Home question and answer என்  கேள்விக்கு  என்ன  பதில்  பாகம் 64

என்  கேள்விக்கு  என்ன  பதில்  பாகம் 64

218
0
SHARE

கேள்வி ?

பலவகை வடிவங்களில்  ஆணுறை  வெளியிடுகிறார்கள் . விற்பனை  செய்கிறார்கள் . கூடுதல்  சுகம்  அளிக்கிறது  என்றும்  கூறுகிறார்கள் . பல  வடிவங்களில்  இருப்பதால்  கூடுதல்  சுகம்  அளிக்கிறது  என்றும்  கூறுகிறார்கள் . பல  வடிவங்களில்  இருப்பதால்  கூடுதல் சுகம் கிடைக்குமா ?

பதில் :

இவையெல்லாம்  வணிக  நுட்பங்கள். முதன்முதலில்  நமது  நாட்டில்  குழந்தை  பிறப்பை  தடுக்க ஆணுறை  வழங்க பட்டது . ஆனால் , அதை  யாரும்  வாங்கி  உபயோகிக்கவில்லை. இன்றும்  அதே
நிலைதான் .

பிறகு , செக்ஸினால் பரவும் நோய்களை  ஆணுறை  தடுக்கும்னு  என்ற  போதும்  பலர்  இதை  பயனப்டுத்த வில்லை . பயன்படுத்துவதால்  இன்பம்  குறைவு  என கருதினர். எய்ட்ஸ் வந்த பிறகு படித்தவர்களிடம்  பெரும்  மாற்றம்  ஏற்பட்டுள்ளது . ஆயினும்  இன்றும்  பெரும்பாலோர்  ஆணுறையை  பயன்படுத்துவதில்லை.

எனவே , ஆணுறையை  பற்றிய  கண்ணோட்டத்தை  மாற்றினால்தான் . தங்கள்  சரக்கு  விற்கும்
எனபதால்  உலகம்  முழுவதும்  ஆணுறை  தயாரிப்பாளர்கள் , செக்சில்  இன்பத்தை  ஆணுறை  அதிகரிக்கும்  எனக்கூறி பலவித  மாற்றங்களை  செய்கிறார்கள் .

பல  வன்ணங்களில் , வாசனையாக , முள்ளு  முள்ளாக , வரி வரியாக , ஸ்பைரலாக வளைவாக , பாலுறவுக்கான  உயவு  பொருள்களுடன் , விரல்களில் மாட்டிகொண்டு  தூண்டும்  ஆணுறை , ஹனிமூன் பேக்  என  பல  வகைகளில்  தயாரித்து  விளம்பரம்  செய்து  மக்களின்  ஆர்வத்தை  தூண்டுகிறிர்ர்கள் .

இப்போது  எல்லோருடைய  ஆர்வத்தையும்  இது  கவர்ந்திருக்கிறது . இவற்றால்  நீங்கள்  எதிர்பார்க்கும்  அளவுக்கு  பெரிய  வேறுபாடு  இல்லை . ஆனால் , இவ்வாறு  ஆர்வத்தை  தூண்டுவதால்  சமூகத்துக்கு  நன்மைதானே.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here