இடத்தில் வைக்கலாம்.

அவரிடம் அமைதியாகவும் மெதுவாகவும் பேசவும். பதிலளிக்க அவருக்கு அதிக நேரம்கொடுங்கள்

அவரிடம் தெளிவாக எளிதான முறையில் பேசவும்.  அவள் ஆம்/இல்லை  எனபதிலளிக்கும் வகையில் பேசுவது நல்லது.

பெரும்பாலான இடங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை பாரம்பரியமாக உள்ளது. கூட்டுக் குடும்பத்தில் இளையவர்கள் முதியோர்களைக் கவனிப்பதும் வழக்கமாகஉள்ளது.  தற்போதைய நிலையில் குடும்பத்தின் இளைஞர்கள்  தங்கள் இருப்பிடத்தைவிட்டு தொலைதூர நகரங்களில் போய்  வேலை செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.  இதனால் வயதானவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும் நிலைஉருவாகியுள்ளது.

பெண்களுக்கு ஆண்களை விட நீண்ட நாள் வாழும் சாத்தியம் உள்ளது.  அது மட்டுமின்றிபெண்கள் தங்களைவிட பல வயது மூத்த ஆண்களையே மணக்கும் வழக்கமும் உள்ளது. கணவனை இழந்த பெண்கள் சமூகத்தில் முக்கியத்துவம் குறைந்தவர்களாகக்கருதப்படுகின்றனர்.  இதனால் வயதான பெண்ணின் குடும்பத்தினர்- வயதானவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத சமுதாயத்தில் வாழ்பவர்கள் அவளதுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதுவும் தேவையற்றது என எண்ணுகின்றனர்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here