Home pregnancy குழந்தைப்பேறு 

குழந்தைப்பேறு 

453
0
SHARE
Speciale Sanità

ஆண்கள்  – இனப்பெருக்கத் திறனை அதிகரித்தல்

ஹார்மோன் பிரச்னையைக் கண்டறிதல் 

ஊ. பான் ஹைபோ பிட்யூட்டரிசம்

பிட்யூட்டரி சுரப்பி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு உங்கள் வளர்ச்சி ஹார்மோனைக் குறைப்பதுதான், பான் ஹைபோ பிட்யூட்டரிசம். தைராய்டைத் தூண்டும் ஹார்மோன், எல்.எச் மற்றும் எப்.எஸ்.எச் அளவுகள் எல்லாம் குறையும்.

இந்த அறிய நோய் இருந்தால், ஆண்மைக் குறைவு, உடலுறவுத் திறன் குறைதல், விறைப்பின்மை, உடலுறவுப் பண்புகள் இழந்துபோதல், விரைகளின் அளவு சிறுத்துப் போதல் போன்றவை இருக்கும்.

தைராய்டு குறைவதால் எடை அதிகரிக்கும். இளம் வயதிலேயே இந்தப் பிரச்னை வந்துவிட்டால், உயரம் அதிகரிக்காது. பெரும்பாலான பிரச்னைகள், பிட்யூட்டரி கட்டிகள், அதில் மேற்கொள்ளும் அறுவைச் சிகிச்சை, விபத்துகள் போன்றவற்றால் ஏற்படுகின்றன.

பிட்யூட்டரி ஹார்மோன் இல்லாவிட்டால், நாளமில்லாச் சுரப்பி மருத்துவரிடம்தான் சிகிச்சை பெற்றாக வேண்டும். தைராய்டு மாற்றுச் சிகிச்சைகள் மூலம் இழந்த நிலைகளை சிறிது பெறலாம்.

கொனடோட்ரோபிக் ஹார்மோனைத் தூண்டி, டெஸ்டோஸ்டீரானை விரைகள் உற்பத்தி செய்யவைக்கவும், உயிரணு உற்பத்தியை உருவாக்கவும் முடியும்.

எ. கால்மேன்ஸ் சின்ட்ரோம் 

பிறவியிலேயே ஹைபோதலாமஸ் செயலிழந்து போவதைத்தான், கால்மேன்ஸ் சின்ட்ரோம் என்கிறார்கள். இந்தப் பிரச்சனையின்போது, விரைகள் வளர்ச்சி அடைந்திருக்காது. முயல் உதடுகள், அண்ணப் பிளவு, நிறக் குருடு, வாசனைகளை முகர இயலாத நிலை, உடல் வளர்ச்சியின்மை, உயிரணுக்கள் உருவாகாத தன்மை போன்றவை ஏற்படும்.

ஹைபோதலாமஸ் சுரப்பியானது பிட்யூட்டரியைத் தூண்டத் தவறுவதால் எஃப்.எஸ்.எச்., எல்.எச். மற்றும் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன்கள் குறைவாகவே இருக்கும்.

ஏ. தாமதமாகப் பருவம் அடைதல் 

பிட்யூட்டரியின் வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு ஏற்படும்போது, பாலியல் ரீதியாக வளர்ச்சி அடைய முடியாது. சுமார் இருபது வயதுகளில்தான் வளர்ச்சி ஏற்படும். ஹார்மோன் மாற்றுச் சிகிச்சைகள் ஓரளவு ஆண்மையைக் கொண்டு வந்தாலும், அவர்கள் பருவம் அடையும்வரை கருத்தரிக்கச் செய்ய முடியாது. உரிய நேரத்தில் பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், பிரச்னைகளை எளிதில் தீர்க்கலாம்.

ஐ. அலித் தன்மை 

ஃபெர்டைல் யூனிச் (கருவாக்கம் செய்ய இயலாத அலித்தன்மை) என்ற பிரச்சனையின்போது, பாலியல் ரீதியான முயற்சி சிறிதும் இருக்காது. விரைகளும் வளர்ந்திருக்காது. பயாப்சி செய்து பார்த்தல், விந்தணு உற்பத்திக்கான வாய்ப்புகள் இருப்பதையும், கருவாக்கத் தகுதி இருப்பதையும் அறியலாம். ஆனால், எல்.எச்.குறைபாட்டால் டெஸ்டோஸ்டீ ரான் உற்பத்தி குறைவாகவும், விந்தணு உற்பத்தி தடைபட்டும் இருக்கும். ஹார்மோன் குறைபாடுகளைச் சரி செய்தால், விந்தணு உற்பத்தியைச் சீராக்கலாம்.

ஓ. விந்தணுக்களை உருவாக்காத விரைகள் 

கருவாக்கக் குறைபாட்டின் இன்னொரு முக்கியக் காரணி இது. பிட்யூட்டரியும், ஹைபோதலாமஸும் நன்றாகச் செயல்பட்டாலும், சில காரணிகள் இவற்றுக்குக் கட்டுப்படாதவாறு விரைகளை மாற்றிவிடுகின்றன. இத்தகைய மாற்றத்துக்குப் பரம்பரைக் குறைபாடுகள், போதை மாத்திரைகள், மருந்து மாத்திரைகள், காயம், கதிர்வீச்சு, அதிக வெப்பம், புட்டாலம்மை, ரத்த நாளச் சீர்கேடு, சுற்றுச் சூழல்களால் ஏற்பட்ட நச்சுகள் போன்றவற்றையும் காரணமாக இருக்கக்கூடும்.

பரம்பரைக்கு காரணிகளால் இளம் வயதிலேயே விரைகள் செயலிழந்துபோனால், துரதிருஷ்டவசமாக அவற்றைச் சீரமைப்பது கஷ்டம். குறைபாடு உள்ள விரைகள், உயிரணுக்களை உற்பத்தி செய்ய இயலாமலும், அவற்றின் செயல்பாடுகளைத் தூண்ட இயலாமலும் போய்விடும். இவ்வாறு இருந்தால், மனைவியைக் கருத்தரிக்கச் செய்ய முடியாதா என்று கவலைப்படத் தேவையில்லை. விந்து தானம் பெற்று மனைவிக்குக் கருவாக்கம் செய்யலாம்.

பிறவியில் அல்லாமல் இடையில் ஏற்படும் விரைகள் செயல் இழப்பைச் சீரமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விரைகளைச் சீரமைப்பதற்கு முன் தீமை செய்யும் மருந்து மாத்திரைகள், நச்சுத் தொற்றுகள், பூச்சிக்கொல்லிகளுடனான தொடர்பு, அதிக வெப்பத்தில் இருத்தல், வெரிகோசீல் பிரச்னை போன்றவற்றைச் சரிசெய்துவிட வேண்டும். பிறகு, விரைகளின் செயல் இழப்புக்குச் சிகிச்சை தர, அது சரியாவதோடு, உயிரணு உற்பத்தியும் ஆரம்பிக்கும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here