Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

168
2
SHARE
ஏமாற்றங்களும், எதிர்பாரா நிகழ்வுகளும் 
ஆண்மைக்குறைவு என்றால் என்ன?
தூண்டினால் ஒழிய தானாக விரைப்பேற்படாத நிலை ஆண்மைக்குறைவு எனப்படுகிறது. பெரும்பாலும் துவக்கத்தில் இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. அடுத்தடுத்து ஆணுறுப்பு விரைக்காத நிலையிருந்தால் நல்ல மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
இந்தப் பிரச்னை ஏன் வருகிறது?
ஆணுறுப்பின் அடிப்பகுதியிலுள்ள சிறு இரத்த நரம்புகள் ஏதேனும் விபத்துகள், அடிபடுதல் போன்றவற்றால் பாதிக்கப் பட்டிருக்கக்கூடும். இந்த நிலையில் அவற்றில் இரத்தப் பெருக்கு அதிகமாக ஏற்படாமல் போவதால் இந்த பிரச்னை வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. உடளவிலான பாதிப்பு இருந்தால் அதை விரைவாகச் சரி செய்துவிடலாம்.
உளவியல் காரணமாகவும் ஆண்மைக்குறைவு ஏற்படும். அதிக கவலைகள், பிரச்னைகள் இருந்தால் பாலுறவுத் திறன் இயல்பாகக் குறையும். இதைத் தீர்த்துக்கொள்ள நல்ல பாலியல் ஆலோசனை மருத்துவரை அணுகுவது சிறந்தது.

பலர் ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்காக லேகியம் சாப்பிடுவது போன்ற அவசியமற்ற முறைகளை நாடுவார்கள். இது அவர்களுக்கு மேலும் பாதிப்பை உண்டாக்கலாமே தவிர பிரச்னையை முற்றிலும் தீர்த்துவிடாது.
சரியான ஆலோசனை மற்றும் சிகிச்சை முறையினால் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.
எதிர்பாரா நிகழ்வுகள் 
பொதுவாக விடலைப் பருவத்தில் காதலித்து பிறகு பாலுறவு கொள்ளும் நிலை பரவலாக இருக்கிறது. இதற்கு மாறாக எதிர்பாராத விதமாக, ஆணுக்கோ, பெண்ணுக்கோ உடன்பாடில்லாமல் பாலியல் தொல்லைகள் நேரிடுகின்றன. இவை உடலளவிலும் உள்ளத்தளவிலும் பாதிப்பை தரும்.
உதாரணத்திற்கு, கற்பழிப்பு.
தன்னைவிட பலவீனமான நபரை பலவந்தப்படுத்தி பாலுறவு கொள்ளுவதை கற்பழிப்பு என்கிறார்கள். இதில் ஆண்கள் மட்டுமே இத்தகைய செயலில் ஈடுபடுகிறார்கள் என்றால் நம்ப மாட்டீர்கள். எப்படியெனில், கற்பழிப்புக்கு விரைத்த நிலையிலான ஆணுறுப்பு அவசியம். அவ்வுறுப்பு விரைக்காத நிலையில் கற்பழிப்பு ஏற்படாது. தாழ்வு மனப்பான்மை தான் உண்டாகும்.
தாங்கள் பெண்களால் கற்பழிக்கப் பட்டதாக சில ஆண்கள் கூறுகிறார்கள். இதற்கு என்ன பொருள் என்றால், தாங்கள் தூண்டப்பட்டிருக்கலாம் என்பதுதான்.

சட்டத்திற்குப் புறம்பான இந்த பாலியல் பலாத்காரத்தால் பெண்கள் மட்டுமின்றி, சிறுவர்களும், இளைஞர்களும்கூட ஆண்களால் சிதைக்கப்படுகிறார்கள். தன்னைவிட பலவீனமான நபரிடம் மட்டுமே பாலுறவு கொள்ள இயலும் என்ற நிலையிருப்பதால்தான் காமுகர்கள் சிறுவர்களையும், பெண்களையும் மற்றும் பலவீனமான இளைஞர்களையும் தங்கள் இலக்குகளாகத் தேர்வுசெய்கிறார்கள்.
கற்பழிக்க முயற்சிப்பவர்களை எவ்வாறு செயலிழக்கச் செய்வது என்ற விஷயம் பலருக்குத் தெரிவதில்லை.
பாதிக்கப்பட நேர்பவர் பயந்தாலோ, அதிர்ச்சியடைந்து விட்டாலோ பிரச்னை வந்துவிடும். மாறாக, அவர்களை மன ரீதியாக உளைச்சலுக்கு உள்ளாக்கி விட வேண்டும். அதாவது அவர்களை கண்டபடி கெட்ட வார்த்தைகளால் திட்ட வேண்டும். இதனால் அவர்களுடைய பாலுறவுத் திறன் குறைந்து விடும். கற்பழிக்கும் முயற்சியை கைவிட்டு விடுவார்கள் என உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here