Home Common Health Problems கர்ப்பிணியின் வயிற்றில் 4.5 கிலோ கட்டி அகற்றி சாதனை

கர்ப்பிணியின் வயிற்றில் 4.5 கிலோ கட்டி அகற்றி சாதனை

188
0
SHARE
வடபழனி ஆகாஷ் மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் 4.5 கிலோ கட்டி அகற்றி சாதனை

வடபழனி  நூறடி  சாலையில்  உள்ள  ஆகாஷ்  குழந்தையின்மை  சிகிச்சை  மையத்தின்
இயக்குநர்களான  டாக்டர் டி.காமராஜ்  மற்றும்  ஜெயராணி  காமராஜ்  ஆகியோர்  நேற்று
(ஜூலை 30) நிருபரிடம்  கூறியதாவது .
அம்பத்தூரை சேர்ந்த  பவானி வயது (26 என்பவர்  5 மாத  கர்ப்பமான  நிலையில் , ஆகாஷ்
மருத்துவமனைக்கு  வந்தார். பரிசோதனையில்  அவரது  வயிற்றில்  குழந்தையுடன்  கட்டியும்  வளர்வது  கண்டுபிடிக்க  பட்டது . அதை  அகற்றினால்  தாய்க்கும்  குழந்தைக்கும்  ஆபத்து  ஏற்படும்  கருக்கலைப்பு  செய்தாலும்  ஆபத்து  ஏற்படும் .இதனால்  பவானியை  மருத்துவமனையில்  வைத்து , தீவிர சிகிச்சை அளித்தோம் .
நேற்று  முன்தினம்  பவானிக்கு  பெண்  குழந்தை  பிறந்தது . அவரது  வயிற்றில்  வளர்ந்த  4.5 கிலோ எடை  கொண்ட  முத்துப்பிள்ளை  எனும்  கட்டியை  அகற்றினோம் . உலகிலேயே  முதன் முதலாக  பெண்ணின்  வயிற்றில்  4.5 கிலோ  கட்டி  இருந்தும் குழந்தை  நலமுடன்  பிறந்தது  இங்கு தான் .
பொதுவாக  பெண்களுக்கு  மாத  விலக்கு  நிற்பதையும்  வயிறு  பெரிதாவதையும்  வைத்துதான் கர்பபத்தை  உறுதி  செய்வார்கள் . கர்ப்பப்பையில்  குழந்தைக்கு  பதிலாக கட்டியும்  வளரும் . கட்டி  முத்துபோல்  உள்ளதால்  முத்துப்பிள்ளை  கர்ப்பம்  என்பார்கள் . ஆனால்  கர்ப்பத்திற்கான  அறிகுறிகளை  ஏற்படுத்தும் .
ஒரு  சிலருக்கு , கட்டி  மட்டும்  வளரும். மிக  சிலருக்கு  குழந்தையுடன்  கட்டி  வளரும் . இதை  கருக்கலைப்பு செய்து  விடுவார்கள்.அப்போதுதான்  தாய்க்கு  ஆபத்து  ஏற்படாது . இதுபோல் பல  பெண்களின்  கர்ப்பப்பையில்  கட்டியை  அகற்றினோம். பவானி  தனது  வயிற்றில் குழந்தையுடன்  10 கிலோ  எடையை  சுமர்ந்துள்ளார்.
இவ்வாறு  டாக்டர்கள்  தெரிவித்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here