Home pregnancy குழந்தைப்பேறு 

குழந்தைப்பேறு 

302
0
SHARE

ஆண்கள்  – இனப்பெருக்கத் திறனை அதிகரித்தல்

ஆண் கருவாக்கக் காரணிகள்-2

அ. வெரிகோஸ் வெயின் 

நாம் ஏற்கனவே பார்த்த விளையாட்டு வீராங்கனையின் கணவரைப் பரிசோதித்தபோது (அவரும் ஒரு விளையாட்டு வீரர்தான்), அவருடைய விரைப்பையில் ரத்த நாளச் சுருக்கங்கள் இருப்பது தெரிந்தது.

இந்தப் பிரச்னையை வெரிகோஸ் வெயின் என்பார்கள். இது, விரைப்பைக்கு அதிக ரத்த ஓட்டத்தைக் கொண்டுவந்து விடுவதால், ரத்தத்தில் நச்சுத் தன்மை தோன்றும் அல்லது விரைப்பையின் வெப்ப நிலையை அதிகப்படுத்தும். இதை, டெஸ்டிகுலர் ஸ்ட்ரெஸ் பேட்டர்ன் என்போம். அதாவது, விரைப்பை மிக நெருக்கடியில் இருக்கிறது என வைத்துக்கொள்ளலாம்.

சிக்கலான இதுபோன்ற பிரச்னையால் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். உற்பத்தியாகும் உயிரணுக்களிலும் நகரும் தன்மை குறைந்துவிடும். விந்தணுக்களின் வடிவங்கள் குறையுள்ளதாக இருக்கும்.

அந்த நபரிடம், அவருடைய விந்துப் பரிசோதனை ரிசல்ட்டைக் காண்பித்து, ‘இந்தப் படத்தில், உங்கள் இடப்பக்க விரைப்பை சிறியதாக இருப்பதைப் பாருங்கள். இதுவும் வெரிகோஸ் வெயின் பிரச்னையால் வந்ததுதான் என்றேன்’.

‘இதுதான் எனக்கு குழந்தை பிறக்காமல் போனதற்கான காரணமா?. இந்தப் பிரச்னை எனக்குப் பல ஆண்டுகளாக இருக்கிறது. இதனால், இதுவரை எந்தத் தொல்லையும் இல்லை’ என்றார் அவர்.

‘இருக்கலாம். ஆனால், இதுதான் என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. காரணம், இயல்பாகக் குழந்தையை உருவாக்கும் ஆண்களில் பத்து சதவீதத்தினருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. மலட்டுத் தன்மை உள்ள சுமார் நாற்பது சதவீத ஆண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது.

சிலருக்கு, அவர்களுடைய விந்தணுக்களையே செயற்கை விந்தேற்றம் முறையில் அவர்கள் மனைவியின் கருப்பையில் வைத்துவிடுவோம். அது செயல்படாவிட்டால், யூராலஜிஸ்டிடம் அனுப்பி இரண்டாவது கருத்து கேட்பேன்.

அறுவைச் சிகிச்சை மூலம் இந்தப் பிரச்னையைச் சரி செய்துவிட்டால், குழந்தை பிறக்கும் வாய்ப்பு பாதிக்குப் பாதிதான். இப்படிச் செய்யலாமா? அல்லது உங்களுக்குப் 15 மில்லியன் உயிரணுக்களும், 20 சதவீதம் நகரும் தன்மையும், சில இயல்பான அணுக்களும் இருப்பதால், செயற்கை முறையில் விந்தேற்றம் செய்து நல்ல  பலனை எதிர்பார்க்க இயலுமா என யோசிக்கிறேன். உங்கள் விருப்பம் எப்படி என்றேன்?’

‘வெரிகோஸ் வெயின் பிரச்னை பற்றி கொஞ்சம் விளக்கிச் சொல்லிவிடுங்களேன்’ என்றார் அவர்.

‘ரத்த நாளம் மெலிந்து சிதைந்துவிடுவதுதான், வெரிகோஸ் வெயின். அதாவது, விரைப்பைக்கு ரத்தத்தைக் கொண்டு வரும் நாளங்கள் சிதைந்திருக்கிறது. இதனால், உள்ளே வரும் ரத்தம் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால் வீங்கித் தெரிகிறது.

வெரிகோஸ் வெயின் பிரச்னை, இடப்பக்க விரையில் மட்டும்தான் வரும். இதனால் பிரச்னை வரும் என்பதைவிட, அதனால் விரைப்பையில் ஏற்படும் இயல்பு மாற்றங்களால் மலட்டுத் தன்மை வருகிறது என்பதுதான் உண்மை’ என்றேன்.

மலட்டுத்தன்மை உள்ளவர்களில்   வெரிகோஸ் வெயின் பிரச்னை இருக்கிறது. இதனால், விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும்  பாதிப்பு, உருவ  அமைப்பில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. விந்தில் குறைபாடு உள்ள அணுக்களும், முதிராத அணுக்களும் நிறைய காணப்படும்.

ஒரு விரையைவிட இன்னொரு விரை சிறியதாக இருந்தால் அது வெரிகோஸ் வெயின் பிரச்னையாக இருக்கும். பாதிக்கப்பட்டவரைக் குனியவைத்து, மூச்சை இழுத்துவிடச் சொன்னால், அந்த அழுத்தத்தில் விரை வீங்கும்.

டாப்ளர் பரிசோதனை, வெப்பப் பரிசோதனை மூலமும் வெரிக்கோஸ் வெயின் பிரச்னை உள்ளதா என்பதை அறியலாம். வெப்பப் பரிசோதனை செய்யும்போது, ஒரு விரையின் வெப்பம் இன்னொரு விரையைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் அது வெரிகோஸ் வெயின் பிரச்னை என்பதை அறியலாம். இது, வலி இல்லாத, செலவு இல்லாத பரிசோதனையாகும்.

சிகிச்சை 

வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். இதன் மூலம், சுமார் 70 சதவீதம் அளவுக்கு விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம். 50 சதவீத ஆண்களின் மனைவிகள் கருத்தரிப்பார்கள். செயற்கை முறையில் விந்தேற்றம் செய்யும்போது, ஆய்வகத்தில் விந்தணுக்கள் பிரிக்கப்பட்டு அணுக்களின் தரம் மேம்படுத்தப்படுவதால் பிரச்னை  இருக்காது.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here