Home Common Health Problems இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால்

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால்

196
0
SHARE

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் இதய நோயைத் தோற்றுவிக்கும் உயிர்கொல்லிக் காரணிகளில் முக்கியமான ஒன்றாகும்.முன்பெல்லாம் இதய இரத்தக் குழாய் அடைப்பினை உண்டாக்குவதில் கொலஸ்ட்ரால் மிக முக்கியமான காரணமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஆய்வுகளில் கிடைக்கும் செய்திகள் அதிகமாக வர ஆரம்பித்தவுடன் கொலஸ்ட்ரால் முதல் மூன்று உயிர்கொல்லிக் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு விதமான கொழுப்பின் சிறுசிறு துகள்கள் ஆகும். இந்த மெழுகு போன்ற பொருள் ஒரு சங்கிலியால் ஆன பேட்டி ஆஸிட் ஆகும். இதில் 27 கார்பன் அணுக்கள் உள்ளன. இதன் அமைப்பு மிகச்சிக்கலான வேலைப்பாடு உடையது. இந்த பேட்டி ஆஸிட் 4 வலையங்களாய்ச் சுழற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வளையமும் சைக்ளோபென்ட்டனோ – பெர்ஹைட்ரொ பினான்த்தரீன் வளையம்; ஆகும். இது, மருத்துவ விஞ்ஞானம் அறிந்த வரையில் மிகவும் அலங்காரமான மாலிக்கூல் ஆகும்.

கொலஸ்டராலுக்கு உடலில் மிக முக்கியமான வேலை உண்டு. ஏனெனில் அவை செல் சுவர்களின் ஒரு பகுதியாகவும், நரம்புகளைச் சுற்றியுள்ள பொருள்கள், மூளை செல்கள் ஆகியவைகளின் பகுதிகளாகவும் இருக்கின்றன. இந்த மாலிக்கூல் இல்லை என்றால் உயிர் வாழ்வதென்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். கொலஸ்ட்ரால் உடலுக்கு அவ்வளவு முக்கியத் தேவையான ஒன்றாகும். ஆதலால் உடலுக்குத் தேவையான மிகக்குறைந்த அளவு கொலஸ்ட்ராலைக் கல்லீரல் தயாரிக்கும் தகுதி உடையது.

ஆனால் இந்த மாலிக்கூல் தேவைக்கு அதிகமாக உடலிலோ அல்லது இரத்தத்திலோ இருந்தால் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இதய இரத்தக் குழாய்களில் படிந்து அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதயம் மட்டுமின்றி அதிகப்படியான கொலஸ்ட்ரால் மூளையில் உள்ள இரத்தக் குழாய்களிலும், காலில் உள்ள இரத்தக் குழாய்களிலும், தோலின் அடியிலும் கண்ணுக்குக் கீழும் படிந்து பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

கொலஸ்ட்ரால் தனித்துகள்களாக இரத்தத்தில் சுற்றி வருவது, மிகவும் ஆபத்தானது. அது மற்ற புரதங்களோடு இணைந்து லிப்போ புரோட்டீன் என்னும் பொருள்களாக மாறி இரத்தத்தில் எடுத்துச்செல்லப்படுகிறது. இரத்தத்தில் தனியே சுற்றி வரும் கொலஸ்டராலின் அளவுக்கும், அவை இதய இரத்தக் குழாய்களில் படியும் வேகத்திற்கும் ஒரு வலுவான தொடர்பு இருக்கின்றது.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here