Home Common Health Problems 40 லிருந்து 50 சதவீத இருதய அடைப்புகள்:

    40 லிருந்து 50 சதவீத இருதய அடைப்புகள்:

    275
    0
    SHARE

    இந்த அடைப்புகள் உள்ளவர்களுக்கெல்லாம்  நெஞ்சுவலி வருவதில்லை . ஒரு வேளை நெஞ்சு வலி வந்தால், மன உளைச்சல்களின்  சாதாரண வெளிப்பாடுகளாய்த் தோன்றி, இதய இரத்தக் குழாய்களில் துடிதுடிக்கின்ற அளவு வலியை ஏற்படுத்தி திடீரெனத் தோன்றும் நெஞ்சுவலியாய்  வருகின்றன.

    நெஞ்சுவலியின் அறிகுறிகள்:

    1. நெஞ்சுவலி, குறைந்த வலி முதல் கடுமையான வலி வரை ஏற்படும். மாரடைப்பு ஏற்படும் சமயம்  நெஞ்சுவலி மிகக் கடுமையாக இருக்கும். அது பெரும்பாலும் மார்பின் நடுவில் தோன்றி இடது கைப்புறம் பரவுகிறது. சில சமயங்களில் வலது கைபுரம் தோள்கள், கீழ்த்தாடை வரை பரவுகிறது. வலி சாதாரணமாக 5 முதல் 10  நிமிடங்கள் வரை இருக்கும்.
    2. மூச்சுத்திணறல் அல்லது சிறிது சிறிதாக மூச்சு வெளிப்படல்.
    3. வியர்த்தல்.
    4. குமட்டலும் வாந்தியும்.
    5. தலை சுற்றலும்  மயக்கமும்.
    6. அதிகமாக உணவு உண்டபின் நெஞ்சுவலியோ அல்லது மார்பில் கனமான உணர்வோ தோன்றுதல்.
    7. தொண்டையில் ஏற்படும் அடைப்பு.
    8. மார்பில் அல்லது மேல் வயிற்றுப்  பகுதியிலோ கனமாக இருத்தல் அல்லது பிடித்து இறுக்குவது போல உணர்வு.
    9. பலமிழந்து போவதும் மயக்கமும்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here