Home Teen Age டீன் ஏஜ் 

டீன் ஏஜ் 

186
0
SHARE

பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் 

குழந்தை வளர்ப்பு 

 

குழந்தைக்கு என்னவிதமான ஊட்டச்சத்துகள் தர வேண்டும். தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்பன போன்ற விவரங்களை நாங்கள் இங்கே கூறப்போவதில்லை. குழந்தைக்கு என்ன விஷயங்களையெல்லாம் கற்றுத் தந்து அவர்களை முறைப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி கூறப்போகிறோம். உதாரணமாக,

குழந்தை ஜட்டி போடாமல் இருந்தால், ஷேம்… ஷேம்… பப்பி ஷேம்.. என கேலி செய்து ஜட்டி போடவைக்கிறோம்.

ஜட்டி போடாமல் இருக்கக்கூடாது, தப்பு எனக் கற்றுத் தருகிறோம். அது ஏன் தப்பு என்பதை அந்தக் குழந்தைக்கு நாம் புரியவைப்பதில்லை; குழந்தையும் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. அதை எப்போது புரியவைக்கிறோம் என்றால் அந்தக் குழந்தை ஆறேழு வயதாகும்போது பிறப்பு உறுப்பை வெளியே காட்டுவது அசிங்கம், அதை ஆண்கள் யாரும் பார்க்கக்கூடாது. யாரையும் அந்த இடத்தில் தொட அனுமதிக்கக்கூடாது. அப்படி தொட்டால் உடனே அம்மாவிடம் சொல்லிவிட வேண்டும் என்றெல்லாம் சொல்லித் தருகிறோம். இன்னும் கொஞ்சம் வயதானதும், பிறப்புறுப்பை ஆண் தவறாகப் பயன்படுத்தினால் அது தவறான விளைவுகளை உண்டாக்கும் என்பதை தாயாரோ, மற்றவர்களோ சொல்லக்கேட்டு அந்தக் குழந்தை தெரிந்துகொள்கிறது.

பெற்றோரின் பங்களிப்பு 

குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்புதான் முதன்மையாக இருக்கும்; இருக்கவேண்டும். குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோரே முன்மாதிரி; அதாவது ரோல் மாடல். ஆகவே பிள்ளைகள் முன்னிலையில் கண்ணியமானவர்களாக, பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும்.

இன்றைய குழந்தை நாளைய மனிதன் என்பார்கள்; கூடவே, தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் எனவும் கூறி வைத்தார்கள். இன்றைய குழந்தை நாளைய மனிதனாகும் போது, தொட்டிலில் தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் தன் இறுதிக் காலம்வரை கூடவே வருகிறது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here