Home Common Health Problems பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் சைக்கோஸிஸ்க்கு என்ன செய்ய வேண்டும்?

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் சைக்கோஸிஸ்க்கு என்ன செய்ய வேண்டும்?

103
0
SHARE

சில நாட்களுக்குத் தாயை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.  அருகில் உள்ள மனநல மருத்துவமனையில் தாயைக் காட்டி சிகிச்சை அளிக்க வேண்டும்.

நோயைக் கட்டுக்குள் கொண்டுவர மனநோய் ஏத்திப்பு மருந்துகளை அளிக்கலாம்.  ஒரு நாளைக்கு ஒரு முறை எந்த மருந்துகளை பயன்படுத்தலாம்.  இரவில் தூக்க மாத்திரைகளை அளிப்பது, தாய் போதுமான ஓய்வைப் பெற உதவும்.

மனநோய் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக்கொண்டால் குழந்தைக்குத் தாய்ப்பால் தரக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  தாய் முழுவதுமாக குணமடைந்து இயல்பான நிலைக்கு திரும்பும் வரை குழந்தையை யாராவது பார்த்துக்கொள்ள வேண்டும்.

தாய் முழுமையான ஓய்வு எடுக்கவும் விரும்பும்போது குழந்தை அருகில் இருக்கவும் அனுமதிக்க வேண்டும்.  மயானத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால் தாயின் கடமைகளை செய்ய கற்றுக்கொடுங்கள்.

அதன் பிறகு தொடர்ந்து ஆறு வாரத்துக்குத் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும்.

எப்போது மருத்துவரிடம் பரிந்துரை செய்ய வேண்டும்?

குழந்தைக்குக் கேடு விளைவிக்க முயன்றதாகத் தெரியவந்தால்

அறிவுத்திறனில் ஏதாவது பிழைகள் இருந்தால்

குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் பட்சத்தில் மற்றும்குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் ஆபத்து கூடுதலாக இருக்கும் பட்சத்தில்

நாம் என்ன செய்ய வேண்டும்?

தாய் முழுமையாகக் குணமடையும் வரையில் தொடர்ந்து போய்ப் பார்க்கவும். சிகிச்சைக்காகத் தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், மருந்தை நிறுத்தும்வரைகுறைந்தது இரண்டு வாரத்துக்கு ஒரு முறையாவது சென்று நலமறிந்து வர வேண்டும்.

இன்னொரு குழந்தை பெற்றெடுக்கும் சூழ்நிலையில் இருந்தால், அந்தப் பெண்ணின்மனநலத்தைக் கண்காணித்து வர வேண்டும்.  பிரசவத்திற்கு பிறகான மனநலப்பிரச்சனைகள் அடுத்தடுத்தப் பிரசவத்துக்குப் பின்னரும் தொடரலாம்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here