Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

87
0
SHARE

பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் 

வளர்ச்சிகள் 

சிறுவயது முதல் பெரியோராகும்வரை ஒவ்வொருவரும் நான்கு விதமான வளர்ச்சி நிலைகளுக்குச் செல்கிறார்கள்.

உடலியல் ரீதியான வளர்ச்சி

பாலியல் ரீதியான வளர்ச்சி

மனதளவிலான வளர்ச்சி, மற்றும்

உளவியல் ரீதியான வளர்ச்சி

உடல் வளர்ச்சியானது ஒருவரது உடலின் பரிணாமங்கள் மாறுவதற்குக் காரணமாகிறது. பாலியல் ரீதியான வளர்ச்சி ஒருவர் பாலுறவு கொள்வதற்கான திறனை உருவாக்குகிறது. மனதளவிலான வளர்ச்சி ஒருவர் தன்னைப் புரிந்துகொண்டு தனக்குள் இருக்கும் திறனை உணர்ந்து வாழ்க்கையை அனுபவிக்க உதவுகிறது. உளவியல் ரீதியான வளர்ச்சியோ, ஒரு குழந்தையை சுதந்திரமான விடலையாக்கி, ஆளுமைப் பண்பால் முடிசூட்டுகிறது. அதாவது அறிவு, திறமை, சுயசார்பு, எதையும் செய்யும் ஆற்றல் மற்றும் உணர்வுகள், வாழ்க்கை நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவற்றை உண்டாக்கித்தருகிறது.

உளவியல் சார்ந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே தான் யார் என்பதை குழந்தையானது அடையாளம் கண்டுகொண்டு அதற்கேற்ப தன்னை உருவாக்கிக்கொள்கிறது. தனது உணர்ச்சிகள், பொறுப்புகள், நடத்தைகள், பண்பாடு, தனது பாலினத்திற்கு ஏற்ற தன்மைகள் ஆகியவற்றை அறிந்து கொள்கிறது.

உதாரணமாக கூறவேண்டுமானால்,

குழந்தையானது பிறவியிலேயே தனது உடல் மற்றும் உள்ளம் சார்ந்த தனித்தன்மைகளைப் பெற்றுவிடுகிறது.

இரண்டு மூன்று வயதிலேயே பெற்றோரைப் பார்த்து தான் யாரைப் போல? அம்மாவைப் போலவா? அப்பாவைப் போலவா என அவர்களது உடற்கூறுகளை உற்றுநோக்கி தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடக்க ஆரம்பிக்கிறது.

முதல் ஐந்தாண்டில் பாலினப் பண்புகள் எதிர்பாலினக் கவர்ச்சியாலோ, அல்லது பாலுறுப்புகளின் தூண்டுதலாலோ ஏற்படாது; அடுத்தவரோடு தொடர்புகொள்ளவேண்டும் (காண்டாக்ட்) என்ற விருப்பத்தால் ஏற்படும். பெற்றோரில் யார் குழந்தையிடம் அதிகமாக நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களின் அரவணைப்பில் அது ஒருவித இன்பம் காணும்.

நான்கு அல்லது ஐந்து வயதாகும் போது தான் யாரைப் போல உள்ளோம், தனக்குள்ள பொறுப்புகள் என்ன என்பதை உணர்ந்து அப்பாவைப் போலவோ, அம்மாவைப் போலவோ நடந்துகொள்ள ஆரம்பிக்கும்.

பெண் குழந்தை அம்மாவைப்போல சமைக்க வேண்டும், குழந்தைகளை அரவணைக்க வேண்டும் என்பன போன்ற உணர்வுகளையும், ஆண் குழந்தை அப்பாவைப் போல நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வுகளையும் வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில் பெற்றோர் பிள்ளைகளோடு வைத்துக்கொள்ளும் நெருக்கம், அவர்களிடமும், பிறரிடமும் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து குழந்தைகளின் நடத்தை உருவாக்கப்படுகிறது. இதனால்தான் தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை என்று சொன்னார்கள்.

ஒரு குழந்தை சிறுவனாகவோ, சிறுமியாகவோ ஆகும் போது இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள  ஆரம்பிக்கிறது. தனக்குள்ள சமூகக் கடமைகள், சமூகத்தில் விலக்கப்பட்ட விஷயங்கள் ஆகிய அனைத்துமே அதற்குத் தெரியவருகிறது.

இந்த இடத்தில் ஒரு சிறிய விவரத்தை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். அது குழந்தை வளர்ப்பு.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here