Home Common Health Problems உடல் பருமன் எப்படி ஆண்களுக்கும் பெண்களுக்கும்  குழந்தையின்மையை அதிகரிக்கிறது?

உடல் பருமன் எப்படி ஆண்களுக்கும் பெண்களுக்கும்  குழந்தையின்மையை அதிகரிக்கிறது?

619
0
SHARE

உடல் பருமன் எப்படி ஆண் குழந்தையின்மையை அதிகரிக்கிறது?

உடல் பருமன் அதிகமாக உள்ள ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் பிரச்சனைகள் ஏற்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.  உடல் பருமன் குறைப்பதன் மூலமாக தாம்பத்திய உறவு பிரச்சனைகள் நல்ல முறையில் சரியாகி முழுமையான தாம்பத்திய உறவு பெற வழிவகுக்கிறது.

உடல் பருமன் அதிகரிப்பதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணு உருவமைப்பு, உருசிதைதல், டி.என்.ஏ  சிதைவு, உயிரோட்டம் அனைத்தும்  ஆண்கள் குழந்தையின்மையை பாதிக்கின்றது.  இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன்.  உடல் பருமன்  அதிகரிப்பதனால் கொழுப்பு சத்து  அதிகமாகிறது.  கொழுப்பு சத்து அதிகமாவதால் ஆண் விந்துப்பையில் கொழுப்பு அதிகமாகி அதனால் உஷ்ணநிலை அதிகமாகி, விந்தணு உற்பத்தி திறன் உயிரோட்டம் பாதிக்கப்படுகிறது.

உடல் பருமன் அதிகரிப்பதினால் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு அதனாலும் விந்தணு உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது. இந்த நிலைமையை ஐரோப்பா ஆய்வுகள் மற்றும் 2008 – ல் இந்தியாவில் செய்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றது.

உடல் பருமன் எப்படி பெண்களுக்கு  குழந்தையின்மையை அதிகரிக்கிறது?

கருமுட்டைகள் உற்பத்தி திறன், உடல் பருமன் அதிகமாவதால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு கருமுட்டைகள் வளர்வதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உடல் பருமன் அதிகரிப்பதால் கருமுட்டை வளர்ச்சி, கருமுட்டை முதிர்ச்சி, கருமுட்டை வெளியாக்கும் திறன், கருமுட்டை கருவாக்கும் திறனை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

உடல் பருமன் அதிகரிப்பதால் செயற்கை முறையில் (IVF) கருத்தரிக்கும் பெண்களுக்கு குறைந்த சதவீதமே கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இதற்கு முக்கிய கரணம் உடல் எடை அதிகமாவதால் பெண்களுக்கு இன்சுலின் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை வளர்ச்சி, கரு வெளியாக்கும் திறன், கருமுட்டை உருவாக்கும் திறன் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில்  நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.

 

உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்?

உடல் பருமன் அதிகமாவதால் கரு உருவாகும் போது ஹார்மோன் குறைகள் ஏற்பட்டு, அபார்ஷன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.

மேலும் உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்பு பலமடங்கு அதிகரித்து அதனால் ஏற்படும் பின்விளைவுகளான  குறைப்பிரசவம், கருவில் குறைபாடு, கரு வளரும் போது கருவின் இதயம், மூளை, நரம்பு மண்டலம், சிறுநீரகம் மற்றும் கை, கால்களில் குறைபாடுகள் போன்றவை கருவிற்கு ஏற்படுவதால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

உடல் பருமன் அதிகரிப்பதால் திடீரென்று குழந்தை கருவிலே இறப்பது கூட ஏற்படலாம்.

உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் உப்பு சத்து மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால், இதனால் ஏற்படும் பின்விளைவுகளும் அதிகமாகலாம்.

இரத்த அழுத்தம் அதிகமாவதால் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம், வயிற்றிலேயே குழந்தை இறந்து போதல், தாயிக்கு நஞ்சு பிரிதல், வலிப்பு நோய் மற்றும் உயிருக்கு ஆபத்தான பின்விளைவுகளும் ஏற்படலாம்.

இதற்கு தீர்வு என்ன?

  • உடல் எடை குறைப்பு
  • வாழ்க்கை முறை மாற்றங்கள்
  • சீரான உடற்பயிற்சி
  • உணவு கட்டுப்பாடு
  • முறையான ஓய்வு
  • மன அழுத்தத்தை குறைப்பது
  • மருத்துவ முறைகளை பின்பற்றுவது போன்றவை இதற்கான தீர்வு ஆகும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here