Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

204
0
SHARE

பாலுறவும், பால்வினை நோய்களும் 

எயிட்ஸ் 

பால்வினை நோய் என்றாலே எயிட்ஸ் நோய்தான் மனக்கண் முன் தோன்றுகிறது. தொற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளும்போதுகூட எயிட்ஸ் கிருமிகள் உள்ளனவா என்பதற்கான பரிசோதனை இடம் பெறுகிறது. அரசாங்கமும், சேவை அமைப்புகளும் போட்டி போட்டுக்கொண்டு எயிட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். அந்தளவுக்கு கொடிய நோயாக உருவெடுத்துள்ள எயிட்ஸ் என்றால் என்ன?

அக்கொயர்ட் இம்யூன் டெபீசியன்சி என்ற பதங்களின் சுருக்கம்தான் எயிட்ஸ். இதற்கு வெளியிலிருந்து பெறப்பட்ட காரணிகளால் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைதல் என்று பொருள். இந்த நோய்க்குக் காரணமாக இருப்பது எச்.ஐ.வி.  கிருமி.

ஹியூமன் இம்யூனோ டெபிசியன்சி வைரஸ் என்பதைத் தான் எச். ஐ.வி. என்கிறார்கள். இந்த வைரஸ் நமது உடலின் எதிர்ப்புச் சக்தி அமைப்பினுள் உள்ள  செல்களுக்குள் ஊடுருவி அங்கு, தன்னை எதிர்த்துப் போராடும் செல்களை  கொஞ்சம் கொஞ்சமாக அழித்து அவை மீண்டும் தலை தூக்காமல் செய்துவிடும்.

எச். ஐ.வி. கிருமிகள் தொற்றிய உடனேயே நோயை உண்டாக்குவதில்லை. சுமார் எட்டு முதல் பத்து ஆண்டுகள் வரை எயிட்ஸ் நோயாக வெளிப்படாது.  எச். ஐ.வி. க்கான பரிசோதனை செய்யாதவரையிலும் இப்படியொரு நோய்த் தொற்று இருப்பதே பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாமல் இருக்கும். ஆகவே, நோய்த் தொற்றுள்ள நபர் தனக்கு நோய் இருப்பதே அறியாமல் பலருடன் பாலுறவு கொள்ளும்போது, தன்னையறியாமலேயே நோய்த் தொற்றை பலருக்கும் இந்த நீண்ட இடைவெளிக் காலத்தில் பரப்பிவிடுகிறார்.

எச். ஐ.வி. கிருமிகள் நோயெதிர்ப்புத் திறனையெல்லாம் அழித்துவிடும்போது, நோய்த் தொற்றுக்கான எதிர்க்கும் திறனை உடற்செல்கள், உடற்காப்பு மூலங்கள் இழந்து விடுகின்றன. இந்த நிலைதான் எயிட்ஸ்.

நோயெதிர்ப்புத் திறனற்ற நிலையில் பல்வேறு நோய்க்கிருமிகளும் எளிதாக உடலில் ஊடுருவி தாக்குதல் நடத்தும். நீண்ட நாட்களுக்கு இதை எதிர்க்கத் திறனற்ற உடலானது விரைவில் நோய்வாய்ப்படுவதால், பாதிக்கப்பட்டவர் இறந்து விடுவார்.

எயிட்ஸ் கிருமிகளால் உயிரிழப்பு ஏற்படுவதைவிட, மற்ற கிருமிகள் தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படுவதுதான் அதிகம். எயிட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு மரணம் நிச்சயம்!


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here