Home Common Health Problems நெஞ்சு வலியைக் கண்டறிவது எப்படி?

    நெஞ்சு வலியைக் கண்டறிவது எப்படி?

    1032
    0
    SHARE

    ருவருக்கு மார்பில் வலி  தோன்றி இடது கையை நோக்கிச் சென்றால் அது இரத்தக்  குழாய்  அடைப்பு என்பதே நோயின் கணிப்பு. அசைவின்போது நோய் அதிகமாகும். ஓய்வெடுத்தால் குறையும்.  அது குறிப்பாக நன்றாக உணவு உண்டபின் தோன்றுகிறது. பல நோயாளிகள் அலட்டிக் கொள்ளும்போது மூச்சுத்திணறல்  தோன்றுவதாகவும் ஆனால் நெஞ்சு வலி இல்லையென்றும் முறையிடுகின்றனர். இத்தகைய நோயாளிகளுக்கு நீரிழிவு நோயும் , பருத்த உடலும் இருக்கின்றன. இதய நோயாளிகளின் பொதுவான முறையீடு இதயப் படபடப்பு ஆகும்.

    மார்பின் நடுவில் எரிச்சல் தோன்றுதல், மூச்சடைப்பு, மார்புப் பகுதியில் ஒரு அசௌகரியமான நிலை, உணர்ச்சி வசப்படும் போது நெஞ்சுவலி, சில சமயங்களில் தோள்வலி, வலப்புறம் வலி மற்றும் தாடையில் தோன்றும் வலி ஆகியவை இதய நோயின் அறிகுறிகளாகும்.

    நெஞ்சுவலிக்கு வயது வரம்பு கிடையாது. இளவயதில் நெஞ்சு வலி தோன்றுதல் ஒரு சமீபகால நடைமுறையாகும். இதன் அடிப்படைக்  காரணம்  இதய  இரத்தக் குழாய்களில் கொழுப்புகளும், ட்ரை கிளிசரைடுகளும்  படிகிற  ‘அதெரோஸ்கிளீரோஸிஸ் ‘ என்ற  படிவுகளே ஆகும். அடைப்புகள் 70 சதவீதத்திற்கும் அதிகமாகப் படியும் வரையிலும் நெஞ்சுவலி தோன்றுகிற வாய்ப்பு இல்லை. இந்த 70 சதவீத அடைப்புகள்  தோன்றக் காரணமாயிருந்த கால கட்டம் ஒருவரது வாழ்க்கைமுறையினைப் பொறுத்தது. ஆபத்தினை விளைவிக்கும் பல காரணிகள் இருந்து, மன உளைச்சல் மிகவும் பிரதானமாக இருந்தால் நெஞ்சுவலி 25 வயதில் கூட வர வாய்ப்பு உண்டு. முன்பெல்லாம் நெஞ்சு வலி  50 முதல்  60 வயதினரிடையில் மட்டும் காணப்பட்டது. ஆனால் 30 லிருந்து 35 வயதினருக்குள் எத்தனை நோயாளிகளுக்கு நெஞ்சு வலி இருக்கிறது.

    ஒரு நோயாளி தனக்கு வரும் நெஞ்சுவலியைத் தெரிந்து கொள்வது என்பது அவருக்குள்ள நெஞ்சுநோய் பற்றிய செய்தி அறிவும், அவரது உடல் உழைப்பையும் பொறுத்தது ஆகும். அவர் மிகக் கடுமையான உழைப்பாளி ஆக இருந்தால், அவரது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 120 முதல் 130 வரை இருக்கும். உயர்த்தப்படுமேயானால் அவரால் நெஞ்சுவலியைச் சீக்கிரம் கண்டுகொள்ள முடியும். உடல் அதிகம் வருத்தாமல் இருப்பவர் காலம் கடந்து தான் நெஞ்சு வலியை உணரவும், கண்டுகொள்ளவும் முடியும். காரணம் அவர்களது  இதயத்துடிப்பு அதிகமாவதில்லை. உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்கள் சில சமயங்களில் கடுமையான மார்பு வலிக்கு ஆளாகி  இறந்து  போய்  விடுகிறார்கள். இதன் காரணம் என்னவென்றால் அவர்களால் நெஞ்சுவலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கான தடுப்புப் பாதுகாப்பினையும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.


    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here