Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

57
0
SHARE

பாலுறவும், பால்வினை நோய்களும் 

சிஸ்டைடிஸ்

சிறுநீர்ப்பையில் அழற்சியை உண்டாக்கும் நோய் இது. இந்த நோயால் புதிதான திருமணமான பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இதை ஹனிமூன் சிஸ்டைடிஸ் என்றே கூறுகிறார்கள். இந்த நோய்க்குக் காரணம் ஆண்களல்ல, பெண்களின் பிறப்புறுப்பில் மேற்பகுதியில் வாழும் பாக்டீரியாக்கள், பாலுறவின்போது கருவுறுப்புகளுக்கு உந்தித் தள்ளப்பட்டு, பரவி அழற்சியை உண்டாக்குகின்றன. ஆணுறையைப் பயன்படுத்தினாலும் இந்த நோய்த் தொற்று வருவதை தவிர்க்க இயலாது.

சிஸ்டைடிஸ் நோயின்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வும், தூண்டுதலும் இருக்கும். அடி  வயிற்றில் வலியெடுக்கும். பிறப்புறுப்புப் பகுதியிலுள்ள நரம்புகளில் அழற்சி ஏற்படுவதால் வலி தீவிரமாகும். நோய்த் தொற்று பரவிய ஓரிரு நாட்களில்  சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும்.

இந்த நோயை ஆன்டிபயாடிக்குகள் கொடுத்து குணப்படுத்தலாம். உடனடியாக சிகிச்சையளிக்காவிட்டால் நோய்ப்பரவல் சிறுநீரகத்தையும் தாக்கும்.

சிஸ்டைடிஸ் அடிக்கடி வந்தால் மணமான ஆணும் இந்த பாக்டீரியாத் தொற்று உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். நோய்த் தொற்றை தவிர்ப்பதற்காகத்தான் பாலுறவு கொண்ட உடனேயே சிறுநீர் கழிக்கவேண்டும் என பாலியல் மருத்துவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

சிறுநீர் கழிக்காத பட்சத்தில் அமிலத்தன்மையுள்ள பழச்சாறுகளை அருந்தினால் கூட போதுமானது. அவற்றிலுள்ள அமிலத்தில் பாக்டீரியாக்கள் நீண்ட நேரம் உயிர்வாழாது. நோய்த் தாக்குதலும் குறையும்.

ட்ரைகோமோனியாஸிஸ்  

பாலுறவு காரணமாக தொற்றும் நோய்களுள், குணப்படுத்தக்கூடிய நோய்களும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ட்ரைகோமோனியாஸிஸ், கொனேரியா, கிளாமிடியா, காண்டிடியாசிஸ், மற்றும் சிபிலிஸ் ஆகியவை.

இந்த நோய்களெல்லாம் ஆன்டிபயாடிக்குகள் மூலமே குணப்படுத்தப்படுகின்றன. சில ஆன்டிபயாடிக்குகளை புணர்புழையில் வைக்கவேண்டியிருக்கும்.

நோயின்போது பக்க விளைவாக புதிய சிரமங்கள் தோன்றினால் அவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக புதிய ஆன்டிபயாடிக்குகள் அல்லது வீரியமுள்ள ஆன்டிபயாடிக் மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டியிருக்கும்.

ட்ரைகோமோனியாஸிஸ்  என்பது பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து மஞ்சள் நிறத்துடன் கூடிய வெள்ளை நிறத் திரவக் கசிவை உண்டாக்கும் நோயாகும்.

இந்த நோய் வந்தால் பிறப்புறுப்பில் நமைச்சல், வீக்கம் போன்றவற்றையும், ஆணுறுப்பில் அழற்சிப் புண்களும் தோன்றும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here