Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

214
0
SHARE
ஏமாற்றங்களும், எதிர்பாரா நிகழ்வுகளும் 
பெண்கள் மட்டும் சீர்குலைவது ஏன்?
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டும் ஏன் சீர்குலைந்து விடுகிறார்கள் என நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? பெண்கள் ‘நல்ல சொத்தாகவும்’, கற்பிழந்த பெண்கள் ‘கெட்டுவிட்ட பொருளாகவும்’ கருதப் படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. தங்கள் குடும்ப கவுரவம் பாதிக்கப்பட்டுவிட்டதாக பெற்றோர்களே மகளை குறைகூறும் போக்கும், மற்றவர்கள் வித்தியாசமாகப் பார்க்கும் போக்கும் அந்தப் பெண்ணை தற்கொலைக்குக் கூட தூண்டுகிறது. கவுரவம், பாரம்பரியம் என்பவற்றோடு பெண்ணின் நிலையை தொடர்பு படுத்துவதால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மனச்சிதைவுக்கு ஆளாகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு…
நீங்கள் பெண்ணாக இருந்து பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?
நடந்ததை நினைத்து வாழ்நாளெல்லாம் வீணாக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பீர்களா? அப்படியிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்.
தவறு உங்களுடையது அல்ல. எதிர்பாராமல் நடந்து விட்டது என எடுத்துக்கொண்டால் மனதளவில் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்கலாம். தன்னிடம் அவ்வாறு நடந்து கொண்டவனைப் பற்றி காவல் துறையில் புகார் செய்யலாம்.

தன்னைச் சார்ந்தவர்கள் அல்லது பிறர் துணையுடன் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். சம்பவம் நடந்த 24 அல்லது 48 மணி நேரத்திற்குள் புகார் செய்யவேண்டும். அதுவரை உடைகளை மாற்றாமல், குளித்து பிறப்புறுப்பை சுத்தம் செய்யாமல் இருக்கவேண்டும். அப்போதுதான் கற்பழித்தவரின் பாலியல் திரவங்களை சேகரிக்க முடியும்.
இந்திய சட்டப்படி உடன்பாடில்லாத பெண்ணிடம் ஆணுறுப்பை விரைக்கச்செய்து பெண்ணுறுப்பில் பொருத்தினால் அது பலாத்காரம், பெண்ணுறுப்பில் இதே செயலில் ஈடுபட்டு விந்தைச் செலுத்தினால் அது கற்பழிப்பு.
உங்கள் குடும்பத்தார் உங்களுக்கு ஒத்துழைப்புத் தரும் நிலையிருந்தால், கற்பழித்தவன் உங்களுக்குத் தெரிந்தவனாக இருந்தால் காவல் துறைக்குச் சென்று புகார் செய்வது நல்லது. அவ்வாறு இல்லாதபோது என்ன செய்வது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இந்த மாதிரியான சூழ்நிலை மறுபடி ஏற்படாமல் தடுத்துக்கொள்ளுங்கள்.
காமுகர்களிடமிருந்து தப்பிக்க சில யோசனைகள்
இரவிலாவது, பகலிலாவது தனிவழியே செல்லாதீர்கள். தனியே செல்லும் நபர்களிடம்தான் பாலியல் பலாத்காரம் நடத்தப்படுகிறது. எப்போதும் கூட்டம் இருக்கும்போது செல்வது, கூட்டத்தோடு செல்வது பாதுகாப்பானது.
தனியே செல்லும்போது மனக்கவலையோடு செல்வதை தவிர்த்துவிடுங்கள். இவ்வாறு செல்பவர்களைக் குறிவைத்து அவர்களை வசியப்படுத்துவதுபோலப் பேசி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் அதிகம். எதையும் காட்டிக்கொள்ளாமல் சுறுசுறுப்பாக நடந்துகொள்பவர்களை காமுகர்கள் நெருங்குவது அரிது.

பெரும்பாலான கற்பழிப்பு விவகாரங்கள் வீட்டில்தான் நடக்கின்றன. குடும்பத்தாருக்கு தெரிந்தவர், நண்பர் போன்ற நெருங்கியவர்கள்தான் இந்தச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதை வீட்டில் சொன்னாலும் அவர்கள் நம்புவது கிடையாது அல்லது உங்களையே குறை கூறுவார்கள். ஆகவே, வீட்டில் தனியாக ஓர் ஆணுடன் இருப்பதை எப்போதும் தவிருங்கள்.
எந்த ஆண் மகனிடம் சண்டை போட்டாலும் முதலில் அடித்துப் பேசுவது அல்லது உடல் ரீதியாக மோதுவதை தவிர்த்துவிடுங்கள். இவ்வாறு  நடந்துகொள்ளும்போது அது அவர்களைத் தூண்டி பாலியல் ரீதியாக நடந்துகொள்ள வைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
காதலர்களாக இருந்தாலும்கூட தனியாகச் செல்வது, நெருக்கமாக பேச அனுமதிப்பது போன்ற சூழல்களை ஆண் தனது ஆண்மையை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகக் கருதுவான், பெண் தன்னை காத்துக்கொள்ள முனைவாள். ஆனால் நெருக்கத்தின் காரணமாக தடைசொல்ல முடியாத நிலை ஏற்பட்டு அது கற்பழிப்பாக மாறும்.
இத்தகைய சூழல்களுக்கு இடம்தராமல் தன்னுடைய வரையறைகளை விளக்கமாக கூறிவிடுதல் வேண்டும்.
மனைவியாக இருந்தால்கூட அவளது விருப்பமில்லாமல் பாலுறவுகொள்வதை கற்பழிப்பாகவே இந்திய சட்டம் கருதுகிறது. மனைவியின் மீது தனக்கு எல்லா உரிமையும் உள்ளது எனச் செயல்படுவதுகூட சட்டப்படி செல்லாது என்பதால் வன்முறைக்கு இடமின்றி நடந்துகொள்ள வேண்டும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here