Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

107
0
SHARE

கருத்தடை முறைகள் 

கர்ப்பம் தரித்துவிட்டால் என்ன செய்வது?

 

ரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. குழந்தை பெறுதல் மற்றும் கருக்கலைப்பு செய்தல். இந்த இரண்டுமே மனம் மற்றும் உடல் அளவில் பாதிப்பை உண்டாக்கக்கூடியவை.

கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பினால் முதலில் தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணரை அணுகவேண்டும். முதல் மூன்று மாத காலத்திற்குள் கருக்கலைப்பு செய்வது எளிது. இவ்வாறு கருக்கலைப்பு செய்யும் முறையை ‘டி அண்ட் சி’ அல்லது ‘டைலேஷன் அண்ட் கியூரிடேஜ்’ என்கிறார்கள். இதற்கு கருப்பை திசுச் சுரண்டல் என்று பொருள். கருப்பை வாய்ப்பகுதியை மெதுவாக அகலமாக்கி, அதன் வழியே கருப்பையின் சுவர் முழுவதையும் கருவோடு சேர்த்து சுரண்டி வெளியேற்றுவதாகும். சக்ஷன் என்ற முறையில் கருப்பையிலுள்ள கருவை உறிஞ்சி அகற்றும் முறையும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

மூன்று மாதத்திற்குப் பிறகு கருக்கலைப்பு மேற்கொள்ள முயற்சிப்பது கடினமானது. சேலைன் இண்டக்ஷன் என்ற முறையில் உப்பு நீரை கருப்பைக்குள் செலுத்தி பிரசவ வலியைத் தூண்டி குழந்தையை பிரசவிக்கச் செய்யலாம். பெரும்பாலும் குழந்தை இறந்து பிறக்கும்.

கருச்சிதைவு மேற்கொள்ளும் முன்பு இரத்த வகையை பரிசோதித்துக் கொள்வது அவசியம். பெண்ணின் இரத்தம் ஆர்எச் நெகடிவ் ஆகவும், ஆணின் இரத்தம் ஆர்எச் பாசிடிவ் ஆகவும் இருந்தால், கருச்சிதைவுக்குப் பிறகு ஆர்எச் பாசிடிவ் இரத்தத்திற்கு எதிரான நோயூக்கிகள் உருவாகிவிடும். எதிர்காலத்தில் திருமணமாகி, தாயாகும்போது தந்தைக்கு ஆர்எச் பாசிடிவ் இரத்தம் இருந்தால் கருத்தரித்த குழந்தைக்கு பிறவி நோய்கள் ஏற்படும்; குழந்தை இறந்துவிடுவதும் உண்டு. இவற்றைத் தவிர்க்க முன்னதாகவே, கருக்கலைப்பின்போதே தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

கருக்கலைப்பு செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவைப் பொறுத்தவரையில் துணிச்சல் இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள நேர்ந்தால் அனாதையாக்கிவிடாமல், குழந்தைப் பேறற்ற தம்பதிகளுக்கு தத்துக்கொடுத்து வளர்க்கச் செய்யலாம்.

டீன் ஏஜ் பருவத்தில் உணர்ச்சிகளை முறைப்படுத்தா விட்டால் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதை மனதில் கொண்டு நடந்துகொள்ள வேண்டும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here