Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

80
0
SHARE
கருத்தடை முறைகள் 
மருத்துவப் புள்ளிவிவர கணிப்பின் படி கருக்கலைப்பு மேற்கொள்ளும் பெரும்பான்மையான பெண்கள் திருமணம் ஆகாத, டீன் ஏஜ் வயதில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாறிவரும் சூழலில் ஆண்-பெண் இருவரும் சந்தித்துப் பழகுகின்ற, காதலிக்கின்ற, பாலுறவு கொள்கின்ற பல நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் பரவலாக நடக்கின்றன. பாலுறவுகொள்ளும் வாய்ப்புள்ள இந்தச் சூழலில், பெரும்பாலும் ஆண்கள் பாதுகாப்பாக நடந்துகொள்ளா விட்டாலும் தப்பித்துக்கொள்கிறார்கள். காரணம், அவர்களைப் பொருத்த வரையில் இதுவொரு நிகழ்வு. கருத்தரிப்பு போன்றவை அவர்களுக்கு ஏற்படுவதில்லை.
ஆனால், பெண்கள் மட்டுமே கருத்தரித்தல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வெளியே தெரிந்தால் விவகாரம், அது முற்றினால் விபரீதம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பாலுறவு என்பது அவர்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஒன்றாக அமைந்துவிடுகிறது.

இதனால்தான் எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் ஆண் அவசரப்படும்போது பெண் அதை நிராகரித்துவிடுகிறாள். ஓர் உறுதியளிக்கப்பட்ட பிறகு, நம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் பாலுறவு போன்ற சூழல்களுக்கு இணங்குகிறாள்.
ஏமாற்றப்பட்ட பெண் காதலனால், குடும்பத்தாலும் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையுடன் வீதிக்கு வருவதும், குழந்தையைப் பெற்று அனாதையாக வீசிவிட்டுப் போவதும் பரவலாக நடக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் கணவன் வேண்டாமென முடிவுசெய்வதும், தனியாக குழந்தையைப் பெற்று வளர்ப்பதும் சாதாரணமாக இருப்பதால் ஏமாற்றப்படுதல் என்பது அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
தேவையற்ற கருத்தரிப்பு நிகழ்வதை தடுப்பதற்காகவும், பாலுறவின் மூலம் நோய்கள் வருவதை தவிர்ப்பதற்காகவும் தற்போது நிறைய கருத்தடை சாதனங்கள், பாதுகாப்பு உறை போன்றவை வந்துவிட்டன.

கருத்தடை சாதனங்களில் ஆணுறை, பெண்ணுறை போன்றவை உள்ளன. இச்சாதனங்கள் மிகவும் மெல்லியவை என்பதால் மென்மையாக பயன்படுத்தாவிட்டால் முழு அளவிலான பாதுகாப்பு கிடைக்குமென உறுதியாகக் கூற இயலாது.
ஆணுறைகள் 
பாலுறவுக்கு முன்பு ஆணுறுப்பில் பொருத்திக் கொள்ள வசதியாக ரப்பரால் ஆன மெல்லிய உறை இது.இதனால் பக்கவிளைவுகள் கிடையாது. மருத்துவரின் ஆலோசனை தேவையிருக்காது, கடைகளில் கிடைக்கின்றன. ஆணுறையின் மீது வாசலைன் போன்ற பெட்ரோலிய ஜெல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் ஆணுறை சிதைந்துவிடும். ஒரு பயன்பாட்டுக்கு பிறகு அதைத் தூக்கியெறிந்துவிட வேண்டும். ஆண்களுக்கு உள்ள ஒரே பாதுகாப்பு சாதனம் இது மட்டுமே.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here