Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

71
0
SHARE

ஏமாற்றங்களும், எதிர்பாரா நிகழ்வுகளும் 

பாலுறவு பற்றிய பல கனவுகள் இருக்கும் என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இந்தக் கனவுக் காலத்தில் எல்லா நேரத்திலும் காதலரோடு ஓன்று சேர்ந்திருக்க வேண்டும், உறவுகொண்டிருக்கவேண்டும் என்றெல்லாம் கற்பனைகள்  தோன்றுவது இயல்பு. இந்தக் கற்பனைக்கும், யதார்த்தத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

நினைத்ததெல்லாம் நடக்காது என்பதுதான் உண்மை. பாலியல் நூல்கள் அல்லது கதைகளைப் படித்துவிட்டு, அதைப் போல இருக்கவேண்டும், அல்லது பிறர் கதைகளை கூறுவதைக் கேட்டு இப்படி நடந்துகொள்ள வேண்டும் என நினைப்பதும் இயல்புதான்.

பார்த்தது, படித்தது, கேட்டது எல்லாமே மிகையாக்கப்பட்ட விஷயங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பாலுறவுச் செய்கையில் ஈடுபடுவோர் தாங்கள் படித்த நூலில் இருந்து அறிந்துகொண்ட பாலியல் திறன்களைப் போலன்றி தங்களுடைய திறன் குறைவாக இருப்பதாக  உணரும்போது  தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள். இது அவர்களின் பாலுறவு வாழ்க்கையை பாதிக்கிறது.

முதன்முதலாக பாலுறவு கொள்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். பெண்ணுக்கு கன்னித்திரை என்ற தடுப்புச் சவ்வு இருப்பதால் பாலுறவின்போது வலியும், திருப்தியின்மையும் உண்டாகும். முதலுறவின்போது பயம் ஏற்படுவதால் பிறப்புறுப்பு இறுக்கமாகக் காணப்படும்.  இவ்வாறே ஆணுக்கு பாலுறவின்போது விரைப்பின்மை மற்றும் விரைவில் விந்து வெளிப்படுதல் ஆகியவையும் இருக்கும். இதெல்லாம் முதல் பயத்தினால் ஏற்படுபவை, இயல்பானவை என்பது பலருக்கு தெரியாது.

இந்த நிலை நாளடைவில் சரியாகிவிடும். அவ்வாறு இல்லாமல் தனக்குத் திறனில்லை என்ற எண்ணம் மனதில் பதியும்போது எப்போதுமே சரியாக செயல்படாத நிலைதான் உண்டாகும்.

பல பெண்கள் பாலுறவின்போது மெய்மறந்த நிலை எனப்படும் உச்ச இன்பத்தை அடைவதே கிடையாது. ஆனால் அவர்கள் கருத்தரிப்பார்கள். இவ்வாறே சில ஆண்களுக்கு பாலுறவுகொள்ளும் போதே விந்து வெளியாகி  விடும். இவ்வாறு விந்து சீக்கிரம் வெளியாவது தனது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறி என்பதை அறிந்திடாமல், நீண்ட நேரம் பாலுறவு கொண்டிருப்பதுதான் ஆண்மை என கருதும்போக்கு இருக்கிறது.

ஆணும், பெண்ணும் பாலுறவுகொள்ள இரண்டு நிமிடம் போதுமானது என ஆய்வுகள் கூறுகின்றன. அவசரப்படாமல் பாலுறவுகொள்வோர் தங்கள் மணவாழ்க்கை முழுவதிலும் திருப்தியாக  இருக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல்  தங்களுக்கு ஏதோ ஆகிவிட்டது என நினைப்பவர்கள் தாங்கள் ஆண்மை  குறைந்தவர்களோ என அஞ்சி நடுங்குகிறார்கள்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here