Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

84
0
SHARE

பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் 

விடலைப்பருவ பரிணாமங்கள் 

நாம் சாதாரணமாக, இது குழந்தைதானே, இதற்கு என்ன தெரியப்போகிறது என நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் அந்தக் குழந்தைக்குள்ளும் ஒரு மனம், உள்ளுணர்வு போன்றவையெல்லாம் இருக்கிறது அல்லவா?

இதை பெரும்பாலான பெற்றோர் புரிந்துகொள்வதே கிடையாது. இதனால்தான் சிறுவயதிலிருந்து விடலைப் பருவத்திற்குள் நுழைகிற பலர் இந்த வயதில் எப்படி நடந்து கொள்வது, என்ன செய்வது என்பன போன்ற பலவகை விஷயங்கள், விவரங்கள் தெரியாதவர்களாகக் குழம்பிப் போகிறார்கள்.

தங்களுக்கு விளக்கம் சொல்லும் வாத்தியார்களாக அவர்கள் தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள், தங்களோடு மிக நெருக்கமாகப் பழகுபவர்கள் ஆகியோரைத் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் கூறும் கருத்துக்களை உண்மைகள் என நம்பி ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவை தவறானவை என்பதையும், தகாதவை என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்வதில்லை என்பதை நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு தந்தையாக இருந்து இதைப் போய் எப்படி என் மகனுக்குச் சொல்வது என்ற தயக்கம், ஒரு தாயாக இருந்து இதை மகளுக்குச் சொல்லிக்கொடுத்தால் அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள் என்ற தயக்கம் உங்கள் பிள்ளையை தவறான பாதைக்கு வழி நடத்திச் சென்றுவிடும்.

ஆகவே, விடலைப் பருவத்தில் நுழைய ஆரம்பித்தது முதல் அவர்கள் வளர்ந்து திருமணம் முடித்து தாம்பத்திய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தபிறகும்கூட உங்கள் ஆலோசனைகளை சொல்லிக்கொடுங்கள்.

விடலைப் பிள்ளைக்கு என்னென்ன விஷயங்களை கற்றுத்தரவேண்டும், விளக்கவேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமிருக்காது. உங்கள் அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றை எடுத்துச் சொன்னாலே போதுமானது.

நீங்கள் உங்கள் பிள்ளையை துவக்கத்திலிருந்தே நல்ல பிள்ளையாக, நேர்த்தியாக வளர்க்க ஆசைப்பட்டால், உடல் சார்ந்த, மனம் சார்ந்த, சுற்றுப்புறம் சார்ந்த தகவல்களை அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போதே கற்றுக்கொடுங்கள். விடலைப்பிள்ளைகளுக்கு சொல்லிப் புரியவைப்பதை விட சிறுவர்களுக்கு புரியவைப்பது சுலபமானது. அவர்கள் அதை ஆவலாக கவனிப்பார்கள். விளக்கம் கேட்பார்கள். எதிர்த்து நடக்க மாட்டார்கள். அந்தப் பருவத்தில் சொல்லித்தருவது சுலபம். வளர்ந்த பிறகு அவர்கள் உங்கள் ஆலோசனைக்கு செவிகொடுப்பது குறைவாகத்தான் இருக்கும்.

முதலில் குழந்தைகள் எந்தெந்த வழிகளில் வளர்ச்சி அடைகிறார்கள், எப்படி முதிர்ச்சியடைகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here