Home Common Health Problems தலையில் ஏற்படும் காயங்களால் ஏற்படும் விளைவுகள் 

    தலையில் ஏற்படும் காயங்களால் ஏற்படும் விளைவுகள் 

    2674
    0
    SHARE

    பெரும்பாலான காயங்கள் சிறிய அளவிலானவை.  அவற்றில் 15 சத்தம்தலைக்காயங்களுக்கு மருத்துவமனையில் தங்கி மேற்கொள்ளும் சிகிச்சைதேவைப்படுகிறது.  தலைக்கு உள்ளே உள்ள மூளையைப் பாதுகாக்கும் கவசமாகத்தலையின் கபால எலும்பு செயல்படுகிறது.  தலையில்     ஏற்படும் சியாவெட்டுக்காயங்கள், இரத்தக்கட்டுகள் போன்றவற்றிற்கு எளிமையான முதலுதவிச்சிகிச்சையே போதுமானதாகும்.

    ஆனால் கடுமையான தலைக் காயங்களுக்கு உடன் அவசர மருத்துவ உதவிதேவைப்படும்.  நீங்கள் ஒருவருக்குக் கடும் தலைக்காயம் இருப்பதாகச் சந்தேகப்பட்டால்அவரது கழுத்தை அசிக்காதவாறு பார்த்துக்கொள்ளவும்.  ஏனெனில் தலைக்காயம்ஏற்பட்ட ஒருவருக்குக் கழுத்து எலும்பிலும் காயம் இருக்கக்கூடும்.

    கடும் தலையசைவுக்காயம் தலையில் பலமிக்க தாக்குதல்கள் ஏற்படும்போதுக் குறிப்பாக ஏதேனும் வாகனத்தால் தள்ளப்பட்டுக் கீழே விழும்போது தலையில் தலையசைவுக் காயம் ஏற்படுகிறது.  இந்த அசைவுச் காயத்தின்போது கபாலத்தினுள் மூளை கடுமையாக அசைக்கப்படுகிறது.  இதன் விளைவாகப் பாதிக்கப்பட்டவருக்கு மயக்கம் ஏற்படும்.  பாதிக்கப்பட்டவர் பிரமைபிடித்தவர் போலக் காணப்படுவார்.  நினைவிழப்பு, கிறுகிறுப்பு, வாந்தி போன்றவை ஏற்படும்.  உடலின் சில பகுதிகளில் வாதமும், அதிர்ச்சிச் செயலிழப்பும் கூட ஏற்படலாம்.

    மூளைக்குள் இரத்தக்கட்டு

    கபால எலும்பிற்கும் மூளைக்கும் இடையில் உள்ள இரத்த நாளம் கிழிந்துபோவதால்ஏற்படும் இரத்தக் கசிவிலிருந்து வெளியாகும் இரத்தம் மூளைக்கும் கபாலத்திற்கும்எடையில் உறைந்து இரத்தக்கட்டியை ஏற்படுத்துகிறது.  இவ்வாறு ஏற்படும் இரத்தக்கட்டுபின்னர் மூளையை அழுத்துகிறது.

    தலைக்குக் காயம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகோ அல்லது சில நாட்களுக்குப்பிறகோகூட அறிகுறிகள் தோன்றும்.  ஆனால் வெளிக்காயங்கள் ஏதும் காணப்படாது. இதன் அறிகுறிகளாகத் தலைவலி, குமட்டல், வாந்தி, மனத்தெளிவில் மாற்றங்கள்,விழிப்பார்வையின் அளவில் மாறுபாடுகள் போன்றவை காணப்படும்.  மெல்லச்செயல்திறன் குறைவு, மயக்கநிலை, மற்றும் மருத்துவம் செய்யாத நிலையில் மரணம்கூட ஏற்படலாம்.

    கபாலத்தில் எலும்புமுறிவுகள்

    கபால எலும்புகளில் முறிவுகள் ஏற்படும்போது அவை சட்டென்றுவெளித்தெரிவதில்லை.  எனவே கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கின்றனவா எனகண்டுபிடிக்கவும்

    சிராய்ப்பு வீக்கம், கண்கள் மற்றும் காதுகளுக்குப் பின்னல் நிற மாற்றங்களுடன் வீக்கம்

    காத்து மற்றும் மூக்கு வழியாக இரத்தம் மற்றும் தெளிவான திரவம் வழிதல்

    கருவிழி அளவு மாறிப் பெரிதாகக் காணப்படல்

    கபாலத்தில் வீக்கம் மற்றும் பள்ளம் தென்படல்

    அவசரச் சிகிச்சை

    தலைக் காயத்திலோ, முகத்திலோ கடுமையான இரத்தக் கசிவுகள்

    சிறிது நேரத்திற்காவது மனத் தெளிவில் மாற்றம் ஏற்படல்

    சுவாசச் சிரமம் மற்றும் ஒழுங்கற்ற சுவாசம்

    வாந்தி

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here