Home Common Health Problems நீரிழிவை சமாளிப்பது எப்படி?

    நீரிழிவை சமாளிப்பது எப்படி?

    372
    0
    SHARE

    பார்வை மங்குதல்:
    இரத்தத்தில் குளுகோஸ் அளவு மிகையாகும் போது அவை கண்களின் லென்சிலிருந்து திரவத்தை இழுப்பதால் லென்ஸ் மெலிதாகி பார்வைத் திறன் குறைபடும். இரத்தத்தில் குளுகோஸ் அளவைக் குறைப்பதன் மூலம் லென்சின் நீர்த்தன்மையைச் சரி செய்யலாம். உங்கள் விழி லென்ஸ் திரவ சமநிலை அடையும்வரை உங்களுக்குப் பார்வை மங்குதல் நீடிக்கலாம். ஆனால் நாளாக நாளாகப் பார்வைத் திறன் மேம்படும்.
    இரத்தத்தில் குளுகோஸ் அளவு மிகைப்படும்போது கண்களுக்குள் மிக மெல்லிய இரத்தக் குழாய்கள் உருவாவதால் பிரச்சனை ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால் அவற்றில் ஏற்படும் இரத்தக்கசிவுகள் காரணமாகக் கறுப்புப் புள்ளிகள், வெளிச்சப் புள்ளிகள், விளக்குகளைச் சுற்றி ஒளிவட்டங்கள் போன்றவற்றுடன் பார்வையிழப்பும் ஏற்படலாம்.
    பெரும்பாலும் நீரிழிவால் ஏற்படும்  கண் பாதிப்பின்போது, உடனடி அறிகுறிகள் ஏதும் தென்படுவதில்லை. ஆகவே அடிக்கடி முறையாகக்  கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். கண்களின் பாவையை மருந்துகள் விட்டு விரிவடையச் செய்து பரிசோதிப்பதன் மூலம் விழித்திரையில் உள்ள இரத்தக்குழல்களையும் பரிசோதிக்கலாம்.

    மெல்ல ஆறும் புண்கள் அல்லது அடிக்கடி ஏற்படும் தொட்டுகள்.
    ரத்தத்தில் மிகையாகும் குளுகோஸ் அளவு உங்கள் உடலின் இயற்கையாக ஆறும் திறனைத் தடுப்பதுடன், உங்கள் உடல் தொற்றினை எதிர்த்துப் பணிபுரியும் திறனையும் குறைக்கிறது.எனவேதான் பெண்களுக்குச் சிறுநீர்பையிலும்,யோனியிலும் பொதுவாகத் தொற்று ஏற்படுகிறது.

    கை  கால்களில் உணர்ச்சி மாறுபாடுகள். இரத்தத்தில் மிகையாகும் குளுகோஸின் காரணமாக உங்கள் நரம்புகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. நரம்புப் பாதிப்புகள் பல அறிகுறிகளைத் தோற்றுவிக்கின்றன. பொதுவாக கைகால்களில் உணர்ச்சி மாறுபாடுகள் தோன்றுவதுடன் உணர்ச்சிக் குறைவும் ஏற்படும். கைகால் விரல்களில், பாதங்களில், உள்ளங்கைகளில் வலி மிகையாவதுடன், எரிவது போன்ற உணர்வும் ஏற்படலாம்.
    சிவந்து, வீங்கி வலியெடுக்கும் ஈறுகள். நீரிழிவு உங்கள் வாயின் தொற்று எதிர்க்கும் திறனைக் குறைப்பதால்,ஈறுகளிலும் அதனைத் தாங்கியுள்ள எலும்புகளிலும் கிருமித் தொற்று ஏற்படுகிறது. இவ்வாறு ஈறு நோய்க்கு உள்ளாவதால்-
    ஈறுகள் கரைதல், ஈறுகள் கரைவதால் பற்களும், பற்களின் வேர்களும் வெளித்தெரிதல்.
    ஈறுகளில் புண்கள் மற்றும் சீழ்த் தொற்றுகள்.
    நிரந்தரப் பற்களின் இழப்பு.
    செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தாமல் போதல் போன்றவை ஏற்படலாம்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here