Home question and answer என்  கேள்விக்கு  என்ன  பதில்  – பாகம் 65

என்  கேள்விக்கு  என்ன  பதில்  – பாகம் 65

252
0
SHARE

கேள்வி ?

ன் வயது 37. ஒன்பது  ஆண்டுகளுக்கு  முன் வீட்டில்  சண்டை  போட்டுவிட்டு  மும்பை சென்றேன்.  அங்கு  பணத்துக்காக  நான்  குடும்ப  கட்டுப்பாடு  செய்து  கொண்டேன் . ஆனால் , தற்போது  திருமணமாகி  குழந்தைகள்  இல்லாமல்  தவிக்கிறேன். ஒரு  முறை  தற்கொலை  செய்யக்கூட முயன்றேன். மீண்டும்  குழந்தை  பிறப்பதற்கு  ஏதாவது  வழி  இருக்கிறதா ? அதற்கு  என்ன  மாதிரியான  மருந்துகளை  எடுத்து  கொள்ள  வேண்டும் .

பதில் :

திருமணத்துக்கு  முன்  குடும்ப  கட்டுப்பாடு  அறுவை  சிகிச்சை  செய்து  கொண்டு , மனைவியிடம்கூட  சொல்ல  முடியாமல்  பலர்  குழம்பி  தவிக்கின்றனர் .  உங்களுக்கு  விந்து  குழாய்  அறுவை  மூலம்  மீண்டும்  இணைந்து  குழந்தை  பெற  வைக்க  முடியும் . தவிர , விந்துப்பையிலிருந்து  விந்தணுக்களை  எடுத்து  நேரிடையாக  உங்கள்  மனைவியின்  கர்ப்ப  பையில்  போட்டு  கருத்தரிக்க  செய்ய  முடியும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here