Home Common Health Problems குழந்தையின்மை சிகிச்சை மாநாடு

குழந்தையின்மை சிகிச்சை மாநாடு

426
0
SHARE

ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனை நடத்திய பெர்டிகான் மாநாடு ::

சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம்
மருத்துவமனை சார்பில் , கருவாக்கம் மற்றும் ஆபத்து கால பிரசவம் குறித்து தேசிய
அளவிலான கருத்தரங்கு “பெர்டிகான் ” என்ற பெயரில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது . இந்த ஆண்டு 6வது “பெர்டிகான் ” 2 நாள் மாநாடு வடபழனியில்
உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் ஜீலை 8,9 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது . இம்மாநாட்டில்
உலக பாலியல் மருத்துவர் சங்க ஆலோசனை குழு உறுப்பினருமான டாக்டர் கே. எஸ்.
ஜெயராணி காமராஜ், இந்தியா பாலியல் மருத்துவர் சங்க தலைவர் டாக்டர். டி. காமராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது :

இந்த ஆண்டுக்கான மாநாட்டில் கருமுட்டை பரிசோதனை குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்க பட உள்ளது . இதை இளம் டாக்டர்கள் அறிந்து கொள்ள பெரிதும் உதவும் . இம்மாநாட்டில் பங்கு பெரும் மருத்துவ மாணவர்களுக்கு தமிழ் நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவ பல்கலை கழகம் 25 புள்ளிகள் வழங்குகிறது . உலகம் முழுவதிலும் இதே போல் மருத்துவ மாணவர்கள் மாநாட்டில் பங்கேற்று புள்ளிகள் பெறுவது அவசியம் என்ற நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலும் தற்போது நாடு முழுவதும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது .

இம்மாநாட்டில் 1000 டாக்டர்கள் பங்கேற்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here