Home Love Part காதல் பாகம் – 87

காதல் பாகம் – 87

172
0
SHARE

ஏன் பெற்றோர்கள் காதலை எதிர்க்க வேண்டும்?

வர்களும் ஒரு காலத்தில் இளம் வயதைக் கடந்தவர்கள், அந்த வயதில் பெற்றோர்களை மதிக்காமல் இருந்தவர்கள், ஏன் என்னும் சொல்லப்போனால் எல்லோரும் ஏதாவது ஒருவகையில் காதல் வலையில் சிக்கியவர்கள் அல்லது சிக்கி விலகியவர்கள்.  இப்படியெல்லாம் இருந்தும் பெற்றோர் ஸ்தானத்தில் காதலை எதிர்க்கக் காரணம் என்ன?

ஒரே ஒரு விஷயம்தான்! நாட்டில் பெரும்பாலான காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்துவிடுகிறது என்பதுதான் காரணம். தன்னுடைய பிள்ளைக்கும் அப்படியொரு தோல்வி நடந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தால் தான் பெற்றோர்கள் காதலை எதிர்க்கிறார்கள்.

சரி, பெற்றோர்கள் காதலை எதிர்க்கிறார்கள் என்பதற்காக உடனே காதலை விட்டுவிடலாமா? அல்லது காதல்தான் முக்கியம் என்பதற்காக பெற்றோர்களை தவிக்கவிடலாமா? இரண்டுமே தவறுதான்.  மனிதனுக்கு ஒரு கண்ணால் பார்க்க முடியும் என்றாலும் இரன்டு கண்களும் இருப்பதுதான் நல்லது.

ஏதாவது ஒரு கண்ணில் கோளாறு வந்தால் இன்னொரு கண்ணை வைத்து சமாளித்துக்கொள்ளலாம்.  மொத்தமே ஒரு கண் இருந்தால் பார்வையில் சிக்கல் இருக்காது என்றாலும், எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் சமாளிக்க, அளவுக்கு அதிகமாக சிரமப்பட வேண்டும்.  அதனால் முள்ளில் விழுந்த சேலையை எடுப்பதுபோல் பெற்றோரிடமிருந்து காதலுக்கு, அனுமதி வாங்குவதுதான் மிகப்பெரிய வெற்றியாகும்.

பெற்றவர்களிடம் காதல் சொல்லிவிடுவது நல்லதா அல்லது பிறர் மூலம் தெரியட்டும் என காத்திருப்பதா? அல்லது வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்கும்போது சொல்லலாமா? காதல் சொல்பவர்களே அதனை  பெற்றவர்களிடம் சொல்வதுதான் மிகவும் சிறந்தது.

காதலி, திருமணம் செய்துகொள்ள வேண்டிய இறுதிக் கட்டத்தில் சொன்னால் போதும் என நினைத்து தள்ளிப்போடுவதுதான் பிரச்சனைகளுக்குக் காரணமாகிவிடுகிறது.  முதல்முறை எதையும் சொல்ல வேண்டாம்.  இரண்டாவது மூன்றாவது சந்திப்புகள் நடந்து, நாம் தேர்வு செய்துள்ள நபர் சிறப்பான தேர்வுதான் என மனம் முழுமையாக நம்பத் தொடங்கும் கால கட்டத்திலேயே வீட்டினரிடம் காதல்வயப்பட்டிருக்கும் விஷயத்தை மெதுவாக, மென்மையாக நிலை அறிந்து சொல்லிவிடலாம்.

காதல் என்ற வார்த்தையை காதில் கேட்டாலே எங்கள் வீட்டில் வெட்டிப் போட்டுவிடுவார்கள் என சிலர் பயப்படுவார்கள்.  இப்படிப்பட்டவர்கள் உண்மையில் பயந்தவர்கள் அல்ல.  பயந்தவர்கள் மாதிரி நடிப்பவர்கள்.  ஏனென்றால் உண்மையில் பயந்தவர்கள் என்றால், பார்வை நிலையில் காதல் தொடங்கியபோதே அந்தக் காதலை தவிர்த்திருவார்கள்.  பெற்றோரிடம் பயம் இருப்பது மாதிரி நடிப்பவர்கள் மட்டுமே அப்படி சொல்லிக்கொண்டே காதலில் இறங்குவார்கள்.

காதலில் விழுந்துவிட்டோம் என்பதை அப்பட்டமாகச் சொல்ல வேண்டியதில்லை.  ஒரு நல்ல நட்பு கிடைத்திருக்கிறது என்று ஆரம்பத்திலேயே கோடிட்டு காட்டிவிடலாம்.  பின்னர் அவ்வப்போது காதல் வளர்ந்து வரும்போது, உங்கள் மனசுக்குப் பிடித்த நபரைப் பற்றி நல்லவிதமாக சொல்லிக்கொண்டே வரலாம்.

ஒரு சரியான கட்டத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு நட்பு ரீதியிலேயே அறிமுகப்படுத்தவும் செய்யலாம்.

இப்படி அவ்வப்போது பிடித்தவரைப் பற்றி பேச வரும்பட்சத்தில், குடும்பத்தினருக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பு இல்லை.  மேலும் உங்கள் மனம் கவர்ந்தவர் பற்றி குடும்பத்தினரும் ஓரளவு அறிந்து கொள்ளவும், அவர்களது குணநலன்களை தெரிந்துகொள்ளவும் முடியும்.

உங்களுக்குப் பிடித்தவரை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும்பட்சத்தில், உங்கள் காதல் எவ்வித சிக்கலையும் சந்திக்காமல் நேரடியாகவே திருமணத்தில் முடிந்துவிடும்.  அப்புறம் நீங்கள் காதலை திருமணத்துக்குப் பின்னரும் தொடரலாம்.

அப்படியில்லாத பட்சத்தில், உங்கள் மனம் கவர்ந்த நபரை உங்கள் குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லையா? ஏன்? என்ன காரணத்துக்காகப் பிடிக்கவில்லை என்பதை சண்டை போடாமல் நிதானமாக கேட்டுப் பாருங்கள்.

பெற்றோர்கள் கூறும் காரணத்தை எப்படி சமாளிக்கலாம் என்பதை நாளை பார்க்கலாம்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here