Home Common Health Problems மனஇறுக்கமும், மன உளைச்சலும்:

    மனஇறுக்கமும், மன உளைச்சலும்:

    236
    0
    SHARE

    னோதத்துவ ரீதியான மன இறுக்கமே அல்லது மன அழுத்தமோ இப்போது இதய நோய்க்கு முக்கிய உயிர்கொல்லிக் காரணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மேலும் விஞ்ஞான ரீதியான ஆய்வின் உண்மைகள் குவியக் குவியக் கடந்த 20 ஆண்டுகளில் மிக அதிகமான மனஉளைச்சல் கீழ்க்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
    இரத்த அழுத்தம் உயருதல்
    இதயத்துடிப்பு அதிகரித்தல்
    இரத்தத்தில் கொழுப்பு அதிகமாய்ச் சேருதல்
    இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்தல்
    இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்தல்
    இதய இரத்தக் குழாய்களும், மற்ற இரத்தக் குழாய்களும் சுருங்குதல் அல்லது இறுகுதல்
    இரத்தம் உறைவது அதிகரித்தல்
    அதிகப்படியான கொழுப்பும், கொலஸ்ட்ராலும் இரத்தக் குழாய்களில் படிதல்

    மற்ற உயிர்கொல்லிக் காரணிகள் இல்லாதபோதும் தானாகவே தாக்கத்தை ஏற்படுத்தி இதய நோய்க்குக் காரணமாகும் தன்மை உடையது மன இறுக்கம் என்பதை இவற்றால் அறியலாம். இயல்பான இரத்த அழுத்தம் உடையவர்கள் அதிகப்படியான கொலஸ்ட்ராலோ, அதிக உடல் எதையோ, பரம்பரை இதய நோயோ இல்லாத போதிலும்கூட மன இறுக்கத்தினால், மார்பு இறுக்கத்தினால் அவதிப்படுகின்றனர்.

    மிகப்புதிய விஞ்ஞானக் கருவிகள் இருந்தபோதிலும் மன இறுக்கத்தை அளக்க நம்மிடம் எந்த வழியும் இல்லை என்பதே ஒரு பிரச்சினை ஆகும். அதனை அளவிட்டுச் சொல்ல மில்லிமீட்டர், மில்லிலிட்டர், கிலோகிராம் என்பன போன்ற அளவுச் சொற்கள் நம்மிடம் இல்லை.

    இந்தக் காரணத்தாலேயே நவீன விஞ்ஞானமும், இதய நோய் வல்லுநர்களும் இதய நோய் சம்பந்தப்பட்ட மன இறுக்கத்தைப் பேசுவதே இல்லை. நகரத்தில் வசிப்பவர்கள் கிராமங்களில் வசிப்பவர்களைவிட மூன்று மடங்கு இதய நோய் வரும் வாய்ப்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று இப்போது தெரிய வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக மன உளைச்சலைத் தரும் நகர வாழ்க்கையே ஆகும்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here