Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

132
0
SHARE

பாலுறவும், பால்வினை நோய்களும் 

சிபிலிஸ்

பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு கொள்வதால் வரும் நோய்களுள் குறிப்பிடத்தக்கது சிபிலிஸ் நோய். இந்த நோய் வந்தால் ஆணுறுப்பில் வலியில்லாத புண் தோன்றும். இதை கவனித்து சருமத்தில் சிகிச்சையளிக்கவில்லையெனில், சருமத்தில் சொறி சொறியாகத் தோன்றி, பாதிக்கப்பட்டவரின் பார்வை பறிபோகும். அதன் பிறகும் சிகிச்சையளிக்காவிட்டால் மூளை மற்றும் இதயம் ஆகியவை பாதிக்கப்படும். இதனால் நோயாளி பைத்தியம் பிடித்தவராகிவிடுவார். படிப்படியாக மரணமும் உண்டாகும். நோயாளிக்கு குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கும் இந்த நோயின் பாதிப்பு இருக்கும். குழந்தை பார்வையற்றதாக, முடமாக, வேறுவித குறைபாடுகள் உள்ள நிலையில் பிறக்கும்.

ஹெபடைடிஸ் -பி 

ப்ளூகாய்ச்சல், இருமல், தொண்டைப்புண் மற்றும் மூட்டுகளில் வலி, அதிகமான சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகளுடன் ஆரம்பிக்கும் இந்த நோயின் அடுத்தக் கட்டம்தான் மஞ்சட்காமாலை.

மஞ்சள் நிறமான தோல், கண்ணின் வெண் படலத்தில் மஞ்சள் நிறம் படிதல், மஞ்சள் நிற சிறுநீர், மலத்தில் மஞ்சள் நிறம் படிதல் என எல்லாமே மஞ்சள் நிறத்திற்கு மாறும். சிகிச்சையளிக்காவிட்டால் உயிர் இழப்பை உண்டாக்கும்.

எயிட்ஸ் கிருமிகளைப் போல இதுவும் தொற்றக்கூடிய நோயாகும். அதிலும் அவற்றை விட அதிகமாகத் தொற்றக்கூடிய கிருமி என்பதால், ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நிலையிருந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

விடலைப் பருவத்தின்போது பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு கொள்வதால் எத்தகைய கொடுமையான நோய்கள் வரும் என்பதைத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். விடலைப் பருவத்தில் மட்டுமல்ல, எந்தப் பருவத்திலும் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு கொள்வதால் இந்த நோய்களுக்கு இரையாக வேண்டியிருக்கும்.

இதைத் தவிர்க்க ஆணுறை, பெண்ணுறை போன்ற சாதனங்கள் தற்போது நடைமுறையிலுள்ளன. இவையும் அவ்வப்போது கிழிந்துவிடுவதால் பிரச்னை ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here